திசம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 52: | வரிசை 52: | ||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
*விடுதலை நாள் ([[லிபியா]]) |
*விடுதலை நாள் ([[லிபியா]]) |
||
*தேசிய நுகர்வோர் உரிமை நாள் |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
08:33, 24 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
- 1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
- 1715 - சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.
- 1777 - கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
- 1851 - வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
- 1906 - ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1924 - அல்பேனியா குடியரசாகியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.
- 1951 - லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.
- 1953 - நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.
- 1954 - லாவோஸ் விடுதலை பெற்றது.
- 1966 - தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
- 1968 - மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
- 1974 - ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.
- 1979 - ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 2005 - யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புகள்
- 1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)
- 1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)
- 1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)
- 1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)
- 1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)
- 1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
- 1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்
- 1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)
- 1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்
- 1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
- 1959 – அனில் கபூர், இந்திய நடிகர்
- 1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி
- 1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்
இறப்புகள்
- 1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)
- 1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
- 1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
- 1987 – ம. கோ. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)
- 1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)
- 2002 – வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)
- 2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
- 2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
- 2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லிபியா)
- தேசிய நுகர்வோர் உரிமை நாள்