யோசப் பரராஜசிங்கம் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்கள் டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராவும் இருந்தவர்.

யோசப் பரராஜசிங்கம்

"மாமனிதர்" பட்டம்[தொகு]

இறப்பின்பின் யோசப் பராஜசிங்கத்துக்கு விடுதலைப் புலிகளால் "மாமனிதர்" பட்டம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் அஞ்சலி[தொகு]

அவரது உடல் கிளிநொச்சிக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிரபாகரன் உட்பட முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள், மலையக தமிழர் தலைவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]