பவேரியாவின் எலிசபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவேரியாவின் எலிசபெத்
Elisabeth of Bavaria
ஆஸ்திரியாவின் அரசி; ஹங்கேரியின் அரசி
Erzsebet kiralyne photo 1867.jpg
Consort ஏப்ரல் 24, 1854 - செப்டம்பர் 10, 1898
Consort to பிரான்ஸ் ஜோசப் I
பிள்ளைகள்
சோஃபி,
கிசெலா
ருடோல்ஃப்
மரீ-வலேரி
பட்டங்கள்
HI&RM அரசி-பேரரசி
பவாரியாவின் இளவரசி எலிசபெத்
வேந்திய மரபு ஹாப்ஸ்பேர்க் மாளிகை
விட்டெல்ஸ்பாக் மாளிகை
தந்தை மக்சிமிலியன் ஜோசப்
தாய் லுடோவிக்கா
பிறப்பு திசம்பர் 24, 1837(1837-12-24)
மியூனிக், பவேரியா
இறப்பு செப்டம்பர் 10, 1898(1898-09-10) (அகவை 60)
ஜெனீவா

எலிசபெத் அமலி யூஜினி (Elisabeth Amalie Eugenie, டிசம்பர் 24 1837செப்டம்பர் 10, 1898) அல்லது பவேரியாவின் எலிசபெத் ஆஸ்திரியா, மற்றும் ஹங்கேரியின் அரசியாக இருந்தவர். ஆஸ்திரியப் பேரரசன் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை மணந்தவர். தாயார் லுடோவிக்கா பவேரியாவின் இளவரசியாவார். 1898, செப்டம்பர் 10 இல் சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் வைத்து "லுயிஜி லூச்சினி" என்ற தீவிரவாதியினால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்[1].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

பவேரியாவின் மியூனிக் நகரில் பிறந்த எலிசபெத் தனது தாய்வழி உறவினனான ஆஸ்திரியாவின் முதலாம் பிரான்ஸ் ஜோசப்பை ஏப்ரல் 24, 1854 இல் மணந்து ஆஸ்திரியாவின் அரசியானாள். 1867 ஆம் ஆண்டில் ஹங்கேரி ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்ட போது இருவரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசனாகவும், அரசியாகவும் முடி சூடினர். அக்காலத்தில் மிகவும் அழகானவள் எனப் பெயரெடுத்திருந்த எலிசபெத், தனது உடலழகைப் பேணுவதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டாள்.

1889 ஆம் ஆண்டில் இவர்களது ஒரே மகனும் அரசு வாரிசுமான 30-அகவையுடைய "ருடோல்ஃப்" அவனது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டான். இதனை அடுத்து எலிச்சபெத் தனது கடைசிக் காலத்தில் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவதில் தனது காலத்தைக் கழித்தாள். "மிராமார்" என்ற தனது அரசுக் கப்பலில் மத்தியதரைப் பகுதிகள், மற்றும் போர்த்துக்கல், ஸ்பெயின், மொரோக்கோ, அல்ஜீரியா, மால்ட்டா, கிரேக்கம், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளுக்கும் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டாள். வேறு எந்த ஐரோப்பிய அரசிகளும் இப்படியான நாடுகளுக்கு அக்காலத்தில் சென்றிருக்கவில்லை.

படுகொலை[தொகு]

செப்டம்பர் 10, 1898 இல் எலிசபெத் தனது 60வது அகவையில் ஜெனீவாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது வைத்து "லுயிஜி லூச்சினி" என்பவனால் குத்திக் கொலை செய்யப்பட்டாள். அவளது கொலையாளி ஜெனீவாவில் தங்கியிருந்த இளவரசன் ஒருவனைக் கொல்லவே அங்கு காத்திருந்ததாகவும், அவனைக் காணாமையினால் அங்கு அந்நேரம் வந்திருந்த எலிசபெத்தைக் குத்திக் கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அராசியின் உடல் வியென்னாவின் நக மையத்தில் உள்ள அரச அடக்கத்தலத்தில் அடக்காம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]