டோஷிரோ மிபூன்
டோஷிரோ மிஃபூன் 三船 敏郎 | ||||
---|---|---|---|---|
![]() 1964இல் மிஃபூன் | ||||
பிறப்பு | ||||
இறப்பு | 24 திசம்பர் 1997 | (அகவை 77)|||
தொழில் | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர் | |||
நடிப்புக் காலம் | 1940 - 1979 | |||
துணைவர் | சச்சிகோ கிடாகவா (திருமணம் 1950, மறைவு 1995) | |||
|
டோஷிரோ மிஃபூன் (Toshiro Mifune) (ஜப்பானிய மொழி 三船 敏郎 குரோசாவா அகிரா, 1920 - 1997) உலகப் புகழ்பெற்ற ஜப்பானியக் கலைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். 1947 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.1995 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.
ஹிரோஷி இனாகாகி இயக்கிய சமுராய் முவ்வரிசை (1954–1956) திரைப்படத்தில் மியாமோட்டோ முஸாஷியை என்ற வீரராக மிஃபூன் நடித்தார்.[1]
டிசம்பர் 24, 1997 அன்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது வாழ்க்கை மற்றும் அவரது திரைப்படங்களைப் பற்றிய 'மிஃபூன்: தி லாஸ்ட் சாமுராய்’ (2015) என்ற சிறப்பு நீள ஆவணப்படம் 1999ம் ஆண்டு வெளியானது.
பிறப்பு & இளமை
[தொகு]
ஏப்ரல் 1, 1920 அன்று ஜப்பான் ஆக்கிரமித்த சாண்டோங்கில் (இன்றைய கிங்டாவோ, சீனா) உள்ள சீட்டோவில் டோகுசோ மற்றும் சென் மிஃபுனே ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் டோஷிரோ மிஃபூன்.
அவரது தந்தை டோகுசோ ஒரு வர்த்தக வணிகர் மற்றும் புகைப்படக் கலைஞர். அவரது தாயார் சென் ஒரு உயர்மட்ட சாமுராய் அதிகாரியான ஹடமோட்டோவின் மகள். மிஃபூன் தனது பெற்றோர் மற்றும் இரண்டு இளைய உடன்பிறப்புகளுடன் ஃபெங்டியனின் டாலியனில் வளர்ந்தார்.
ஒரு ஜப்பானிய குடிமகனாக, தனது வாழ்வின் முதல் 19 ஆண்டுகளை சீனாவில் கழித்த பின், இம்பீரியல் ஜப்பானிய இராணுவ விமானப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது வான்வழி புகைப்படம் எடுத்தல் பிரிவில் அவர் பணியாற்றினார்.
விருதுகள்
[தொகு]
180-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், இயக்குநர் அகிரா குரோசாவாவுடன் அவர் பணிபுரிந்த16 திரைப்படங்களில் மிஃபூன் மிகவும் பிரபலமானார். அதில் குறிப்பிட்ட திரைப்படங்கள்:
ரஷோமொன் (1950), இதற்காக மிஃபுனே வெனிஸ் திரைப்பட விழாவில் சான் மார்கோ கோல்டன் லயன் பரிசை வென்றார்,
செவன் சாமுராய் (1954), த்ரோன் ஆஃப் ப்ளட் (1957), த ஹிடன் ஃபோர்டிரெஸ் (1958), மற்றும் யோஜிம்போ (1961), இதற்காக மிஃபுனே வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான வோல்பி கோப்பையை வென்றார் மற்றும் ப்ளூ ரிப்பன் விருதுகளில் சிறந்த நடிகராக அங்கீகரிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McDonald, Keiko I. (2005-11-30), "4. Period Film Par Excellence: Hiroshi Inagaki's Samurai Trilogy (1954–1956)", Reading a Japanese Film: Cinema in Context (in ஆங்கிலம்), University of Hawaii Press: 66–92, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9780824840372-007/html?lang=en, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-4037-2, பார்க்கப்பட்ட நாள் 2025-01-17