சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரோஷ் கிருஷ்ணா
Suresh Krishna
பிறப்புதிசம்பர் 24, 1936(1936-12-24)
மதுரை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விஇளம் அறிவியல்
முதுகலை இலக்கியம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை கிறித்துவக் கல்லூரி
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
பணிதொழிலதிபர்
அமைப்பு(கள்)சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் டிவிஎஸ் குழுமம்
பட்டம்தலைவர் & நிர்வாக இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
உசா கிருஷ்ணா
பிள்ளைகள்பிரீத்தி, ஆர்த்தி, அருந்ததி
உறவினர்கள்தி. வே. சுந்தரம் அய்யங்கார் (பாட்டனார்)
விருதுகள்"Sir Jehangir Ghandy Medal for Industrial Peace", "Businessman of the Year 1995", JRD Tata Corporate Leadership Award, "Padma Shri in 2006"
வலைத்தளம்
http://www.sundram.com

சுரேஷ் கிருஷ்ணா[1] (Suresh Krishna; பிறப்பு 24 திசம்பர் 1938) ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார். டி. வி. எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[2]

குடும்பம்[தொகு]

இவரது பாட்டனார் டி. வி.எஸ். நிறுவனரான டி. வி.சுந்தரம் அய்யங்கார், இவரது தந்தை பெயர் டி. எஸ். கிருஷ்ணா.

கல்வி[தொகு]

மதுரையில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் வேதியலில் இளநிலைப் பட்டம், விஸ்கெசின் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும், [[மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்|மியூனிச் பல்கலைக்கழகத்தில்]] ஜெர்மானிய இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

பணிகள்[தொகு]

வாகனங்களுக்குத் தேவைப்படும் போல்ட், நட், ஸ்குரூ, ரிவைட்டுகள் போன்றவற்றைச் சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனம் முதலில் தயாரித்தது. உதிரிப் பாகங்களின் இவ்வரிசையில் தற்போது ஆறாயிரம் வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சர்வதேச தரம்வாய்ந்த பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்கின்றனர். அம்பத்தூருக்கு அருகில் உள்ள பாடி, மதுரைக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம், புதுவை, ஓசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் தமது நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகளை உருவாக்கினார். அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்தி செய்யும் கார்களுக்கு ரேடியேட்டர் மூடிகளைத் தயாரித்து அளிக்கும் இந்நிறுவனம், சிறந்த உற்பத்தியாளர் விருதை 1996 முதல் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக வென்றது.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "Executive Profile - Suresh Krishna, Chairman and Managing Director at Sundram Fasteners". Bloomberg Businessweek.
  2. "Suresh Krishna receiving the Lifetime Achievement Award from Lakshmi Narayanan, TiE Chennai president". The Hindu. பார்த்த நாள் 2011-11-25.
  3. தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம் 70
  4. "Sundram Fasteners bags GM award for fourth time". The Hindu Business Line. பார்த்த நாள் 2000-07-06.