உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்பா கணபதி கோயில்

ஆள்கூறுகள்: 18°31′08″N 73°51′25″E / 18.51889°N 73.85694°E / 18.51889; 73.85694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஸ்பா கணபதி கோயில்
கஸ்பா கணபதி கோயில் is located in மகாராட்டிரம்
கஸ்பா கணபதி கோயில்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:புனே
ஆள்கூறுகள்:18°31′08″N 73°51′25″E / 18.51889°N 73.85694°E / 18.51889; 73.85694
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.kasbaganpati.org
விநாயகர் சதுர்த்தி விழாவின் முடிவில் சிலை கரைப்பு ஊர்வலம், 2008

கஸ்பா கணபதி கோயில் (Kasba Ganapati) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் கணபதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். புனே நகரத்தில் இக்கணபதி சிலையை தாதாஜி கொண்டதேவ்[1] கண்டுபிடித்தார். இச்சிலையைக் கொண்டு பேரரசர் சிவாஜி மற்றும் அவரது அன்னை ஜிஜாபாய் புனே நகரத்தில் சனிவார்வாடா பகுதியில் 1639-இல் கணபதி கோயிலை நிறுவினார். இதுவே புனே நகரத்தின் முதன்மை தெய்வம் ஆகும். பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில் சனிவார்வாடா பகுதியில் அமைந்த கஸ்பா கணபதி கோயிலை செப்பனிட்டு, விழாக்கள் எடுத்தனர்.

இக்கணபதியே புனே நகரத்தின் முதன்மை தெய்வச் சிலை என பாலகங்காதர திலகர் தீர்மானித்தார்.[2] இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவரான பாலகங்காத திலகரின் முயற்சியால், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த, 1893-ஆம் ஆண்டு முதல் கணபதி சிலையுடன், கணபதி சதுர்த்தி விழா ஊர்வலம் கொண்டாடத் துவக்கப்பட்டது. இந்த ஊர்வலம் பாலகங்காதர திலகர் வீட்டிலிருந்து சனிவார்வாடா வரை நிகழ்த்தப்பட்டது. இதன் பிறகு சில ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி விழா பம்பாய் மாகாணம் முழுவதும் பரவியது.

வருடாந்திர கணபதி விழா

[தொகு]

1925-ஆம் ஆண்டு வரை கஸ்பா கோயில் வளாகத்தில் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி விழா, 1926-ஆம் ஆண்டு முதல் புனே நகரத்தின் பல உள்ளரங்க மண்டபங்களில் நடைபெற்றது. தற்போது புனே நகரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் இந்து சமயப் பண்பாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dadoji Konddeo
  2. "Kasba Ganpati". Archived from the original on 3 May 2010. பார்க்கப்பட்ட நாள் 10 April 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்பா_கணபதி_கோயில்&oldid=3614265" இலிருந்து மீள்விக்கப்பட்டது