உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு
Robert Lefkowitz
இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு
Robert J. Lefkowitz
பிறப்புஏப்ரல் 15, 1943 (1943-04-15) (அகவை 81)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைநுண்வாங்கி உயிரியல்
உயிர் வேதியியல்
பணியிடங்கள்தியூக்குப் பல்கலைக்கழகம்
ஓவர்டு ஃகியூ மருத்துவக் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம், ஆர்வர்டு பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பிரையன் கோபில்க்கா
அறியப்படுவதுG protein coupled receptors
beta-arrestins
விருதுகள்அமெரிக்க நாட்டக அறிவியல் பதக்கம் (2007)
நோபல் பரிசு, வேதியியல் (2012)

இராபர்ட்டு யோசப்பு இலெவுக்கோவித்ஃசு (Robert Joseph Lefkowitz') (பிறப்பு ஏப்பிரல் 15, 1943) ஓர் அமெரிக்க மருத்துவ அறிவியலாளர்; இவர் எழுபடலப்புல நுண்வாங்கி (7TM receptors) அல்லது குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி (G protein-coupled receptor) பற்றிய அடிப்படை ஆய்வுக்காக 2012 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைத் தன் மாணவர் பிரையன் கோபிலுக்காவுடன் சேர்ந்து வென்றார். இந்த நுண்வாங்கிகள் உயிரணுக்களுக்கு வெளியே இருக்கும் பொருள்களை உளவித் (துப்புத் துலக்கி) தக்க நடவடிக்கை எடுக்க உதவுகின்றது.

இளமைக்கால வாழ்க்கை

[தொகு]

இலெவுக்கோவித்ஃசு (Lefkowitz) ஏப்பிரல் 15, 1943 இல் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கு மாநிலத்தின் நியூயார்க்கு நகரத்தில் யூதப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறத்தார். புராங்க்ஃசு அறிவியல் உயர்நிலைப்பள்ளியில் படித்தப் பின்னர் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் கொலம்பியாக் கல்லூரியில் இளநிலை கலையியலில் பட்டத்தை 162 இல் பெற்றார். பின்னர் 1966 இல் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் அறுவை மருத்துவர்கள் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1970 முதல் 1973 வரை ஆர்வர்டு பல்கலை வழியாக மாசாச்சுசெட்ஃசு பொது மருத்துவமனையில் உறைவிட மருத்துவராகத் தேர்ச்சி பெற்றார், அப்பொழுது இதயக் குழாய்கள் நோய்கள் பற்றி ஆய்வும் மருத்துவப் பயிற்சியும் பெற்றார்.

பரிசுகளும் பெருமைகளும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "North Carolina scientist wins American Heart Association award for discovering receptors’ role as specific targets for drug therapy". AHA website. 2009-11-15. http://www.newsroom.heart.org/index.php?s=43&item=874. 
  2. "YouTube Video of Robert Lefkowitz receiving the National Medal of Science". YouTube. 2008-09-28. http://www.youtube.com/watch?v=csDTzytNNDI. 
  3. "Duke Medicine Physician-Scientist Receives National Medal of Science". Duke Health.org. 2008-09-28. http://www.dukehealth.org/health_library/news/10383. 
  4. "Announcement and Citation". Shawprize.org. 2007-06-12 இம் மூலத்தில் இருந்து 2016-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160407080440/http://shawprize.org/en/shaw.php?tmp=3&twoid=50&threeid=59&fourid=83. 
  5. "Albany Medical Center Prize". Albany Medical College website. 2007. http://www.amc.edu/academic/albanyprize/recipients.html. 

வெளியிணைப்புகள்

[தொகு]