வாளுக்கு வேலி அம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''வாளுக்குவேலி அம்பலகாரரின்''' தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர் ஆவார்.
'''வாளுக்குவேலி அம்பலகாரர்''' தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர் ஆவார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==

11:03, 30 மே 2023 இல் நிலவும் திருத்தம்

வாளுக்குவேலி அம்பலகாரர் தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாகனேரி, தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.

பாகனேரி நாடு என்பது 22 1/2 சிற்றூர்கள் உட்பட்டுள்ள ஒரு பகுதியாகும். இந்த நாட்டின் தலைவர் வாளுக்குவேலி அம்பலகாரர் ஆவார். இவருடைய தங்கை கல்யாணி இவருடைய தம்பி கறுத்த ஆதப்பன் ஆவார்கள்.

மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலகாரரின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.[1]

வேலு நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151 ல் குறிப்பிடப்படுகிறது.

அக்டோபர் 24 ,1801 ல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பனால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர். அதில் வாளுக்குவேலி அம்பலகாரர் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.

நினைவு

இவருடைய நினைவாகவும் மற்றும் வீரத்தை போற்றும் விதமாகவும் சூன் 10 ஆம் (வைகாசி 27) தேதி, பாகனேரி நாட்டு மக்களால் பொங்கல் படையலிட்டு, வீர வணக்க நாளாக கொண்டாடி வருகின்றனர்.[2]

இவருடைய வீரத்தினை போற்றும் விதமாக அரசு விழா நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.[3] இவருடைய வம்சாவளியினர் எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா மற்றும் ஓ. சுப்பிரமணியன் அம்பலம் ஆவார்கள்.

நூல்கள்

"வாளுக்கு வேலி" அம்பலகாரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, எஸ். எஸ். தென்னரசு என்பவரால், 1975 ஆம் ஆண்டு செம்மாதுளை என்ற நூல் வெளியிடப்பட்டது. [4]

அதே போல் இவரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கலைஞர் மு. கருணாநிதியால் 1983 ஏப்ரலில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம் "தென்பாண்டிச் சிங்கம்" ஆகும். புதினக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானது. இதில் நடிகர் நாசர் முதன்மை வேடத்தில் நடித்தார். இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.

மேற்கோள்கள்

  1. "குறுநிலத் தலைவனின் திருக்கதை". ஆனந்த_விகடன்.
  2. "வாளுக்குவேலி வீரவணக்கம்". தினமலர்.
  3. "சட்டப் பேரவையில் கோரிக்கை". Murasoli.
  4. "செம்மாதுளை". வானதி பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளுக்கு_வேலி_அம்பலம்&oldid=3727438" இலிருந்து மீள்விக்கப்பட்டது