தென்பாண்டிச் சிங்கம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்பாண்டிச் சிங்கம்
நூலாசிரியர்மு. கருணாநிதி
அட்டைப்பட ஓவியர்ஜெயராஜ்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்தமிழ்க் கனிப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
ஏப்ரல் 1983
பக்கங்கள்453

தென்பாண்டிச் சிங்கம் என்பது கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினமாகும். இதன் முதற் பதிப்பு 1983 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. அம்பலகாரர்களின் வரலாற்றையும் பெருமைகளையும் கூறும் இந்நூல் 18-ஆம் நூற்றாண்டில் கள்ளர் நாடுகளில் ஒன்றான பாகனேரியை ஆண்ட "வாளுக்கு வேலி" என்ற அம்பலத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

இந்தப் புதினம் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் 1990 ஆம் ஆண்டுக்கான இராசராசன் விருது பெற்றது.[1]

வாளுக்கு வேலி தென் தமிழகத்தில் கி.பி. 18ம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு கள்ளர் நாட்டுத் தலைவராவார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலியின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கெதிரான போரில் மருதுபாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.

இந்த புதினக்கதை தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராகவும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியானது. இதில் நடிகர் நாசர் முதன்மை வேடத்தில் நடித்தார். இத்தொடருக்கு இளையராஜா இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாவல் – விருதுகளும் பரிசுகளும் - திண்ணை". திண்ணை. பார்த்த நாள் 9 சூன் 2016.