மரியாள் (இயேசுவின் தாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன்னி மேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரியாள்
கண்ணாயிலான மரியாளின் ஓவியம், அயர்லாந்து
பிறப்பு செப்டம்பர் 8 (பாரம்பரியம்; மரியாவின் பிறப்பு) ஏ. 18 கி.முC[1]
சொந்த ஊர் நாசரேத்து, கலிலேயா
பெற்றோர் யோசிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி)
அன்னம்மாள் (தாய்; பாரம்பரியத்தின்படி)
வாழ்க்கைத் துணை யோசேப்பு
பிள்ளைகள் இயேசு கிறித்து

மரியா அல்லது மரியாள் (அரமிக்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்) புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி (கிரேக்கம் παρθένος, parthénos) எனக்குறிக்கின்றன.[2] கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.[3]

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pevehouse, James (2010). Spiritual Truths (1st ed.). பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா: Dorrance Publishing Company. p. 110. ISBN 978-1-4349-0304-4. https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC. 
  2. Matthew 1:23 uses Greek parthénos virgin, whereas only the Hebrew of Isaiah 7:14, from which the New Testament ostensibly quotes, as Almah young maiden. See article on parthénos in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.
  3. Browning, W. R. F. A dictionary of the Bible. 2004 ISBN 0-19-860890-X page 246

வெளி இணைப்புகள்[தொகு]