பி. எஸ். எடியூரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எடியூரப்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பி. எஸ். யெதியூரப்பா
பி. எஸ். யெதியூரப்பா
25ஆவது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
17 மே 2018 – 19 மே 2018
ஆளுநர் வாஜ்பாய் வாலா
முன்னவர் சித்தராமையா
பின்வந்தவர் எச். டி. குமாரசாமி
பதவியில்
மே 30, 2008 – சூலை 31,2011
முன்னவர் குடியரசுத்தலைவர் ஆட்சி
பின்வந்தவர் டி. வி. சதானந்த கௌடா
தொகுதி ஷிக்கரிப்பூர்
24வது கர்நாடகாவின் முதலமைச்சர்
பதவியில்
நவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007
முன்னவர் எச். டி. குமாரசாமி
பின்வந்தவர் குடியரசுத்தலைவர் ஆட்சி
தொகுதி ஷிக்கரிப்பூர்
தனிநபர் தகவல்
பிறப்பு 27 பெப்ரவரி 1943 (1943-02-27) (அகவை 76)
போக்கனக்கெரெ, மந்திய மாவட்டம், கருநாடகம்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாஜக
வாழ்க்கை துணைவர்(கள்) மைத்திரதேவி
பிள்ளைகள் இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்
இருப்பிடம் பெங்களூர்
சமயம் இந்து
As of மே 28, 2008
Source: [1]

போக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் முதலமைச்சராகப் பணியாற்றினார்.[2]

இவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._எடியூரப்பா&oldid=2711331" இருந்து மீள்விக்கப்பட்டது