உருபீடியம்–82 குளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ருபீடியம்-82 குளோரைடு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
(82Rb) ருபீடியம் குளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 132486-03-4 | |
| ATC code | V09GX04 |
| ChemSpider | 64457 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | D05773 |
| பப்கெம் | 71357 |
| |
| பண்புகள் | |
| ClRb | |
| வாய்ப்பாட்டு எடை | 117.371 கி மோல்−1 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சீசியம் குளோரைடு இலித்தியம் குளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ருபீடியம் – 82 குளோரைடு (Rubidium-82 chloride) என்பது ClRb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் குளோரைடு வகை கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். இது கார்டியோகென் என்ற வர்த்தகப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இதயத்திசு உட்செலுத்திப் படமாக்கல் (Myocardial perfusion imaging ) கருவியில் ருபீடியம் – 82 குளோரைடு பயன்படுகிறது[1] . சாதரண இதயத் திசுக்கள் ருபீடியம் – 82 குளோரைடை உடனடியாகவும் வேகமாகவும் எடுத்துக் கொள்கின்றன. இதனடிப்படையில், பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல் சோதனைமூலம் இரத்தம் குறைவாகப் பெறக்கூடிய இதயத் திசுக்கள் யாவை என அடையாளம் காணப்படுகின்றன[2]. ருபீடியம் – 82 குளோரைடின் அரைவாழ்வுக் காலம் 1.27 நிமிடங்கள் மட்டுமேயாகும். பொதுவாக ருபீடியம் உற்பத்தி இயந்திரங்கள் மூலமே அவ்விடத்தில் ருபீடியம் உற்பத்தி செய்யப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Th Wackers, Frans J; Bruni, Wendy; Zaret, Barry L (2007-11-19). "Rubidium-82 Generator". Nuclear cardiology: the basics : how to set up and maintain a laboratory. ISBN 978-1-58829-924-6.
- ↑ Ballinger, James R. (2009). "PET Radiopharmaceuticals in Nuclear Cardiology: Current Status and Limitations". Integrating Cardiology for Nuclear Medicine Physicians. பக். 379–385. doi:10.1007/978-3-540-78674-0_32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-78673-3.
- ↑ K. L. Gould et al. "Clinical feasibility of positron cardiac imaging without a cyclotron using generator-produced rubidium-82." Journal of the American College of Cardiology 1986;7:775-789.
உசாத்துணை
[தொகு]- Clarke, Michael J; Sadler, P. J (1999-06-15). Metallopharmaceuticals: Diagnosis and therapy. ISBN 978-3-540-65308-0.(Note: only about 1/2 page on Rb-generator)
- Alvarez-Diez, T; Dekemp, R; Beanlands, R; Vincent, J (1999). "Manufacture of strontium-82/rubidium-82 generators and quality control of rubidium-82 chloride for myocardial perfusion imaging in patients using positron emission tomography". Applied Radiation and Isotopes 50 (6): 1015–23. doi:10.1016/S0969-8043(98)00170-5. பப்மெட்:10355104. https://archive.org/details/sim_applied-radiation-and-isotopes_1999-06_50_6/page/1015.
- Waters, S. L.; B. M. Curseys (eds.) (1987). "The Strontium-82/rubidium-82 generator". International journal of radiation applications and instrumentation. Part A, Applied radiation and isotopes 38 (3): 171–239. http://www.sciencedirect.com/science/journal/08832889/38/3.