திசுநீர்த்தேக்கி
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(1H-இமிடசோ-4-யில்) எதனமைன்
| |
இனங்காட்டிகள் | |
51-45-6 | |
ChEBI | CHEBI:18295 |
ChEMBL | ChEMBL90 |
ChemSpider | 753 |
IUPHAR/BPS
|
1204 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D08040 |
ம.பா.த | Histamine |
பப்கெம் | 774 |
| |
UNII | 820484N8I3 |
பண்புகள் | |
C5H9N3 | |
வாய்ப்பாட்டு எடை | 111.145 |
உருகுநிலை | 83.5 °செ (182.3 °பா) |
கொதிநிலை | 209.5 °செ (409.1 °பா) |
எளிதில் குளிர் மற்றும் சூடாக்கப்பட்ட நீரில் கரையும்[1] | |
கரைதிறன் | எளிதில் மெத்தனோலில் கரையும். டை ஈதைல் ஈதரில் சிறிதளவே கரையும்.[1] எதனோலில் எளிதில் கரையும். |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
திசுநீர் தேக்கி (ஹிஸ்டமின்; Histamine) அண்மையில் நடக்கும் (நோய்) எதிர்ப்பு வினைகளில் பங்குபெறும் ஒரு கரிம நைட்ரசன் சேர்மமாகும். ஹிஸ்டமின் குடலில் நிகழும் உடல் வினைகளைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும், நரம்பு பரப்பியாகவும் செயல்படுகின்றது.[2] திசுநீர் தேக்கி, அழற்சி வினைகளைத் தூண்டுகிறது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக நிகழும் எதிர்ப்பு வினைகளின்போது, அண்மையில் உள்ள இணைப்பிழையங்களில் காணப்படும் காரநிற நுண்மங்கள் மற்றும் அடிநாட்டக்கலங்களினால் திசுநீர் தேக்கி உருவாக்கப்படுகின்றது. ஹிஸ்டமின், இரத்தத் தந்துகிகளின் ஊடுருவுத்திறனை அதிகரித்து, வெள்ளை அணுக்கள் மற்றும் சில புரதங்கள் இரத்தத் தந்துகிகளை ஊடுருவிச் சென்று கிருமி தாக்கப்பட்டத் திசுக்களில் உள்ள நோய்கிருமிகளுடன் போராட வழி செய்கின்றது.[3]
வேதிப்பண்புகள்
[தொகு]ஹிஸ்டமின் வண்ணமற்ற, நீர் உறிஞ்சும் படிகங்களாக உருவாகின்றது. இப்படிகங்கள் 84°செ வெப்ப நிலையில் உருகும் தன்மைக் கொண்டது. நீரிலும், எதனோலிலும் எளிதில் கரையும். டைஈதைல் ஈதரில் சிறிதளவே கரையும்.[1] நீர்க்கரைசலில் இரு இடமாற்றியங்களாக காணப்படுகின்றது. Nπ-H-ஹிஸ்டமின் மற்றும் Nτ-H-ஹிஸ்டமின்.
தொகுப்பு
[தொகு]ஹிஸ்டிடின் அமினோ அமிலத்திலிருந்து கார்பாக்சில் தொகுதி நீக்கப்படுவதன் மூலம் ஹிஸ்டமின் பெறப்படுகின்றது. இவ்வினை L-ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி நொதியத்தால் வினையூக்கம் செய்யப்படுகின்றது. திசுநீர் தேக்கி ஒரு நீர்நாடும், இரத்தக் குழாய் குழல் இயக்கும் அமைனாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 http://www.sciencelab.com/msds.php?msdsId=9924264
- ↑ Marieb, E. (2001). Human anatomy & physiology. San Francisco: Benjamin Cummings. pp. 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-4989-8.
- ↑ Di Giuseppe, M.; et al. (2003). Nelson Biology 12. Toronto: Thomson Canada Ltd. p. 473. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-17-625987-2.
{{cite book}}
: Explicit use of et al. in:|author=
(help)