சீசியம் ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் ஓராக்சைடு
Caesium monoxide[1][2]
சீசியம் ஓராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஓராக்சைடு
வேறு பெயர்கள்
சீசியம் ஓராக்சைடு (US)
இனங்காட்டிகள்
20281-00-9 Y
ChemSpider 8079519 Y
EC number 243-679-0
InChI
  • InChI=1S/2Cs.O/q2*+1;-2 Y
    Key: KOPBYBDAPCDYFK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Cs.O/q2*+1;-2
    Key: KOPBYBDAPCDYFK-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9903865
  • [Cs+].[Cs+].[O-2]
பண்புகள்
Cs2O
வாய்ப்பாட்டு எடை 281.81 கி/மோல்
தோற்றம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத் திண்மம்
அடர்த்தி 4.65 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 490 °C (914 °F; 763 K) (under N2)
தீவிரமாக வினைபுரிந்து சீசியம் ஐதராக்சைடத் தருகிறது.
கட்டமைப்பு
படிக அமைப்பு எதிர்-CdCl2 (அறுகோணம்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-345.8 கியூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
146.9 யூ.கெ−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 76.0 J கெ−1 மோல்−1
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
பொட்டாசியம் ஆக்சைடு
ருபீடியம் ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சீசியம் ஓராக்சைடு (Caesium monoxide) என்பது Cs2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் இருமை ஆக்சைடுகள் :Cs11O3, Cs4O, Cs7O, மற்றும் Cs2O. இருப்பதாக அறியப்படுகின்றன.[3]. சீசியம் ஆக்சைடு மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற அறுகோணப் படிகங்களாகக் காணப்படுகிறது.ஆக்சைடுகள் மற்றும் கீழாக்சைடுகள் இரண்டும் அட்ர் வண்ணங்களில் காணப்படுகின்றன[1].

ஒளி மின்னோடுகளில் பிம்ப அடர்விகள், வெற்றிட ஒளி இருவாய்கள், ஒளி பெருக்கிகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபடக்கருவி குழல்கள் போன்ற கருவிகளில் ஒளி மின்னோடாக அகச்சிவப்பு கதிர் சுட்டுக்குறிகளை கண்டறிய சீசியம் ஆக்சைடு பயன்படுகிறது[4]. வெள்ளிப் படலத்தின் மீதுள்ள சீசியம் ஆக்சைடு படலத்தின் மீதுள்ள சீசியம் படலம், 1929 – 1930 ஆம் ஆண்டுகளில் முதல் நவீன ஒளியுமிழ் மேற்பரப்பாகப் பயன்பட்டது என்று எல்.ஆர் கொல்லர் தெரிவிக்கிறார்.[5] இது நல்லதொரு எலக்ட்ரான் உமிழ்வியாக செயற்படுகிறது என்றாலும் இதனுடைய அதிக ஆவியழுத்தம் இதனுடைய பயன்பாட்டைக் குறைக்கிறது.[6]

வினைகள்[தொகு]

தனிம நிலை மக்னீசியம், சீசியம் ஆக்சைடை சீசியம் உலோகமாக குறைக்கிறது. மக்னீசியம் ஆக்சைடு உடன் விளை பொருளாக கிடைக்கிறது:[7][8]

Cs2O + Mg → 2Cs + MgO

நீருறிஞ்சும் தன்மையுள்ள சீசியம் ஆக்சைடு அரிப்புத்தன்மையுள்ள சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. pp. 451, 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3..
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. pp. 97–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help).
  3. Simon, A. (1997), "Group 1 and 2 Suboxides and Subnitrides — Metals with Atomic Size Holes and Tunnels", Coord. Chem. Rev., 163: 253–270, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0010-8545(97)00013-1.
  4. Capper, Peter; Elliott, C. T. (2000), Infrared Detectors and Emitters, Springer, p. 14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-7206-6
  5. Busch, Kenneth W.; Busch, Marianna A. (1990), Multielement Detection Systems for Spectrochemical Analysis, Wiley-Interscience, p. 12, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-81974-5
  6. Boolchand, Punit, ed. (2000), Insulating and Semiconducting Glasses, World Scientific, p. 855, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-02-3673-1
  7. Turner, Jr., Francis M., ed. (1920), The Condensed Chemical Dictionary, New York: Chemical Catalog Co., p. 121
  8. Arora, M.G. (1997), S-Block Elements, New Delhi: Anmol Publications, p. 13, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7488-562-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_ஓராக்சைடு&oldid=3390409" இலிருந்து மீள்விக்கப்பட்டது