சூலை 29
Appearance
(29 ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது.
- 238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான்.
- 1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார்.
- 1018 – மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார்.
- 1030 – தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார்.
- 1148 – சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
- 1567 – ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
- 1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஆங்கிலேயக் கடற்படையினர் சேர் பிரான்சிஸ் டிரேக் தலைமையில் பிரான்சில் கிரேவ்லைன்சு என்ற இடத்தில் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பை முறியடித்தனர்.
- 1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
- 1848 – இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றத்துக்கெதிராக மாத்தளையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க கிளர்ச்சியாளர்களுடன் இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர்.[1]
- 1848 – அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்: அயர்லாந்தில் டிப்பெரரி என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
- 1900 – இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
- 1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
- 1921 – இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1948 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
- 1950 – கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.
- 1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்படட்து.
- 1958 – ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1959 – அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
- 1967 – வியட்நாம் போர்: வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.
- 1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
- 1973 – கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.
- 1980 – ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.
- 1981 – இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற வேல்சு இளவரசர் சார்லசு-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.
- 1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.
- 1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
- 1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.[2]
- 2005 – ஏரிசு குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2010 – காங்கோவில் கசாய் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – சுவிட்சர்லாந்தில் லோசான் அருகே இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.
- 2015 – மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசு 10 இயக்குதளத்தை வெளியிட்டது.
பிறப்புகள்
- 1841 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (இ. 1912)
- 1883 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (இ. 1945)
- 1890 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1978)
- 1894 – எட்வர்ட் குபேர், புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (இ. 1979)
- 1898 – இசிதர் ஐசக் ரபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
- 1904 – ஜெ. ர. தா. டாட்டா, பிரான்சிய-இந்திய தொழிலதிபர் (இ. 1993)
- 1905 – டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (இ. 1961)
- 1920 – வி. சீ. கந்தையா, இலங்கைத் தமிழ் பண்டிதர், புலவர்
- 1927 – ஆரி முலிச், டச்சு எழுத்தாளர் (இ. 2010)
- 1936 – சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழகக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
- 1958 – கேயில் டைன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
- 1959 – சஞ்சய் தத், இந்திய நடிகர்
- 1980 – ராசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1099 – இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042)
- 1644 – எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1568)
- 1856 – ராபர்ட் சூமான், செருமனிய இசையமைப்பாளர் (பி. 1810)
- 1883 – வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (பி. 1759)
- 1890 – வின்சென்ட் வான் கோ, டச்சு ஓவியர் (பி. 1853)
- 1891 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1820)
- 1947 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1861)
- 1962 – ரொனால்டு பிசர், ஆங்கிலேய உயிரியலாளர், கணிதவியலாளர் (பி. 1890)
- 1974 – கருமுத்து தியாகராசர், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
- 1979 – எர்பர்ட் மார்குசே, செருமானிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1898)
- 1994 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசு பெற்ற எகிப்திய-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1910)
- 1996 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (பி. 1909)
- 1999 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1944)
- 2000 – இரெனே பாவலோரோ, அர்கெந்தீன இதய அறுவை மருத்துவ வல்லுநர் (பி. 1923)
- 2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
- 2009 – ராசன் பி. தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
- 2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- 2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)