இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு
Appearance
இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு | |
---|---|
1605 வாக்கில் ஜான் டி கிரிட்சால் வரையப்பட்டதாக கூறப்படும் ஓவியம் | |
இங்கிலாந்து அரசரும் அயர்லாந்தின் மன்னரும் | |
ஆட்சிக்காலம் | மார்ச்சு 24, 1603 – மார்ச்சு 27, 1625 |
முடிசூட்டுதல் | சூலை 25, 1603 |
முன்னையவர் | இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் |
பின்னையவர் | சார்லசு I |
இசுக்காட்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | சூலை 24, 1567 – மார்ச்சு 27, 1625 |
முடிசூட்டுதல் | சூலை 29, 1567 |
முன்னையவர் | மேரி |
பின்னையவர் | சார்லசு I |
அரசர்கள் |
|
பிறப்பு | சூன் 19, 1566 எடின்பர்கு கோட்டை, இசுக்காட்லாந்து |
இறப்பு | மார்ச்சு 27, 1625 (அகவை 58) (புதிய முறை நாள்காட்டியில்: ஏப்ரல் 6, 1625) தியோபால்ட்சு குடும்பம், இங்கிலாந்து |
புதைத்த இடம் | மே 7, 1625 |
துணைவர் | டென்மார்க்கின் ஆன் |
குழந்தைகளின் #Issue | என்றி பிரெடெரிக், வேல்சு இளவரசர் எலிசபெத் இசுடூவர்ட்டு, பொகிமியா மார்கெட் இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இராபர்ட்டு மேரி சோபியா |
மரபு | இசுடூவர்ட்டின் குடும்பம் |
தந்தை | என்றி இசுடூவர்ட்டு, டாம்லி பிரபு |
தாய் | ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி |
கையொப்பம் |
இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (ஜேம்சு சார்லசு இசுடூவர்ட்டு, James Charles Stuart; சூன் 19, 1566 – மார்ச்சு 27, 1625) இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சாகவும் (James VI) சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து முடியாட்சிகளின் ஒன்றியம் (union of the Scottish and English crowns) என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றியத்தின் முதலாம் மன்னராக தனது இறப்பு வரை (1625) அரசாட்சி புரிந்தார். இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் தனித்தனி இறைமையுள்ள நாடுகளாக இருந்தன; இரண்டும் தங்களுக்கான தனியான நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள், சட்டங்களைக் கொண்டிருந்தன. இவை இரண்டுக்கும் ஜேம்சு மன்னராக இருந்தபோதும் விரும்பிய ஒன்றிணைப்பாக தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டன.