பரங்கிப்பேட்டை

ஆள்கூறுகள்: 1°29′N 79°46′E / 1.49°N 79.76°E / 1.49; 79.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்ட்டோநோவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரங்கிப்பேட்டை
—  பேரூராட்சி  —
பரங்கிப்பேட்டை
இருப்பிடம்: பரங்கிப்பேட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 1°29′N 79°46′E / 1.49°N 79.76°E / 1.49; 79.76
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் புவனகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர்

தலைவர் பெயர் = உயரம் =

மக்கள் தொகை

அடர்த்தி

25,541 (2011)

2,163/km2 (5,602/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.81 சதுர கிலோமீட்டர்கள் (4.56 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/parangipettai

பரங்கிப்பேட்டை (ஆங்கிலம்:Parangipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பரங்கிப்பேட்டையில் தொடருந்து நிலையம் உள்ளது.

வரலாறு[தொகு]

செஞ்சி நாயக்கரான இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவர்தான் வங்காள விரிகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரத்தை நிர்மாணித்தார். இங்கு மக்களைக் குடியேற்றிய அவர் இந்த நகருக்கு கிருஷ்ணப்பட்டினம் என்று தன் பெயரை வைத்தார். கி.பி. 1623இல் டச்சுக்காரர்களை இங்கு வணிகம் செய்துகொள்ள அனுமதித்தார். பின்னர் போர்ச்சுகீசியர் இங்கு ஒரு புதிய துறை முகத்தை அமைத்தனர். புதிய துறைமுகம் என்ற பெயரில் அவர்கள் போர்டோநோவோ என அழைத்தனர். மேலும் இவ்வூரானது மஹ்மூதுபந்தர், வருணபுரி என்றும் அறியப்படுகிறது. பின்னர் இது பிரிட்டிசாரி்ன் ஆதிக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.[சான்று தேவை] இந்த இரும்புத் தொழிற்சாலைக்கு தேவைப்பட்ட இரும்புத்தாதை சேலத்தில் இருந்து வெள்ளாற்றில் படகு மூலமாக கொண்டுவரப்பட்டது. 1835ஆம் ஆண்டுவரை இந்த இரும்புத் தொழிற்சாலை இயங்கிவந்தது. இழப்பு ஏற்பட்டடக் காரணத்தால் தொழிற்சாலையை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மூடிவிட்டது.[4]

கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது. பாபா கோயிலும் இங்கு உள்ளது.

அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு கடல் சார் ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.

தொடருந்து நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் தொடருந்து நிலையம், இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூர் சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

அருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ. மற்றும் சென்னை - 230 கி.மீ.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,561 வீடுகளும், 25,541 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88.15% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1006 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

அமைவிடம்[தொகு]

பரங்கிப்பேட்டைக்கு வடக்கே கடலூர் 32 கிமீ; தெற்கே சிதம்பரம் 23 கிமீ; மேற்கே விருத்தாச்சலம் 51 கிமீ மற்றும் கிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இந்த ஊருக்கு அருகே வெள்ளாறு கடலில் கலக்கிறது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.81 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 145 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]

கடல் ஆய்வு மையம்[தொகு]

பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி. இங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆற்று நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.

இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது. ஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.

பரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் நிலையம் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. லண்டன் பாலத்துக்கு இரும்பு கொடுத்த பரங்கிப்பேட்டை! (2015). தினகரன் தீபாவளி மலர் 2015. சென்னை: தினகரன். பக். 312-318. 
  5. Parangipettai Population Census 2011
  6. பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கிப்பேட்டை&oldid=3283778" இருந்து மீள்விக்கப்பட்டது