போதன்
போதன் [1] | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 18°40′N 77°54′E / 18.67°N 77.9°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | நிசாமாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | போதன் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 35.40 km2 (13.67 sq mi) |
ஏற்றம் | 357 m (1,171 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 77,553 |
• அடர்த்தி | 2,200/km2 (5,700/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 503 185, 503 180 |
இடக் குறியீடு(கள்) | அலைபேசி +91, தொலைபேசி 08467தொலைபேசிக் குறியீடு |
வாகனப் பதிவு | TS 16 |
இணையதளம் | bodhanmunicipality |
போதன் அல்லது போதனாபுரம் (Bodlan), தென்னிந்தியாவில் உள்ள தெலங்காணா மாநிலத்தில் வடமேற்கில் அமைந்த நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான நிசாமாபாத்திற்கே மேற்கே 26.5 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடமேற்கில் 204.1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை ஆலை போதன் நகரத்தில் உள்ளது.[5]
வரலாறு
[தொகு]பண்டைய இந்தியாவின் மகாஜனபாதங்களில் ஒன்றான அஸ்மகம் இராச்சியத்தின் தலைநகராக போதானாபுரம் நகரம் விளங்கியது.[6] வெமுலவாடா சாளுக்கிய மன்னர் முதலாம் யுத்தமல்லன் என்ற வினாயதித்தன் ஆட்சியின் போது போதனாபுரம் தலைநகரமாக விளங்கியது.[7]கன்னட மொழி ஆதிகவி பம்பாவின் சமாதி போதனாபுரத்தில் உள்ளது. [8]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 35 வார்டுகளும், 16,206 வீடுகளும் கொண்ட போதன் நகரத்தின் மக்கள் தொகை 77,573 ஆகும். அதில் ஆண்கள் 38,651 மற்றும் பெண்கள் 38,922 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,458 மற்றும் 792 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 46.7%, இசுலாமியர் 50.06%, சீக்கியர்கள் 0.32%, கிறித்தவர்கள் 1.82% மற்றும் பிறர் 1.10% ஆகவுள்ளனர். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://bodhanmunicipality.telangana.gov.in
- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 சூன் 2016. Retrieved 28 சூன் 2016.
- ↑ "District Census Handbook – Karimnagar" (PDF). Census of India. pp. 11, 36. Retrieved 11 June 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. Retrieved 25 July 2014.
- ↑ "Telangana government takes over Nizam Sugar Factory". www.business-standard.com. Retrieved 2024-03-09.
- ↑ Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization (in ஆங்கிலம்). New Age International. p. 109. ISBN 9788122411980.
- ↑ Jaisetty Ramanaiah (1989). Temples of South India: A Study of Hindu, Jain, and Buddhist Monuments of the Deccan. Concept. p. 22. ISBN 978-81-7022-223-1.
- ↑ Kannada aadikavi Pampa’s samadhi lies in ruins at Bodhan
- ↑ Bodhan Population, Religion, Caste, Working Data Nizamabad, Andhra Pradesh - Census 2011