உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிகவி பம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பம்பா ( Pampa) இவர் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மரியாதைக்குரிய ஆதிகவி ("முதல் கவிஞர்") ஆவார். இவர் ஒரு கன்னட சமணக் கவிஞர். இவரது படைப்புகள் இவரது தத்துவ நம்பிக்கைகளை பிரதிபலித்தன. [1] இராஷ்டிரகூட அரசன் மூன்றாம் கிருஷ்ணனின் கீழ் ஆட்சிபுரிந்து வந்த சாளுக்கிய மன்னர் இரண்டாம் அரிகேசரியின் அரசவைக் கவிஞரான, பம்பா தனது காவியங்களான "விக்ரமார்ச்சுன விஜயம்" அல்லது "பம்பா பாரதம்" மற்றும் "ஆதி புராணம்" ஆகிய இரண்டிற்கும் மிகவும் பிரபலமானவர். இவை இரண்டும் கி. பி 939ஆம் வருடத்தைச் சேர்ந்தவை. இந்த படைப்புகள் கன்னடத்தில் உள்ள அனைத்து எதிர்கால சாம்பு படைப்புகளுக்கும் முன்மாதிரியாக செயல்பட்டன.

சமண எழுத்தாளர்களான பம்பா, சிறீ பொன்னா மற்றும் இரன்னா ஆகியோரின் படைப்புகள், "கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இது இடைக்கால கன்னட இலக்கியத்தின் 10 ஆம் நூற்றாண்டின் காலத்தை வெளிப்படுத்தியது.. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பம்பாவின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சொந்த மொழி குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. பம்பா சமண மதத்திற்குச் சென்ற ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், அவர்களின் உண்மையான இடம் மற்றும் பூர்வீக மொழி (கன்னடம் அல்லது தெலுங்கு) விவாதிக்கப்படுகின்றன. பம்பாவின் தம்பி ஜினவல்லபனால் குரிக்கியாலா கிராமத்தில் உள்ள பொம்மலம்ம குட்டாவில் நிறுவப்பட்ட முத்தரப்பு கல்வெட்டின் படி (நவீன தெலங்காணா), இவரது தந்தை அபிமானதேவராயர் என்பவராவாவார். (பீமப்பாயா என்றும் அழைக்கப்படுகிறார்). இவரது தாத்தா அபிமானாச்சந்திரர், பிராமண சாதியைச் சேர்ந்தவர் என்றும், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் கம்மநாட்டில் வங்கிபாருவைச் சேர்ந்தவர் என்றும் அது சுட்டிக்காட்டுகிறது. [3] [4] [5] [6]

பிறப்பு[தொகு]

நவீன சமண அறிஞர் ஹம்பா நாகராஜையா ("ஹம்பனா") கருத்துப்படி, பம்பா தார்வாட் மாவட்டத்தில் அன்னிகேரியில் பிறந்தார். [7] இவரது தந்தை பீமப்பையா மற்றும் அவரது தாய் அப்பாம்பபே. கி.பி 6 முதல் 5 வரை ஆட்சி செய்த வேமுலவாட சாளுக்கிய வம்சத்தின் மன்னர், இரிமடி அரிகேசரியின் அனுசரணையில் இருந்தார்.

பம்பாவின் மூதாதையர்கள் வெங்கி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையிலான பகுதி வெங்கிமண்டலம். இன்றைய தெலங்காணா மாநிலத்தின் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில் வெங்கிபாலு ஒன்றாகும்.

மாதவ சோமயாஜி பம்பா குடும்பத்தில் மூத்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பம்பாவின் தாத்தாவின் தந்தை. மாதவ சோமயாஜியின் மகன் அபிமான சந்திரன் ஆவார். அவர் குண்டூருக்கு அருகிலுள்ள குண்டிக்காவைச் சேர்ந்த நிடுகுண்டியில் இருந்தார்.

இருப்பினும், ஷெல்டன் பொல்லாக் கருத்துப்படி, பம்பா ஒரு தெலுங்கு மொழி பேசும் குடும்பம் அல்லது பிராந்தியத்திலிருந்து வந்தவர் என்று நம்பப்படுகிறது. [8]

கல்வி[தொகு]

இவர் சமசுகிருதம் மற்றும் பிராகிருதம் மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்பதும், வேத இலக்கியம் மற்றும் சமண தத்துவம் உட்பட ஒரு நல்ல பலதரப்பட்ட கல்வியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் இவரது படைப்புகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இவர் இசை, தத்துவம், நடனம், பொருளாதாரம், மருத்துவம், காமாஸ்திரம் (சிற்றின்ப இன்பத்தின் அறிவியல்) போன்ற பல்வேறு பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்கலாம். சரவணபெலகுளாவின் தேவேந்திர முனி என்ற பெயரில் இருந்த ஒரு குருவின் கீழ் படித்திருக்க வேண்டும் என இவர் கூறப்படுகிறார் .

கவிதை வாழ்க்கை[தொகு]

பயணத்தில் நன்கு ஆர்வமுள்ள மனிதர் பம்பா, இரண்டாம் அரிகேசரி மன்னரின் அரசவைக் கவிஞராக குடியேறினார். இவரது அறிவு மற்றும் கவிதை திறன்களால் மகிழ்ச்சி அடைந்த அரிகேசரி (குணர்ணவன் என்று அறியப்பட்டவர்) இவருக்கு கவிதா குணர்ணவர் என்ற பட்டத்தை வழங்கினார். 39 வயதில் இவர் தனது முதல் தலைசிறந்த படைப்பான ஆதி புராணத்தை 941இல் எழுதினார். சிறிது காலத்திற்குப் பிறகு இவர் பம்பா பாரதம் எனப் பிரபலமாக அறியப்பட்ட விக்ரமார்ச்சுன விஜயத்தை முடித்தார். இந்த இரண்டு படைப்புகளும் பாரம்பரிய கன்னட இசையமைப்பின் இணையற்ற படைப்புகளாகவே இருக்கின்றன. [9]

இவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல கன்னடக் கவிஞர்கள் இருந்தபோதிலும், அவர்களின் படைப்புகளின் தரம் இவருடன் பொருந்தியதாகத் தெரியவில்லை. இவரது இலக்கியத்தின் மகத்துவம் இதுதான். கன்னடத்தில் இருக்கும் மற்ற எல்லா இலக்கியங்களையும் தனது படைப்புகள் காலிலிட்டு நசுக்கியதாக பம்பா பெருமையுடன் கூறுகிறார். எனவே, இவர் கன்னடம் இலக்கியத்தின் ஆதிகவி என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிபுராணம்[தொகு]

உரைநடை மற்றும் வசனத்தின் கலவையான வடிவமான சாம்பு பாணியில் எழுதப்பட்ட ஆதி புராணம், ஜினசேனனின் சமசுகிருதப் படைப்பின் கன்னட பதிப்பாகும். மேலும் பதினாறு காண்டங்களில் சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிசபநாதரின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த படைப்பு இவரது தனித்துவமான பாணியில் ஒரு ஆன்மாவின் யாத்திரை முழுமையையும் மோட்சத்தையும் அடைவதற்கு கவனம் செலுத்துகிறது. ரிசபநாதரின் மகன்களான பரதன் மற்றும் பாகுபலி என்ற இரு சகோதரர்களின் முழு உலகத்தின் மீதும் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டுக்கான போராட்டத்தை பம்பா விவரிக்கிறார். பாகுபலி வெற்றி பெறும்போது, அவர் தனது சகோதரருக்கு ஆதரவாக உலக நோக்கங்களை கைவிடுகிறார். இடைக்காலத்தைச் சேர்ந்த பல சமண புராணங்கள் இந்தப்படைப்பிற்கு முன்மாதிரிகளாக இருந்தன.

விக்ரமார்ச்சுன விஜயம்[தொகு]

பம்பா பாரதம் என்றும் அழைக்கப்படும் விக்ரமார்ச்சுன விஜயம் என்பது வியாச மகாபாரதத்தின் கன்னட பதிப்பாகும். பம்பாவுக்கு முன்னர் பல கவிஞர்கள் மகாபாரதத்தின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை இயற்றியிருந்தனர். ஆனால் அதை முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. பம்பாவின் படைப்புகள் இவரது புரவலர் மன்னர் அரிகேசரியைப் புகழ்ந்து எழுதப்பட்டன. இவர் அரசரைக் காவியத்தில் அர்ஜுனனின் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு அர்ஜுனனைச் சுற்றி தனது படைப்புகளை மையப்படுத்துகிறார்.

பம்பா அசல் கதையில் பல மாற்றங்களைச் செய்தார். இவரது சில மாற்றங்கள் அபத்தமானவை மற்றும் பிழையானவை என்று தோன்றினாலும், இன்னும் சிலவற்றைச் சரியாகக் கலந்து அசல் கதைக்கு பிரகாசத்தை சேர்க்கின்றன. பம்பாவின் பதிப்பில், அருச்சுனன் திரௌபதியின் ஒரே கணவன் ஆவான். பலதார மணம் ஒரு நல்லொழுக்கமாக கருதப்படாததால், இது கதையுடன் நன்றாக செல்கிறது. மறுபுறம், தனது ராஜாவைப் பிரியப்படுத்த, சில இடங்களில் அரிகேசரி என்ற பட்டங்களுடன் அருச்சுனனைக் குறிப்பிடுகிறார். குருசேத்திரப் போருக்குப் பிறகு, அரசராக முடிசூட்டப்பட்டவர் தருமன் அல்ல, அர்ஜுனன், அவருடைய மனைவி சுபத்ராஅரசியாகிறார். வியாசரின் காவியத்தில் பெரிய பாத்திரத்தை வகித்த வீமனுக்கும், மிகுந்த அவமானத்தை அனுபவித்த திரௌபதிக்கும் பம்பாவின் படைப்புகளில் அதிகப் பங்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Merriam-Webster's encyclopedia of literature.
  2. Students' Britannica India, Volumes 1-5. Popular Prakashan. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-760-2. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. "Bommalagutta cries for attention". http://www.deccanchronicle.com/140926/nation-current-affairs/article/bommalagutta-cries-attention. 
  4. Kevala Bodhi: Buddhist and Jaina Kistory of the Deccan, Vol. 2, Bharatiya Kala Prakashan, 2004; p. 292
  5. Epigraphia Andhrica, Vol. 2, p. 27; Government of Andhra Pradesh, Hyderabad, 1969
  6. Samskrti sandhana, Rāshṭrīya Mānava Saṃskr̥ti Śodha Saṃsthāna, 2000; Vol. 13, p. 152
  7. Hampana in K. E. Radhakrishna, p.21 (2010), KANNADA : PAMPADYAYANA, Chapter: "Pampa: Apogee of Kannada literature", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-280-1192-4
  8. Pollock (2003). Literary Cultures in History: Reconstructions from South Asia. University of California Press. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-22821-9.
  9. Upinder Singh 2016, ப. 29.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிகவி_பம்பா&oldid=2962761" இலிருந்து மீள்விக்கப்பட்டது