பாதை தெரியுது பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாதைதெரியுது பார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாதை தெரியுது பார்
இயக்குனர்நிமாய் கோஷ்
தயாரிப்பாளர்குமாரி பிலிம்ஸ்
கதைகதை ஆர். கே. கண்ணன்
இசையமைப்புஎம். பி. சீனிவாசன்
நடிப்புகே. விஜயன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். வி. சுப்பைய்யா
டி. கே. பாலச்சந்திரன்
முத்துராமன்
எல். விஜயலட்சுமி
சாந்தினி
சுந்தரிபாய்
எஸ். ஆர். ஜானகி
ஒளிப்பதிவுநிமாய் கோஷ்
வெளியீடுநவம்பர் 18, 1960
நீளம்15128 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாதை தெரியுது பார் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ரெயில்வேயில் பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது.

பாடல்கள்[தொகு]

  • தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.. (பாடல்: ஜெயகாந்தன், பாடியவர்கள: பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி)
  • சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்.. (பாடல்: கே. சி. எஸ். அருணாசலம், பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்)
  • உண்மை ஒரு நாள் வெளியாகும்.. (பாடியவர்: திருச்சி லோகநாதன்)
  • ராசா மக போலிருந்தே.. (பாடல்: கே. சி. எஸ். அருணாசலம், பாடியவர்: ஏ. எல். ராகவன்)
  • மாசில் வீணையும (அப்பர் தேவாரம், பாடியவர்கள்: எஸ். ஜானகி, ஏ. எஸ். மகாதேவன்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதை_தெரியுது_பார்&oldid=2563516" இருந்து மீள்விக்கப்பட்டது