உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னு மாவட்டம்

ஆள்கூறுகள்: 33°03′38″N 70°33′08″E / 33.06048°N 70.552176°E / 33.06048; 70.552176
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னு மாவட்டம்

ضلع بنوں
மாவட்டம்
நாடு Pakistan
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு2018
தலைமையிடம்பன்னு நகரம்
பரப்பளவு
 • மாவட்டம்1,227 km2 (474 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மாவட்டம்11,67,892
 • அடர்த்தி950/km2 (2,500/sq mi)
 • நகர்ப்புறம்
49,965
 • நாட்டுப்புறம்
11,17,927
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்4

பன்னு மாவட்டம் (Bannu District) (பஷ்தூ: بنو ولسوالۍ, உருது: ضِلع بنوں‎) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் பன்னு நகரம் ஆகும். இம்மாவட்டம் 1861-இல் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாவட்டமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2]: 3 முன்னர் இம்மாவட்டம் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதியில் இருந்தது. 2018-இல் நடுவண் நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகள் கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

பன்னு மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கில் வடக்கு வசீரிஸ்தான், வடகிழக்கில் கரக் மாவட்டம், தென்கிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், தென்மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் உள்ளது. கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றத்தில், பன்னு மாவட்டத்தின் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.[3] பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்யப்படுகிறார்.[4]

பன்னு மாவட்டத்தின் முக்கியத் தொழில்களாக துணி நெய்தல், சர்க்கரை ஆலைகள், பஞ்சு நூல் ஆலைகள் உள்ளது. குர்ரம் மற்றும் காம்பிலா ஆறுகள பன்னு மாவட்டத்தை வளப்படுத்துகிறது. [5]:392

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பன்னு மாவட்டம் 4 வருவாய் வட்டங்களும், 49 ஒன்றியக் குழுக்களும் கொண்டது[6][7]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1227 சகிமீ பரப்பளவு கொண்ட பன்னு மாவட்டத்தின் மக்கள்தொகை 11,67,892 ஆகும். பன்னு மாவட்ட மக்களில் 99.3% பஷ்தூ மொழி பேசுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
  2. S.S. Thorbourne (1883). Bannu; or our Afghan Frontier. London: Trűbner & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1314135279.
  3. Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP
  4. "The Election Commission :: Untitled Page". 2012-11-15. Archived from the original on 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  5. "Imperial Bannu District". Gazetteer of India. Vol. 6. Clarendon Press. 1908.
  6. "Pakistan Tehsil Wise Census 2017 [PDF] (official)" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
  7. Provincial Disaster Management Authority, Government of Khyber Pakhtunkhwa (1 July 2009). "Pakistan: North West Frontier Province District, Tehsil and Union Code Reference Map" (PDF). United Nations Pakistan unportal.un.org.pk. Archived from the original (PDF) on 10 August 2013.


வெளி இணைப்புகள

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னு_மாவட்டம்&oldid=3611275" இலிருந்து மீள்விக்கப்பட்டது