தெற்கு வசீரிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெற்கு வசீரிஸ்தான்
جنوبی وزیرستان
முகமை
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், வடமேற்கு பாக்கித்தான் பகுதிகளில் உள்ள எல்லைப்புற முகமைகளைக் காட்டும் நிலப்படம் * – தெற்கு வசீரிஸ்தான் * – ந.நி.ப.ப * – கைபர் பக்தூக்வா    latd = 32.1836792
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், வடமேற்கு பாக்கித்தான் பகுதிகளில் உள்ள எல்லைப்புற முகமைகளைக் காட்டும் நிலப்படம்
  •  தெற்கு வசீரிஸ்தான்
  •  ந.நி.ப.ப
  •  கைபர் பக்தூக்வா
latd = 32.1836792
நாடு பாக்கித்தான்
நிறுவப்பட்டது 1893
தலைமையகம் டோங்க், பாக்கித்தான்
வாணா, பாக்கித்தான்
பரப்பளவு
 • மொத்தம் 6
மக்கள்தொகை (1998)
 • மொத்தம் 429
 • அடர்த்தி 65
நேர வலயம் பா.சீ.நே (ஒசநே+5)
முதன்மை மொழி(கள்) உருது, பஷ்தூ

தெற்கு வசீரித்தான் (South Waziristan, உருது: جنوبی وزیرستان) வசீரித்தானின் தென்பகுதியாகும்; பாக்கித்தானின் வடமேற்கில் மலைகள்சூழ் மண்டலத்தில் கிட்டத்தட்ட 11,585 சதுர கி.மீ (4,473 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. பெசாவருக்கு மேற்கு, தென்மேற்கில், வடக்கில் டோச்சி ஆற்றுக்கும் தெற்கில் கோமல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பகுதியே வசீரிஸ்தான் ஆகும்; இது பாக்கித்தானின் நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில் (FATA) அடங்கும். இதன் கிழக்கில் கைபர்-பக்தூக்வா உள்ளது. 1893 முதல் இப்பகுதி பிரித்தானியப் பேரரசு, ஆப்கானித்தானுக்கு உட்படாது தன்னாட்சியுடைய பழங்குடிகள் ஆட்புலமாக இருந்து வந்துள்ளது. இப்பகுதி பழங்குடிகள் அடிக்கடி பிரித்தானியப் பகுதிகளில் படையெடுத்து சிக்கலை உண்டு செய்தனர். இதனால் 1860க்கும் 1945க்கும் இடையே பலமுறை பிரித்தானியர் எதிர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கடினமான வாழியல் சூழலையும் பயங்கரமான உள்ளூர் போராளிகளையும் கருத்தில் கொண்டு பிரித்தானிய இந்தியப் பேரரசின் துருப்புக்கள் இப்பகுதியை "நரகத்தின் கதவை தட்டுபவர்" (Hell's Door Knocker) என அழைத்தனர். 1947 முதல் இப்பகுதி பாக்கித்தானின் அங்கமாயிற்று.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_வசீரிஸ்தான்&oldid=2044287" இருந்து மீள்விக்கப்பட்டது