கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
ضلع جنوبی وزیرستان زیریں
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு13 ஏப்ரல் 2022
தலைமையிடம்வானா நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தாலுகாக்கள்4
மொழிகள்இண்டிக்கோ மொழி, பஷ்தூ மொழி

கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் (Lower South Waziristan District) (உருது: ضلع جنوبی وزیرستان زیریں, பஷ்தூ: لر جنوبي وزیرستان ولسوالۍ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் வானா நகரம் ஆகும்.[1][2][3] இம்மாவட்டம் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 13 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது. [4]இது கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 3,07,815 ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் நான்கு தாலுகாக்களைக் கொண்டது.

  • வானா தாலுகா
  • சாகை மாவட்டம்
  • தோய் குல்லா தாலுகா
  • பிர்மில் தாலுகா

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "South Waziristan split into two districts - Upper and Lower". 14 October 2022.
  2. "South Waziristan divided into two districts". 14 October 2022.
  3. "South Waziristan divided into two districts". 14 October 2022.
  4. "KP Cabinet approves South Waziristan's bifurcation for effective management". 13 April 2022.