தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
தெற்கு வசீரிஸ்தான்
جنوبی وزیرستان | |
---|---|
முகமை | |
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (நீலம் மற்றும் மஞ்சல் நிறங்களில்) மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (பச்சை நிறத்தில்)
| |
நாடு | பாக்கித்தான் |
நிறுவப்பட்டது | 1893 |
தலைமையகம் | டோங்க், பாக்கித்தான் வாணா, பாக்கித்தான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,619 km2 (2,556 sq mi) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 4,29,841 |
• அடர்த்தி | 65/km2 (170/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பா.சீ.நே) |
முதன்மை மொழி(கள்) | பஷ்தூ, உருது |
தெற்கு வசீரித்தான் (South Waziristan, உருது: جنوبی وزیرستان) பாக்கித்தானின் நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில் (FATA) ஒன்றாகும்.[1][2] பிற பழங்குடி பகுதிகள் வடக்கு வசீரிஸ்தான் முகமை, குர்ரம் முகமை, கைபர் முகமை, ஒரக்ழை முகமை, முகமது முகமை, பஜௌர் முகமை ஆகும். தெற்கு வசிரிஸ்தான் முகமை எட்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
மாவட்டப் பிரிப்பு
[தொகு]13 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 4 தாலுகாக்களைக் கொண்டு மேல் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் என்றும்; தெற்குப் பகுதியில் உள்ள 4 தாலுகாக்களைக் கொண்டு கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [3].[4][5][6]
எல்லைகள்
[தொகு]தெற்கு வசிரிஸ்தானின் கிழக்கில் கைபர் பக்துன்வா மாகாணம், தெற்கில் பலுசிஸ்தான் மாகாணம், மேற்கில் ஆப்கானித்தான், வடக்கில் வடக்கு வசீரிஸ்தான் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இமயமலையில் அமைந்த தெற்கு வசிரிஸ்தான் முகமை, பாக்கித்தானின் வடமேற்கில் மலைகள்சூழ் மண்டலத்தில் கிட்டத்தட்ட 6620 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. பெசாவருக்கு மேற்கு, தென்மேற்கில், வடக்கில் டோச்சி ஆற்றுக்கும் தெற்கில் கோமல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பகுதியே வசிரிஸ்தான் ஆகும்; இது பாக்கித்தானின் நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில் (FATA) அடங்கும். இதன் வடக்கிலும், கிழக்கிலும் கைபர்-பக்துன்வா மாகாணம் உள்ளது.
கைபர் பக்துன்வா மாகணத்தில்
[தொகு]2018-இல் நடுவண் நிர்வாகப் பழங்குடிப் பகுதிகளை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் இணைத்த போது, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் ஒரு மாவட்டமாக விளங்கி வருகிறது.
வரலாறு
[தொகு]1893 முதல் இப்பகுதி பிரித்தானியப் பேரரசு, ஆப்கானித்தானுக்கு உட்படாது தன்னாட்சியுடைய பழங்குடிகள் ஆட்புலமாக இருந்து வந்துள்ளது. இப்பகுதி பழங்குடிகள் அடிக்கடி பிரித்தானியப் பகுதிகளில் படையெடுத்து சிக்கலை உண்டு செய்தனர். இதனால் 1860க்கும் 1945க்கும் இடையே பலமுறை பிரித்தானியர் எதிர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கடினமான வாழியல் சூழலையும் பயங்கரமான உள்ளூர் போராளிகளையும் கருத்தில் கொண்டு பிரித்தானிய இந்தியப் பேரரசின் துருப்புக்கள் இப்பகுதியை "நரகத்தின் கதவை தட்டுபவர்" (Hell's Door Knocker) என அழைத்தனர். 1947 முதல் இப்பகுதி பாக்கித்தானின் அங்கமாயிற்று.
இதனையும் காண்க
[தொகு]- வசீரிஸ்தான்
- தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்
- கைபர் பக்துன்வா மாகாணம்
- கைபர் பக்துன்வா மாவட்டப் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ South Waziristan Agency
- ↑ South Waziristan Agency
- ↑ "KP Cabinet approves South Waziristan's bifurcation for effective management". 13 April 2022.
- ↑ "South Waziristan split into two districts - Upper and Lower". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.
- ↑ "South Waziristan divided into two districts". 14 October 2022.