திரேச்சர் மலை

ஆள்கூறுகள்: 3°32′34.4″N 101°43′12.6″E / 3.542889°N 101.720167°E / 3.542889; 101.720167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரேச்சர் மலை
Treacher Hill
கைவிடப்பட்ட நகரம்
திரேச்சர் மலை எச்சங்கள்
திரேச்சர் மலை எச்சங்கள்
சொற்பிறப்பு: திரேச்சர் மலை: சிலாங்கூரின் முன்னாள் பிரிட்டிஷ் ஆளுநர் வில்லியம் திரேச்சர்
திரேச்சர் மலை is located in மலேசியா
திரேச்சர் மலை
திரேச்சர் மலை
ஆள்கூறுகள்: 3°32′34.4″N 101°43′12.6″E / 3.542889°N 101.720167°E / 3.542889; 101.720167
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
அமைவு1893
வனவிலங்கு காப்பகம்1922
அரசு
 • நிர்வாகம்தீபகற்ப மலேசியா வனவிலங்கு தேசிய பூங்காக்கள் மன்றம்
(PERHILITAN)
பரப்பளவு
 • மொத்தம்1,943 ha (4,801 acres)
ஏற்றம்1,053 m (3,455 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்0
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)

திரேச்சர் மலை அல்லது பூச்சி மலை (மலாய்: Bukit Kutu (புக்கிட் குத்து); ஆங்கிலம்: Treacher Hill அல்லது Ghost Town) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் கைவிடப்பட ஒரு மலைவாழ் இடமாகும். இந்த இடத்தை ஆசியாவின் பேய் நகரங்களில் (Ghost towns in Asia) ஒன்றாக வகைப்படுத்தி உள்ளார்கள்.

அங்கு தெள்ளு (பூச்சி); சொணை பூச்சி; ஒட்டுப் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் மிகுதியாக இருந்ததால், அந்த இடத்திற்கு புக்கிட் குத்து (Bukit Kutu) என்று ஓராங் அஸ்லி மக்கள் பெயர் வைத்து உள்ளார்கள்.

ஒரு காலத்தில் பிரித்தானியர்களின் கோடைக்கால வாசத் தலமாக விளங்கியது. இன்றைய காலத்தில் அதைப் பேய் நகரம் என்று அழைக்கிறார்கள். இந்த மலைத் தலம் ஒரு சோகமான வரலாற்றைக் கொண்டு உள்ளது.

பல்வேறு வகையான தாவரங்களும் மற்றும் பல்வேறு வகையான விலங்கினங்களும் நிறைந்து வாழும் புக்கிட் குத்துவில் பல்லுயிர்களின் பெருக்கங்கள் உள்ளன. 1922-ஆம் ஆண்டில், இந்த மலைவாழ் இடம் ஒரு வனவிலங்கு காப்பகமாக மலாயா அரசிதழில் வெளியிடப்பட்டது.

சொற்பிறப்பியல்[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் பிரிட்டிஷ் ஆளுநர் வில்லியம் திரேச்சர் (William Hood Treacher) என்பவரின் நினைவாக இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. [1] அதே சமயத்தில் புக்கிட் குத்து எனும் மாற்றுப் பெயர் ஒராங் அஸ்லி மக்களிடம் இருந்து பெறப்பட்டது.[2]

மலாய் மொழியில் குத்து (Kutu) என்றால் பூச்சி; புக்கிட் (Bukit) என்றால் உயர்ந்த இடம்; அல்லது குன்று; மலை என்று பொருள். அந்த வகையில் "பூச்சி மலை" (Bukit Kutu) என பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.[3][4]

வரலாறு[தொகு]

1921-ஆம் ஆண்டில் திரேச்சர் மலை

இந்த மலைவாழிடம் 1893-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[5] அப்போது இரண்டு பங்களாக்கள் மட்டுமே இருந்தன.[6] முதல் பங்களா சிலாங்கூர் அரசாங்கத்தால் 1895-ஆம் ஆண்டில் கருங்கல் (பாறை) மற்றும் மரங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது; இரண்டாவது பங்களா 1904-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[7]

பார்வையாளர்கள் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 1 மலாயா கூட்டாட்சி டாலர் வாடகைக் கட்டணம். அரசாங்க அதிகாரிகளுக்கு இலவசம். அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கோலா குபு மாவட்ட அதிகாரியின் அனுமதி தேவை.

ஒவ்வொரு பங்களாவிலும் படுக்கையறைகள், தரைவழித் தொலைபேசி, நெருப்பிடம், டென்னிஸ் மைதானம் மற்றும் தொலைநோக்கி போன்ற வசதிகள் வழங்கப்பட்டன.[8] இந்த மலைவாழிடம் 15.3 கி.மீ. (9.5 மைல்) குதிரைச் சவாரிப் பாதையால் இணைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பாதை கோலா குபு பாருவைப் புக்கிட் குத்துவுடன் இணைக்கும் ஒரே சாலையாகவும் செயல்பட்டது.[9]

1935-ஆம் ஆண்டுகளில், திரேச்சர் மலையில் கைவிடப்பட்ட பங்களாக்கள் பாழடைந்து போய் விட்டன. அந்த இடம் ஒரு பேய் நகரமாக மாறியது. அங்கு இருந்த இரண்டு கட்டிடங்களும் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திற்கு விற்கப்பட்டன.

ஜப்பானிய இராணுவத்தின் தாக்குதல்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய இராணுவம், திரேச்சர் மலைப் பாதையில் குண்டுகளை வீசியது. அதனால் அந்த நகரம் கைவிடப்பட்டது. அந்த மலை வாழிடத்திற்குச் செல்வதற்கு இருந்த ஒரே சாலையானது அடர்ந்த தாவரங்களால் நிரம்பியது.

அந்தப் பாதை பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தப் பேய் நகரத்தின் எச்சங்களாக அங்கு இருந்த பங்களாக்களின் புகைபோக்கி, நெருப்பிடம் மற்றும் ஒரு கிணறு மட்டுமே காட்சிப் பொருள்களாக இருக்கின்றன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cartwright, C. A. (1908). Twentieth Century Impressions of British Malaya: Its History, People, Commerce, Industries, and Resources. University of Minnesota. பக். 880. https://books.google.com/books?id=8vE2AQAAMAAJ. 
  2. Misfar, Zainuri (2017-01-22). "Hirup udara segar sambil mendaki di Bukit Kutu". Berita Harian. https://www.bharian.com.my/bhplus-old/2017/01/237946/hirup-udara-segar-sambil-mendaki-di-bukit-kutu. 
  3. Raja Singam, S. Durai (1980). Place-names in Peninsular Malaysia. Kuala Lumpur: Archipelago Publishers. பக். 18. https://books.google.com/books?id=hnIMAAAAIAAJ&q=bukit+kutu. "Bukit Kutu (Sel) Kutu is a name for parasitic biting insects." 
  4. "Translation of flea – English–Malay dictionary". Cambridge University Press. https://dictionary.cambridge.org/dictionary/english-malaysian/flea. 
  5. Harun, Hairudin (2017). Medicine and Imperialism II: A History of Colonial Health Policy in British Malaya. பக். 30. https://books.google.com/books?id=eFZKDwAAQBAJ&q=gunung+kledang+%22hill+station%22&pg=PT123. 
  6. Robert Aiken, Samuel (1994). Imperial Belvederes: The Hill Stations of Malaya. Oxford University Press. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789676530370. https://books.google.com/books?id=iLFuAAAAMAAJ&q=bukit+kutu. 
  7. Robert Aiken, Samuel (1994). Imperial Belvederes: The Hill Stations of Malaya. Oxford University Press. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789676530370. https://books.google.com/books?id=iLFuAAAAMAAJ&q=bukit+kutu. 
  8. Malay Mail (1923-02-21). "Malayan hill station: Bukit Kutu". Singapore Free Press and Mercantile Advertiser. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/singfreepresswk19230221-1.2.31?ST=1&AT=filter&K=Bukit%20Kutu%26ka%3DBukit%20Kutu&KA=Bukit%20Kutu%26ka%3DBukit%20Kutu&DF=&DT=&Display=0&AO=true&NPT=&L=&CTA=&NID=singfreepresswk%7Cmorningtribune%7Ckabarslalu%7Cmalayansatpost%7Cstweekly%7Csundaytribune%7Cweeklysun&CT=&WC=&YR=&QT=bukit,kutu&oref=article. 
  9. "A Visit to Bukit Kutu.". The Straits Times. 1914-07-02. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19140702-1.2.58?ST=1&AT=filter&K=Bukit%20Kutu&KA=Bukit%20Kutu&DF=&DT=&Display=0&AO=true&NPT=&L=&CTA=&NID=straitstimes&CT=&WC=&YR=&QT=bukit,kutu&oref=article. 
  10. Wai Ting, Loong (2020-01-16). "#JOM GO: A tricky trek". New Straits Times. https://www.nst.com.my/lifestyle/jom/2020/01/556959/jom-go-tricky-trek. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bukit Kutu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேச்சர்_மலை&oldid=3420738" இருந்து மீள்விக்கப்பட்டது