டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்
DC Comics logo.svg
உருவாக்கம்டிசி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்2013-தற்போது வரை

டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம் (ஆங்கில மொழி: DC Extended Universe) என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் கற்பனையான புனைபிரபஞ்சம் ஆகும். இது அமெரிக்க காமிக் புத்தகமான டிசி காமிக்ஸ்களில் தோன்றும் மீநாயகன் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்படும் பட வரிசைகளின் தொகுப்பாகும்.

இந்த உரிமையின் கீழ் காமிக் புத்தகங்கள், குறும்படங்கள், நாவல்கள் மற்றும் நிகழ்ப்பட ஆட்டங்கள் அடங்கும். 2002 ஆம் ஆண்டு வார்னர் புரோஸ். என்ற நிறுவனம் டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தோன்றும் எல்லா மீநாயகன்களையும் ஒன்றாக ஒரே படத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்தார். அதே போன்று ஜஸ்டிஸ் லீக் என்ற திரைப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 2008 இல் வெளியான த டார்க் நைட் என்ற திரைப்பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ். தனிப்பட்ட உரிமையாளர்களின் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தது, அதனால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு. 2008 ஆம் உருவாக்கப்பட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மார்வெல் திரைப் பிரபஞ்சத்திற்கு போட்டியாக 2013 ஆம் ஆண்டு 'டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்' உருவாக்ப்ப்ட்டது. இது முதலில் இயக்குனர் சாக் சினைடர் இயக்கத்தில் ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2018 வாக்கில் டிசி பிலிம்ஸ் தனிப்பட்ட மீநாயகன் திரைப்படங்களை தயாரிபதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், வார்னர்மீடியா போக்கை மாற்றியமைத்து, எதிர்கால படங்கள் மீண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்படும் என்று அறிவித்தது.

முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் படமாக மேன் ஆப் ஸ்டீல்[1] என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் மேன் திரைப்படத்தின் மீள் உருவாக்கம் ஆகும். அதை தொடர்ந்து பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[2] (2016), சூசைட் ஸ்க்வாட்[3] (2016), வொண்டர் வுமன்[4] (2017), ஜஸ்டிஸ் லீக்[5] (2017), அக்குவாமேன்[6] (2017), ஷசாம்![7] (2019), பேர்ட்ஸ் ஆஃப் பிரே[8] (2020), வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சதின் படங்கள் உலகளாவிய வசூல் ரீதியாக 5.6 பில்லியன் டாலர்களை வசூலித்து. இது எல்லா நேரத்திலும் பதினொன்றாவது மிக அதிக வசூல் செய்த திரைப்பட உரிமையாகும். இதன் அதிக வசூல் செய்த படமான ஆகுமான் என்ற படம் உலகளவில் 1.15 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது மற்றும் இன்றுவரை அதிக வசூல் செய்த டிசி வரைகதையை அடிப்படையிலான திரைப்படபடமாக அமைந்தது.

சொற்பிறப்பியல்[தொகு]

திரைப்படத் தொடரின் அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கனவே நிறுவப்பட்ட மார்வெல் திரைப் பிரபஞ்சம் பெயரிடன் ஒத்ததாக ரசிகர்கள் மற்றும் ஊடகங்களால் பிரபஞ்சம் பொதுவாக "டிசி திரைப் பிரபஞ்சம்" என்று அழைக்கப்பட்டது. ஆனால் எண்டர்டெயின்மென்ட் வீக்லி என்ற பத்திரிகையில் எழுதும் கீத் இசுடாஸ்கிவிச்சு என்பவர் ஜூலை 1, 2015 அன்று பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் பற்றிய கட்டுரையில் "டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்" என்ற வார்த்தையை நகைச்சுவையாக உருவாக்கினார். இந்தச் சொல் மற்றும் டிசிஇயூ (டிசி நீபி) என்ற சுருக்கமானது பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களிடையே விரைவாக பரவியது, இது அடுத்த ஆண்டுகளில் உரிமையின் அதிகாரப்பூர்வ பெயராகக் கருதப்பட்டது. இருப்பினும் வல்லூரை எழுத்தாளர் ஆபிரகாம் ரைஸ்மேனின் கூற்றுப்படி, இந்த வார்த்தை உள்நாட்டில் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் அதை அதிகாரப்பூர்வமாக கருதவில்லை என்றும் செப்டம்பர் 2017 இல் டிசி நிறுவனம் அவருக்கு உறுதிப்படுத்தியது.

2016 இல் டிசி பிலிம்சு தலைவர்: டவுன் ஆப் தி ஜஸ்டிஸ் லீக்கின் இன் ஒரு பகுதியாக, ஜெப் ஜான்சு மற்றும் கெவின் சுமித் இருவரும் உரிமையாளரின் பெயரை "ஜஸ்டிஸ் லீக் பிரபஞ்சம்" என்று குறிப்பிட்டனர். அதை தொடர்ந்து 2018 இல் சான் டியேகோ காமிக்-கான் நிகழ்வின் பொது டிசி பிலிம்ஸ் பேனலின் போது, வரவிருக்கும் சில படங்களைக் காட்சிப்படுத்திய பிறகு, ஒரு காணொளி சுவரொட்டியில் "வெல்கம் டு தி வேர்ல்ட் ஆப் டிசி" என்ற வார்த்தைகளைக் காட்டியது. இதன் விளைவாக, சில ஊடகங்கள் டிசி அவர்களின் பகிரப்பட்ட திரைப்பட பிரபஞ்சத்திற்கு "வேர்ல்ட் ஆப் டிசி" என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டதாக இதை விளக்கியது. இருப்பினும், மார்ச் 2020 ஜிம் லீ என்பவர் இல் சிகாகோ காமிக் & என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ நிகழ்வில் 'டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்' என்று குறிப்பிட்டார். பின்னர், வார்னர் புரோஸ். இன் ஓடிடி தள சேவையான எச்பிஓ மாக்சு அடுத்த மே மாதம் தொடங்கப்பட்டபோது இந்த உரிமையானது அதிகாரப்பூர்வமாக 'டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம்' என்று பெயரிடப்பட்டது.

அபிவிருத்தி[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

2002 ஆம் ஆண்டில் அகிவா கோல்ட்ஸ்மேனின் திரைக்கதையில் இருந்து 'பேட்மேன் வெர்சசு சூப்பர்மேன்' திரைப்படத்தை வொல்ப்காங் பீட்டர்சன் என்பவர் இயக்கவிருந்தார்.[9] ஆனால் ஜே. ஜே. ஏபிரகாம்சு என்பவர் 'சூப்பர்மேன்: பிளைபை' என்ற மற்றொரு திரைப்படத்திட்டத்தை சமர்ப்பித்த பிறகு தனிப்பட்ட சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் திட்டங்களில் கவனம் செலுத்த வார்னர் புரோஸ். நிறுவனம் இந்த மேம்பாட்டை ரத்து செய்தது. மாசி 2007 இல், வார்னர் புரோஸ். நிறுவனம் கணவன் மற்றும் மனைவியான மைக்கேல் மற்றும் கீரன் முல்ரோனி ஆகிய இருவரையும் ஜஸ்டிஸ் லீக் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத பணியமர்த்தப்பட்டனர். 2005 இல் பேட்மேன் பிகின்ஸ் படத்தில் பேட்மேனாக நடித்த நடிகர் கிரிஸ்டியன் பேல் என்பவர் அந்த பாத்திரத்தில் மீண்டும் நடிக்க அணுகவில்லை,[10] மற்றும் 2006 இல் சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ் படத்தில் சூப்பர்மேனாக நடித்த பிராண்டன் ரூத் என்பவரும் நடிக்கவில்லை.[11] இயக்குனர் ஜார்ஜ் மில்லர்[12] என்பவர் ஜஸ்டிஸ் லீக் மோர்டல் என்று தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்குவதற்கு பணியமர்த்தப்பட்டார், ஆர்மி ஹேமர் பேட்மேனாகவும், டி.ஜே. கொட்ரோனா சூப்பர்மேனாகவும், ஆடம் ப்ராடி பிளாஷாகவும், சாண்டியாகோ கப்ரேரா அக்வாமனாகவும், காமம் கிரீன் லான்டர்னாகவும், மேகன் கேல்[13] வொண்டர் வுமனாகவும், ஹக் கீஸ்-பைர்ன் மார்டியன் மன்ஹன்டராகவும், ஜே பருச்செல் மேக்ஸ்வெல் லார்டாகவும் நடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பிற்கான வரிச்சலுகைகளைப் பெறத் தவறியதால், 2007-2008 இல் அமெரிக்கா வேலைநிறுத்தம் ஆகிய பிரச்சனைகளால் திரைக்கதை எழுதும் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் சனவரி 2008 இல் இந்தத் திட்டம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டது.

ஜெப் ஜான்சு

2013 இல் சூப்பர்மேன் உரிமையின் மறுதொடக்கம் மேன் ஆப் ஸ்டீல்[14] என்ற திரைப்படம் மூலம் எதிர்கால டிசி படங்களுக்கு அடித்தளம் அமைக்க அமைக்கப்பட்டது. இந்த படத்தில் டிசி பிரபஞ்சத்தில்[15] உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன, எனவே அது வெற்றியடைந்தால், அது பகிரப்பட்ட பிரபஞ்சத்தை தொடங்கலாம் என கருதினார்கள். அதை தொடர்ந்து மேன் ஆப் ஸ்டீல் படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆடி மாதம் சான் டியேகோ காமிக்-கான் நிகழ்வில், மேன் ஆப் ஸ்டீலின் தொடர்ச்சியாக, பகிரப்பட்ட பிரபஞ்சத்தை நிறுவுவதன் மூலம், சூப்பர்மேனும் பேட்மேனும் திரைப்பட வடிவத்தில் முதல்முறையாகச் சந்திப்பார்கள் என்று வார்னர் புரோஸ். நிறுவனம் அறிவித்து.

ஐப்பசி மாதம் 2014 இல் பத்து டிசி படங்களின் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது, அவை எல்லாம் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் படங்களின் ஆரம்ப திட்டங்கள் எனவும் அது 2020 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஜூன் 2015 இல், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படைப்பாற்றல் வளர்ச்சியின் தலைவர் 'கிரெக் சில்வர்மேன்' என்பவர் டிசி யின் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கான அணுகுமுறையை விளக்கினார், "நாங்கள்... இந்த அன்பான கதாபாத்திரங்களை எடுத்து, தலைசிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களின் கைகளில் வைத்து, அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் ஒருங்கிணைக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.."

தொலைக்காட்சி[தொகு]

மே 2020 இல் எச்பிஓ மாக்சு என்ற ஓடிடி தள சேவையை வார்னர் மீடியா அறிமுகப்படுத்தியது. செப்டம்பரில் எச்பிஓ மாக்சில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதல் தொலைக்காட்சித் தொடரான பீஸ்மேக்கர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தி சூசைட் ஸ்க்வாட் திரைப்படத்தின் வழித்தொடர் ஆகும். இந்த அறிவிப்பிற்குப் பிறகு, வால்டர் ஹமாடா டிசி பிலிம்ஸ் நிறுவனம் எச்பிஓ மாக்சுக்கான உள்ள ஒவ்வொரு படத்திற்கும் வழித்தொடர்களை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

பிப்ரவரி 2021 இல் எச்பிஓ மாக்சு மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் ஜே.ஜே. ஆப்ராம்ஸ் ஆகியோர் 'ஜஸ்டிஸ் லீக் டார்க்'கின் தனிப்பட்ட குழு உறுப்பினர்களின் அடிப்படையில் பல தொடர்களை உருவாக்கத் தொடங்கினர், இறுதியில் இந்தத் திட்டங்களை ஒரு குறுக்குவழி மற்றும் குழு குறுந்தொடர்களில் முடியும் என்றார்கள்.

திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் திரைக்கதை கதை தயாரிப்பாளர்
மேன் ஆப் ஸ்டீல் சூன் 14, 2013 (2013-06-14) சாக் சினைடர் டேவிட் எஸ். கோயர் டேவிட் எஸ். கோயர், கிறிஸ்டோபர் நோலன் சார்லசு ரோவன், கிறிஸ்டோபர் நோலன், எம்மா தாமஸ், டெபோரா சினைடர்
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் மார்ச்சு 25, 2016 (2016-03-25) கிறிசு டெரியோ, டேவிட் எஸ். கோயர் சார்லசு ரோவன், டெபோரா சினைடர்
சூசைட் ஸ்க்வாட் ஆகத்து 5, 2016 (2016-08-05) டேவிட் ஆயர் சார்லசு ரோவன், ரிச்சர்ட் சக்கிள்
வொண்டர் வுமன் சூன் 2, 2017 (2017-06-02) பாட்டி யென்கின்சு ஆலன் கேய்ன்பெர்கு சாக் சினைடர், ஆலன் கேய்ன்பெர்க்கு
ஜேசன் புக்சு
சார்லசு ரோவன், டெபோரா சினைடர், சாக் சினைடர், ரிச்சர்ட் சக்கிள்
ஜஸ்டிஸ் லீக் நவம்பர் 17, 2017 (2017-11-17) சாக் சினைடர் கிறிசு டெரியோ, ஜோஸ் வேடன் கிறிசு டெரியோ, சாக் சினைடர் சார்லசு ரோவன், டெபோரா சினைடர், ஜோன் பெர்கு, ஜெப் ஜான்சு
அக்வாமேன் திசம்பர் 21, 2018 (2018-12-21) ஜேம்ஸ் வான் டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு
வில் பீல்
ஜெப் ஜான்சு, ஜேம்ஸ் வான்
வில் பீல்
பீட்டர் சப்ரன், ராப் கோவன்
ஷசாம்! ஏப்ரல் 5, 2019 (2019-04-05) டேவிட் எப். சாண்ட்பெர்க்கு கென்றி கெய்டன் கென்றி கெய்டன், டேரன் லெம்கே பீட்டர் சப்ரன்
பேர்ட்ஸ் ஆஃப் பிரே பெப்ரவரி 7, 2020 (2020-02-07) காத்தி யான் கிறிஸ்டினா காட்சன் மார்கோட் ரொப்பி, பிரையன் அன்கெலெஸ், சூ குரோல்
வொண்டர் வுமன் 1984 திசம்பர் 25, 2020 (2020-12-25) பாட்டி யென்கின்சு பாட்டி யென்கின்சு, ஜெப் ஜான்சு
& டேவிட் சல்லஹாம்
பாட்டி யென்கின்சு, ஜெப் ஜான்சு சார்லசு ரோவன், டெபோரா சினைடர், சாக் சினைடர், பாட்டி யென்கின்சு, கால் கடோட், இசுடீபன் ஜோன்சு
சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் மார்ச்சு 18, 2021 (2021-03-18) சாக் சினைடர் கிறிசு டெரியோ கிறிசு டெரியோ, சாக் சினைடர்r
வில் பீல்
சார்லசு ரோவன், டெபோரா சினைடர்
தி சூசைட் ஸ்க்வாட் ஆகத்து 5, 2021 (2021-08-05) ஜேம்ஸ் கன் சார்லசு ரோவன், பீட்டர் சப்ரன்
பிளாக் ஆடம் அக்டோபர் 21, 2022 (2022-10-21) ஜாமே காலெட்-செர்ரா ஆடம் இசுடிகியேல், ரோரி ஹெய்ன்சு, சோராப் நோஷிர்வானி பியூ பிளின், டுவெயின் ஜான்சன், கிராம் கார்சியா, தானி கார்சியா
ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு திசம்பர் 21, 2022 (2022-12-21) டேவிட் எப். சாண்ட்பெர்க்கு கென்றி கெய்டன், கிறிசு மோர்கன் பீட்டர் சப்ரான்
அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் மார்ச்சு 17, 2023 (2023-03-17) ஜேம்ஸ் வான் டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு ஜேம்ஸ் வான், டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு,
ஜேசன் மோமோவா, தாமசு பா சிப்பெட்டு
ஜேம்ஸ் வான், பீட்டர் சப்ரான்
தி பிளாஷ் சூன் 23, 2023 (2023-06-23) ஆண்டி முசியெட்டி கிறிஸ்டினா காட்சன் ஜான் பிரான்சிசு டேலி, ஜொனாதன் கோல்ட்ஸ்டைன்,
ஜோபி கரோல்ட்டு
பார்பரா முசியெட்டி, மைக்கேல் டிஸ்கோ
புளூ பீட்டில் ஆகத்து 18, 2023 (2023-08-18) ஏஞ்சல் மானுவல் சோட்டோ கரேத் டன்னெட்-அல்கோசர் ஜான் ரிக்கார்டு

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு நிகழ்ச்சி நடத்துபவர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
பீஸ்மேக்கர் 1 8 சனவரி 13, 2022 (2022-01-13) பெப்ரவரி 17, 2022 (2022-02-17) ஜேம்ஸ் கன்
2 TBA TBA

நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்[தொகு]

கதாபாத்திரம் திரைப்படங்கள் தொடர்கள்
பாரி ஆலன்
பிளாசு
எசுரா மில்லர்
ஆர்தர் கறி
அக்வாமேன்
ஜேசன் மோமோவா
கல்-எல் / கிளார்க் கென்ட்
சூப்பர்மேன்
ஹென்றி கவில் ரியான் ஹாட்லி (நிற்பவர்)
ஜோக்கர் ஜாரெட் லெடோ
ஜாரெட் லெட்டோ
(பேர்ட்ஸ் ஆஃப் பிரே படத்தில் சிறு தோற்றம்)
ஜொனாதன் கெவின் கோஸ்ட்னர்
மார்த்தா கென்டு டயான் லேன்
லோயிசு லேன் ஏமி ஆடம்சு
டயானா பிரின்சு
வொண்டர் வுமன்
கால் கடோட் கிம்பர்லி வான் இல்பெர்க்
(நிற்பவர்)
கார்லீன் குவின்செல்
கார்லி குவின்
மார்கோட் ரொப்பி மார்கோட் ரொப்பி
ஜெனரல் கால்வின் சுவான்விக்கு
மார்டியன் மேன்ஹன்டர்
ஆரி லெனிக்சு
அமண்டா வாலர் வியோல டேவிஸ் வியோல டேவிஸ்
புரூசு வெய்ன்
பேட்மேன்
பென் அஃப்லெக் மைக்கேல் கீட்டன்
ஜெனரல் சோட்டு மைக்கேல் சானன் மைக்கேல் சானன்

படத்தின் வருவாய்[தொகு]

வசூல்[தொகு]

திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு மேற்
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
மேன் ஆப் ஸ்டீல் சூன் 14, 2013 (2013-06-14) $291,045,518 $377,000,000 $668,045,518 99 134 $225 மில்லியன் [16]
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் மார்ச்சு 25, 2016 (2016-03-25) $330,360,194 $543,277,334 $873,637,528 67 71 $250 மில்லியன் [17]
தி சூசைட்டு இசுக்வாட்டு ஆகத்து 5, 2016 (2016-08-05) $325,100,054 $421,746,840 $746,846,894 70 109 $175 மில்லியன் [18]
வொண்டர் வுமன் சூன் 2, 2017 (2017-06-02) $412,845,172 $410,009,114 $822,854,286 31 83 $149 மில்லியன் [19]
ஜஸ்டிஸ் லீக் நவம்பர் 17, 2017 (2017-11-17) $229,024,295 $428,902,692 $657,926,987 155 137 $300 மில்லியன் [20]
அக்வாமேன் திசம்பர் 21, 2018 (2018-12-21) $335,104,314 $813,424,079 $1,148,528,393 63 23 $200 மில்லியன் [21]
ஷசாம்! ஏப்ரல் 5, 2019 (2019-04-05) $140,480,049 $225,600,000 $366,080,049 425 366 $100 மில்லியன் [22]
பேர்ட்ஸ் ஆஃப் பிரே பெப்ரவரி 7, 2020 (2020-02-07) $84,172,791 $121,150,150 $205,322,941 925 832 $85 மில்லியன் [23]
வொண்டர் வுமன் 1984 திசம்பர் 25, 2020 (2020-12-25) $46,801,036 $122,800,970 $169,602,006 1,894 1,031 $200 மில்லியன் [24]
தி சூசைட்டு இசுக்வாட்டு மார்ச்சு 18, 2021 (2021-03-18) $55,817,425 $112,840,140 $168,657,565 1,793 1,233 $185 மில்லியன்
மொத்தம் $2,250,750,848 $3,576,751,319 $5,827,502,167 11 10 $1.87 பில்லியன் [25][26]

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldberg, Matt (August 17, 2011). "Plot Synopsis for Man of Steel". Collider. September 29, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 31, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chitwood, Adam (June 9, 2015). "Batman vs. Superman Synopsis Revealed". Collider. July 25, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 28, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "New 'Suicide Squad' Plot Synopsis Reveals New Details About the Supervillain Movie". ScreenCrush. December 15, 2015. December 17, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 29, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kroll, Justin (January 23, 2014). "'Wonder Woman' Gal Gadot Signs Three-Picture Deal with Warner Bros". Variety. January 23, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. McNary, Dave (June 21, 2016). "'Justice League': New Details Emerge About DC's Superhero Movie". Variety. June 22, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 9, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. Kit, Borys (August 12, 2014). "'Aquaman' Movie Hooks Two Writers (Exclusive)". The Hollywood Reporter. August 14, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 6, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. Auty, Dan (February 7, 2018). "DC's Shazam: Plot Revealed In New Synopsis". GameSpot. March 28, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 28, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. Kroll, Justin (March 2, 2016). "Will Smith, David Ayer Reteaming on Max Landis Spec 'Bright'". Variety. September 29, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 7, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. Ahmed, Tufayel (March 27, 2016). "The story of how 'Batman vs. Superman' almost happened 15 years ago". Newsweek. December 10, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. Howard, Rachel (August 21, 2007). "Interview: Is Christian Bale In or Out of WB's 'Justice League'?". IESB. November 15, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 1, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  11. Weintraub, Steve (April 23, 2008). "Brandon Routh Exclusive Video Interview – Lie To Me". Collider. March 4, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 1, 2008 அன்று பார்க்கப்பட்டது.
  12. Garrett, Diane (September 20, 2007). "George Miller to lead 'Justice League'". Variety. June 15, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 20, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  13. Robinson, Will (November 20, 2015). "Justice League: Megan Gale as Wonder Woman pics surface". Entertainment Weekly. October 6, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  14. Breznican, Anthony (April 11, 2013). "'Man of Steel' will open door for more DC Comics superhero movies". Entertainment Weekly. September 24, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 24, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  15. Dyce, Andrew (April 11, 2013). "Man of Steel Will Launch DC Shared Universe". Screen Rant. April 12, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Man of Steel (2013)". Box Office Mojo. October 14, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Batman v Superman: Dawn of Justice (2016)". Box Office Mojo. December 16, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Suicide Squad (2016)". Box Office Mojo. January 28, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Wonder Woman (2017)". Box Office Mojo. July 25, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  20. "Justice League (2017)". Box Office Mojo. April 6, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  21. "Aquaman (2018)". Box Office Mojo. February 27, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  22. "Shazam! (2019)". Box Office Mojo. April 6, 2019. https://www.boxofficemojo.com/movies/?id=untitledmovieiv.htm. 
  23. "Birds of Prey (2020)". Box Office Mojo. March 28, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  24. "Wonder Woman 1984". Box Office Mojo. May 18, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  25. "Movie Franchises and Brands Index". Box Office Mojo. July 20, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 18, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  26. "DC Extended Universe Index". Box Office Mojo. December 28, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]