உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் எப். சாண்ட்பெர்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் எப். சாண்ட்பெர்க்கு
பிறப்பு21 சனவரி 1981 (1981-01-21) (அகவை 43)
ஜான்கோபிங், சுவீடன்
மற்ற பெயர்கள்போனிஸ்மாஷர்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லோட்டா லாஸ்டன் (தி. 2013)
[1]

டேவிட் எப். சாண்ட்பெர்க்கு (ஆங்கில மொழி: David F. Sandberg) (பிறப்பு: 21 சனவரி 1981) என்பவர் சுவீடன் நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பல குறும் படங்களுக்கும் மற்றும் லைட்ஸ் அவுட் (2016), அன்னாபெல்: கிரேயேசன்[2] (2017) போன்ற திகில் திரைப்படங்களுக்கு பிரபலமானவர். அதை தொடர்ந்து ஷசாம்![3] (2019), ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

டேவிட் எப். சாண்ட்பெர்க்கு என்பவர் சனவரி 21, 1981 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் ஜான்கோபிங்கில் பிறந்தார். இவரது சிறுவயதிலிருந்து பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தார். இவர் இளம் வயதிலேயே ஒரு காணொளி கடையில் பணிபுரிந்தார், மேலும் திரைப்படத் தயாரிப்பிற்காக தனது சொந்த படப்பிடிப்பு சாதனத்தை வாங்குவதற்காக பணத்தைச் சேமித்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mintchell, Fredrick (July 22, 2016). "Lights Out's David F. Sandberg and Lotta Losten are living their own Hollywood rags to riches story". World Tech Today. பார்க்கப்பட்ட நாள் July 25, 2016.
  2. Slotek, Jim (July 21, 2016). "'Lights Out': David F. Sandberg goes from YouTube to Hollywood". Toronto Sun. பார்க்கப்பட்ட நாள் July 25, 2016.
  3. Kit, Borys (July 2, 2016). "'Shazam!' Is Next DC Movie to Shoot (Exclusive)". Hollywoodreporter. பார்க்கப்பட்ட நாள் July 25, 2016.
  4. "10 things you may not know about David F Sandberg". Warner Bros. UK. Warner Bros. July 21, 2016. Archived from the original on August 23, 2016. பார்க்கப்பட்ட நாள் November 6, 2017.
  5. Sandberg, David F. "More than you ever wanted to know about David F. Sandberg". dauid.com. Archived from the original on March 31, 2014. பார்க்கப்பட்ட நாள் November 6, 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]