உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் சப்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் சப்ரன்
பிறப்புநவம்பர் 22, 1965 (1965-11-22) (அகவை 58)
இலண்டன்
இங்கிலாந்து
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், டிஜிட்டல் பொழுதுபோக்கு நிர்வாகி
செயற்பாட்டுக்
காலம்
1997-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நடாலியா
பிள்ளைகள்1

பீட்டர் சப்ரன் (ஆங்கில மொழி: Peter Safran) (பிறப்பு: நவம்பர் 22, 1965) என்பவர் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் தி கான்ஜுரிங் (2013), அன்னாபெல் (2014), அக்வாமேன் (2018), ஷசாம்! (2019), தி சூசைட் ஸ்க்வாட் (2021), ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022), அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவர் கோல்ட்-மில்லர் கோ நிறுவனத்தில் மேலாளராக ஆனார் மற்றும் 1998 வரை அங்கேயே இருந்தார்.[2] இவர் 2003 இல் பிரில்ஸ்டீன்-கிரே மேனேஜ்மென்ட்டின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பிரில்ஸ்டீன்-கிரேயில் மேலாளராக இருந்தார். பின்னர் தலைவராக பிராட் பிட், ஜெனிபர் அனிஸ்டன், ஆடம் சேண்ட்லர், நிக்கோலஸ் கேஜ் மற்றும் கோர்டனி காக்சு உட்பட 200 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட துறையின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இவர் பொறுப்பேற்றார்.[3]

இவர் இவரது சகோதரர் டாட் சப்ரன் தயாரித்து 2005 ஆம் ஆண்டு வெளியான 'தி லாங் வீக்கெண்ட்' திரைப்படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்தார். அதை தொடர்ந்து 2006 இல் பிரில்ஸ்டீன்-கிரேவை விட்டு வெளியேறி, தி சப்ரன் நிறுவனத்தைத் தொடங்கினார், மேலும் தனது வாடிக்கையாளர் பட்டியலையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.[4] அத்துடன் மேலாளராக, இவர் சீன் கோம்ப்ஸ், ஆடம் ஷாங்க்மேன், டேவிட் ஹைட் பியர்ஸ், ஜெனிஃபர் லோபஸ், புரூக் ஷீல்ட்ஸ் மற்றும் ஜெசிக்கா சிம்சன் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சப்ரன்&oldid=3490306" இலிருந்து மீள்விக்கப்பட்டது