பாட்டி யென்கின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டி யென்கின்சு
Patty Jenkins at the 2018 Comic-Con International.jpg
பிறப்புபாட்ரிசியா லியா யென்கின்சு
சூலை 24, 1971 (1971-07-24) (அகவை 51)
விக்டர்வில்லே, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
பெற்றோர்
  • வில்லியம் டி. ஜென்கின்ஸ்
  • எமிலி ரோத்
வாழ்க்கைத்
துணை
சாம் ஷெரிடன் (தி. 2007)
பிள்ளைகள்1

பாட்ரிசியா லியா யென்கின்சு[1] (ஆங்கில மொழி: Patty Jenkins) (பிறப்பு: சூலை 24, 1971)[2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் மான்ஸ்டர் (2003), வொண்டர் வுமன் (2017),[3] மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய மான்ஸ்டர்[4] படத்திற்காக சிறந்த முதல் அம்சத்திற்கான இன்டிபென்டன்ட் சிபிரிட் விருதையும் மற்றும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் இன் பிராங்க்ளின் ஜே. ஷாஃப்னர் விருதையும் வென்றார்.[5]அதை தொடர்ந்து தி கில்லிங் (2011) என்ற தொடரின் ஒரு கதை அத்தியாயத்தை இயக்கியத்ததற்காக இவர் பிரைம் டைம் எம்மி விருது பரிந்துரையையும், நாடகத் தொடரில் சிறந்த இயக்குனருக்கான டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா விருதையும் பெற்றார். இவர் 2017 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபருக்கான பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

யென்கின்சு என்பவர் சூலை 24, 1971 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் உள்ள விக்டர்வில்லில்,[6] வியட்நாம் போரில் வெள்ளி நட்சத்திரத்தைப் பெற்ற விமானப்படைத் தலைவரும் போர் விமானியுமான வில்லியம் டி. ஜென்கின்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாகப் பணியாற்றிய எமிலி ரோத் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.[7] இவருக்கு எலைன் ரோத் என்ற மூத்த சகோதரி உண்டு.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர்
2003 மான்ஸ்டர் ஆம் ஆம் இல்லை
2017 வொண்டர் வுமன் ஆம் இல்லை இல்லை
2020 வொண்டர் வுமன் 1984 ஆம் ஆம் ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Siegel, Tatiana (May 31, 2017). "The Complex Gender Politics of the 'Wonder Woman' Movie". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/features/complex-gender-politics-wonder-woman-movie-1008259. 
  2. "Wonder Woman 1984 Stars Gal Gadot and Pedro Pascal Celebrate Patty Jenkins' Birthday". Comicbook.com. July 24, 2021. April 2, 2022 அன்று பார்க்கப்பட்டது. Happy Birthday, Patty Jenkins! The director known best for helming Wonder Woman and Wonder Woman 1984 turned 50 on July 24th
  3. Kit, Borys (April 15, 2015). "'Wonder Woman' Movie Finds a New Director (Exclusive)". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/wonder-woman-movie-finds-a-789099. 
  4. Ebert, Roger (January 1, 2004). "Theron turns in powerhouse performance in disturbing biopic". RogerEbert.com. https://www.rogerebert.com/reviews/monster-2003. 
  5. “The 76th Academy Awards: 2004.” Oscars.org | Academy of Motion Picture Arts and Sciences, https://www.oscars.org/oscars/ceremonies/2004 பரணிடப்பட்டது அக்டோபர் 6, 2014 at the வந்தவழி இயந்திரம்.
  6. del Barco, Mandalit (June 2, 2017). "'When Time Was New': 'Wonder Woman' Brings Sunlight To The DC Universe". New Hampshire Public Radio. July 5, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 27, 2017 அன்று பார்க்கப்பட்டது. She was born in 1971 on an Air Force base in Victorville, Calif. Her father had been an F4 fighter pilot during Vietnam. And the family moved around a lot - Cambodia, Thailand and Kansas after he died. In Lawrence, Jenkins' mother worked as an environmental scientist, raising two daughters as a single mother. Elaine Roth remembers her little sister Patty...
  7. "Patty Jenkins, Sam Sheridan". The New York Times. September 2, 2007. July 27, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 27, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டி_யென்கின்சு&oldid=3489455" இருந்து மீள்விக்கப்பட்டது