கிறிஸ்டினா காட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டினா காட்சன்
பிறப்புஇலண்டன், இங்கிலாந்து[1]
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012–இன்று வரை

கிறிஸ்டினா காட்சன் (ஆங்கில மொழி: Christina Hodson) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் பம்பல்பீ (2018) மற்றும் பேர்ட்ஸ் ஆஃப் பிரே (2020) போன்ற படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

காட்சன் இங்கிலாந்தில் இலண்டனில் பிறந்தார். இவர் தைவான் மற்றும் ஆங்கிலேய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இலண்டனில் உள்ள விம்பிள்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[2]

தொழில்[தொகு]

இவர் 2016 ஆம் ஆண்டில் பாரன் பிளாக்பர்ன் இயக்கத்தில் வெளியான 'சட் இன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானர்.[3][4] அதை தொடர்ந்து இவர் ஜூன் 2015 இல் அகிவா கோல்ட்ஸ்மேனின் மேற்பார்வையின் கீழ் டிரான்ஸ் பார்மர்சு பிரபஞ்சத்தை விரிவுபடுத்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் குழுவில் சேர்ந்தார்.[5] பின்னர் திசம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட தலைப்பு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட டிரான்ஸ் பார்மர்சு திரைப்படமான 'பம்பல்பீ'[6] என்ற படத்திற்கு இவர் திரைக்கதை எழுதினார். இந்த படத்தை டிராவிஸ் நைட் என்பவர் இயக்கினார்.[7]

இவர் 2020 ஆம் ஆண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்திரக்காக டிசி காமிக்ஸ் வரைகதையை மையாக கொண்டு வெளியான பேர்ட்ஸ் ஆஃப் பிரே என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதினார். அதை தொடர்ந்து டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படங்களான தி பிளாஷ்[8] மற்றும் பேட்கேர்ள்[9] ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு
2016 சட் இன்
2017 அன்போர்கெட்டப்பில்
2018 பம்பல்பீ
2020 பேர்ட்ஸ் ஆஃப் பிரே
2023 தி பிளாஷ்
இல்லை பேட்கேர்ள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Christina Hodson – 2016 Austin Film Festival and Conference Schedule". Austin Film Festival. https://2016austinfilmfestivalandconfere.sched.org/speaker/christina_hodson.1vkjrxid. 
  2. "Scriptnotes, Ep 346: Changing the Defaults — Transcript" (in en). 19 April 2018. https://johnaugust.com/2018/scriptnotes-ep-346-changing-the-defaults-transcript. 
  3. Finke, Nikki (17 December 2012). "The Black List 2012: Screenplay Roster" (in en-US). Deadline Hollywood. https://deadline.com/2012/12/black-list-2012-winners-390080/. 
  4. Vlessing, Etan (5 November 2014). "AFM: Naomi Watts Joins Psychological Thriller 'Shut In'". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/afm-naomi-watts-joins-psychological-746642. 
  5. Fleming, Mike Jr. (2 June 2015). "No Boys Club In 'Transformers' Writers Room: Christina Hodson, Lindsey Beer Join Brain Trust". Deadline Hollywood. https://deadline.com/2015/06/transformers-writer-room-christina-hodson-lindsey-beer-1201436394/. 
  6. Fleming, Mike Jr. (11 November 2016). "Paramount Buzzing Over Christina Hodson 'Bumblebee' Transformers Spinoff Script". Deadline Hollywood. https://deadline.com/2016/11/transformers-bumblebee-christina-hodson-script-paramount-pictures-spinoff-script-1201852869/. 
  7. Busch, Anita (3 March 2017). "Travis Knight To Direct 'Transformers' Spinoff 'Bumblebee' At Paramount" (in en-US). Deadline Hollywood. https://deadline.com/2017/03/bumblebee-movie-travis-knight-director-kubo-and-the-two-strings-1202034882/. 
  8. "'Flash' Shocker: 'It' Director Andy Muschietti in Talks to Tackle DC Movie (Exclusive)" (in en). 2 July 2019. https://www.hollywoodreporter.com/heat-vision/it-director-andy-muschietti-direct-flash-movie-1216021. 
  9. Kit, Borys (9 April 2018). "'Batgirl' Movie Back On, Now With 'Bumblebee' Writer (Exclusive)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/batgirl-movie-back-bumblebee-writer-1101078. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டினா_காட்சன்&oldid=3489458" இருந்து மீள்விக்கப்பட்டது