ஆண்டி முசியெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்புஆண்ட்ரேசு முசியெட்டி
26 ஆகத்து 1973 (1973-08-26) (அகவை 50)
விசென்டே லோபஸ், பியூனஸ் அயர்சு, அர்கெந்தீனா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
உறவினர்கள்பார்பரா முசியெட்டி (சகோதரி)

ஆண்ட்ரேசு முசியெட்டி (ஆங்கில மொழி: Andrés Muschietti)[1] (பிறப்பு: 26 ஆகத்து 1973) என்பவர் அர்கெந்தீனா நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைக்கதை எழுத்தாளர் நீல் கிராசு மற்றும் இவரது சகோதரி தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பார்பரா முசியெட்டி ஆகியோருடன் இணைந்து 2013 ஆம் ஆண்டு வெளியான 'மம்மா'[2][3][4] என்ற திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த படம் இதே பெயரில் இவர்களின் மூன்று நிமிட திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டடு உருவாக்கப்பட்டது. இவர் 39 வயதில் தயாரித்த இந்தப் படம், அப்போதைய நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றிய கில்லர்மோ டெல் டோரோவின் கவனத்தை இவர் மீது ஈர்த்தது.

இதை தொடர்ந்து இவர் ஈட் திரைப்படத் தொடரில் இரண்டு படங்களையும் இயக்கியதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இவரது முதலாவது படம் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வெளியானது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் படமாக மாறியது.[5] மற்றும் இதன் தொடர்ச்சி யான இரண்டாவது படம் 'ஈட்: சாப்டர் 2' என்ற பெயறில் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் நியூ லைன் சினிமாவால் தயாரிக்கப்பட்டு, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான தி பிளாஷ்[6] என்ற படத்தை எசுரா மில்லர் நடிப்பில் இயக்கியுள்ளார்.[7][8]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2008 மம்மா ஆம் ஆம் குறும்படம்
2013 மம்மா ஆம் ஆம் இயக்குநராக அறிமுகம்
2017 ஈட் ஆம் இல்லை
2019 ஈட்: சாப்டர் 2 ஆம் இல்லை
2023 தி பிளாஷ் ஆம் இல்லை

மேற்கோள்கள்[தொகு]

  1. Murphy, Mekado (September 6, 2017). "Anatomy of a Scene | ‘It’". The New York Times. https://www.nytimes.com/video/movies/100000005411022/anatomy-of-a-scene-it.html. 
  2. Chang, Justin (January 15, 2013). "Mama". Variety.
  3. Rolfe, Pamela (April 17, 2013). "Bittersweet Results for Spanish Box Office in First Quarter". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் July 17, 2013.
  4. Tartaglione, Nancy (May 5, 2013). "Studios Translate Local Language Movies Into Lucrative Global Business". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் July 17, 2013.
  5. Mumford, Gwilym (September 29, 2017). "Stephen King's It scares off The Exorcist to become highest-grossing horror ever". The Guardian. பார்க்கப்பட்ட நாள் October 10, 2017.
  6. D'Alessandro, Anthony (2021-04-16). "Andy Muschietti & Barbara Muschietti Form Production Company Double Dream". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.
  7. Chitwood, Adam (2019-08-29). "'It' Director Andy Muschietti Confirms 'The Flash' Is His Next Movie". Collider (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
  8. "Next FLASH Director Confirmed: IT's ANDY MUSCHIETTI". Newsarama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_முசியெட்டி&oldid=3490292" இலிருந்து மீள்விக்கப்பட்டது