ஜேசன் மோமோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேசன் மோமோவா
Jason Momoa by Gage Skidmore.jpg
2017 சான் டியாகோ காமிக்-கான்பரன்ஸ்-ல் மோமோஆ, அக்வா மேன் கதாப்பாத்திரத்தை ஊக்குவிக்க
பிறப்புஜோசப் ஜேசன் நமக்கேஹா மோமோஆ
ஆகத்து 1, 1979 (1979-08-01) (அகவை 42)
ஆனலூலு, அவாய், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்,தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று
உயரம்1.93 m (6 ft 4 in)[1]
எடை106 கிலோகிராம்கள் (234 lb)[1]
வாழ்க்கைத்
துணை
லிசா போனெட் (தி. 2017)
பிள்ளைகள்3
வலைத்தளம்
jasonmomoa.com

ஜோசப் ஜேசன் நமக்கீஹா மோமோவா (Joseph Jason Namakaeha Momoa, பிறப்பு ஆகத்து 1, 1979) என்பவர் ஒரு அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இராணுவ அறிவியல் தொடரான ஸ்டார்கேட் அட்லாண்டிஸ் (2004-2009) என்ற தொடரில் 'ரோனன் டெக்ஸ்' என்ற கதாப்பாத்திரத்திலும் எச் பி ஓ (HBO) கற்பனைத் தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் (2011-2012)-ல் 'கல் ட்ரோகோ' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

இவர் வாள் மற்றும் மாயாசாலப் படமான கோனான் தி பார்பேரியன் என்ற படத்தில் நடித்தார். மேலும் 2016-ம் ஆண்டு பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்திலும், 2017-ம் ஆண்டு ஜஸ்டிசு லீக் என்ற படத்தில் அக்வா மேன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்தார்.

ரோடு டு பலோமா என்பது மோமோவாவின் முதலில் தயாரித்து இயக்கிய படமாகும். மேலும் முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த இத்திரைப்படம் 2014, சூலை 11 அன்று திரைக்கு வந்தது.[2]

தொடக்க வாழ்க்கை[தொகு]

ஜேசன் மோமோவா 1979-ம் ஆண்டு ஹவாய்-ல் உள்ள ஹானோலுலு என்ற இடத்தில கோனி என்ற புகைப்பட கலைஞருக்கும், ஜோசப் மோமோஆ என்ற ஓவியருக்கும் மகனாக பிறந்தவர் ஆவார்.[3] இவர் தனது தாயின் நார்வே-க்கு கூட்டி செல்லப்பட்டார். இவரது தந்தை ஹவாய்-யை பூர்வீகமாகக்கொண்டவர். இவரது தாயார் செருமானிய, ஐரிய, அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்.[4] பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, மோமோவா அயோவாவில் உள்ள ஒரு கல்லூரியில் கடல் நுண்ணுயிரியலை முதன்மை பாடமாக எடுத்து படித்தார். பிறகு வன உயிரியல் படிப்பதற்காக கொலராடோ பல்கலைக் கழகத்திற்கு இடம் பெயர்ந்தார்.பட்டப் படிப்பை முடிப்பதற்குமுன் அவாய் சென்று அவரது தந்தையிடம் சிறிது காலம் தங்கினார்.[5] இளமைப்பருவத்தில்,மோமோவா பாரிஸ் மற்றும் திபெத் ஆகிய இடங்களுக்கு சென்று வெளிர் வண்ண (pastel painting) ஓவியப்பயிற்சியும், புத்தமதக் கல்வியும் பயின்றார்.[6][7]

வாழ்க்கைப் பயணம்[தொகு]

1998-ம் ஆண்டு டகேயோ கோபயாஷி (Takeo Kobayashi) என்ற சர்வதேச ஆடை வடிவமைப்பாளர் இவரது தோற்றத்தைக்கண்டு மாடலிங் துறைக்குள் நுழைய ஊக்கப்படுத்தினார். 1999-ம் ஆண்டு அவாய் மாடல் ஆப் தி இயர் பட்டத்தை வென்றார். 19-ம் வயதில் அதிரடி தொலைகாட்சி தொடரான பேவாட்ச்:ஹவாய்-ல் ஜேசன் லோன்(1999-2001) என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மேலும் நார்த் ஷோர் (2004),ஜான்சன் பேமிலி வக்கேசன்(2004-2005),தி கேம் (2009),ஸ்டார்கேட் அட்லாண்டிஸ்(2004-2009),கேம் ஆப் த்ரோன்ஸ்(2011-2012) மற்றும் சில தொடர்களில் நடித்துள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

2005-ம் ஆண்டு லிசா போனட் என்ற நடிகையுடன் நட்பு ஏற்பட்டது.[8] 2008-ம் ஆண்டு ஜூலை 23 அன்று லோலா லோலானி என்ற பெண் குழந்தை பிறந்தது.[8]

இவர்கள் 2007,நவம்பர் 15 அன்று திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2017 அக்டோபர் வரை அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.[9] திருமணத்திற்குப்பிறகு லிசா போனடின் மகளான ஜோய் கிராவிட்சுக்கு வளர்ப்புத் தந்தையானார்.[10]

2008, டிசம்பர் 15 அன்று பிறந்த மகனுக்கு நோகோவா எனப் பெயரிட்டார்.[11]

தற்காப்புக் கலைகள்[தொகு]

ஸ்டார்கேட் அட்லாண்டிஸ் தொடருக்காகவும் கோனன் தி பார்பேரியன் படத்திற்காகவும் தற்காப்புக் கலைகளைக் கற்றார்.மேலும் 2017-ம் ஆண்டு ப்ரஜிலியன் ஜீஉ-ஜிட்சு என்ற கலையையும் கற்றார்.[12] and for Conan.[13]

முகத்தழும்பு[தொகு]

2008 நவம்பர் 15 அன்று கலிபோர்னியா-வில் உள்ள ஒரு பாரில் நடந்த சண்டையில் சகவாடிக்கையாளர் இவரைத் தாக்கியதால் இவரது முகத்தில் ஏறத்தாழ 140 தையல் போடப்பட்டது.பிறகு தகுந்த சிகிச்சையின் மூலம் தழும்பு மறைக்கப்பட்டது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Jason Momoa Height Weight Body Statistics". Healthyceleb.com. பார்த்த நாள் January 31, 2017.
 2. "Jason Momoa Talks CONAN; Reveals He’s Writing and Directing Road To Paloma". Collider.com. பார்த்த நாள் August 14, 2013.
 3. Sophia Ahmad (February 19, 2010). "Interview with Norwalk’s ‘Conan’ star Jason Momoa | Des Moines Register Staff Blogs". Blogs.desmoinesregister.com. மூல முகவரியிலிருந்து August 27, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 11, 2014.
 4. Staff (July 19, 2004). "Momoa Makes Hawaii Hot". Extra. Warner Bros.
 5. ""Game of Thrones" Star Jason Momoa – Katie Couric". Katiecouric.com. மூல முகவரியிலிருந்து செப்டம்பர் 4, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 11, 2014.
 6. "Jason Momoa Biography - Yahoo Movies Canada". Ca.movies.yahoo.com. மூல முகவரியிலிருந்து மார்ச் 4, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 11, 2014.
 7. "Jason Momoa Biography". Starpulse.com. பார்த்த நாள் August 11, 2014.
 8. 8.0 8.1 Jason Momoa of 'Conan the Barbarian' talks about his horse fears பரணிடப்பட்டது 2014-06-17 at the வந்தவழி இயந்திரம், August 20, 2011, Olivia Allin, OnTheRedCarpet.com
 9. "Jason Momoa, Lisa Bonet Officially Marry in Secret Wedding" (in en-US). Us Weekly. 2017-11-02. https://www.usmagazine.com/celebrity-news/news/jason-momoa-lisa-bonet-officially-marry-in-secret-wedding/. 
 10. Live, Emily Tess Katz HuffPost (July 9, 2014). "Jason Momoa Gushing About Wife Lisa Bonet Couldn't Be More Adorable".
 11. "Lisa Bonet's New Baby's Name Is a Mouthful – Newborn Boy's Name Is Nakoa-Wolf Manakauapo Namakaeha Momoa". Access Hollywood (via MSNBC) (January 9, 2009). மூல முகவரியிலிருந்து October 3, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 18, 2011.
 12. "Jason Momoa on Martial Arts" (August 14, 2009).
 13. "Jason Momoa Biography".
 14. "Man Pleads Not Guilty To Assaulting 'Stargate Atlantis' Actor". KNBC (January 26, 2009). பார்த்த நாள் August 18, 2011.
 15. "Winton, Richard Los Angeles Times October 7, 2009". பார்த்த நாள் October 15, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_மோமோவா&oldid=3287336" இருந்து மீள்விக்கப்பட்டது