கால் கடோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால் கடோட்
பிறப்புகால் கடோட்
ஏப்ரல் 30, 1985 (1985-04-30) (அகவை 38)
பெடா டிக்வா, இஸ்ரேல்
தேசியம்இசுரேலியர்
பணி
  • நடிகை
  • மாதிரி
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
உயரம்1.78 m (5 அடி 10 அங்)[1]
பட்டம்மிஸ் இசுரேல் 2004
வாழ்க்கைத்
துணை
யாரோன் வர்சனோ (தி. 2008)
பிள்ளைகள்3

கால் கடோட்-வர்சனோ (ஆங்கில மொழி: Gal Gadot-Varsano) (பிறப்பு: ஏப்ரல் 30, 1985) என்பவர் இஸ்ரேல் நாட்டு நடிகை ஆவார். இவர் தனது 18 வயதில் மிஸ் இஸ்ரேல் 2004 என்ற பட்டத்தை வென்றார். பின்னர் இவர் இசுரேலிய பாதுகாப்புப் படையில் போர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு இவர்தனது மாதிரி நடிகை மற்றும் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.[2][3][4]

இவர் 2009 ஆம் ஆண்டு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற திரைப்படத்தில் 'ஜிசெல் யசார்' என்ற கதாபாத்திரம் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து டேட் நைட் (2010), நைட் அண்டு டே (2010), பாசுடு பைவ் (2011), பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 (2013), பியூரியஸ் 7 (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் வொண்டர் வுமன் என்ற கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017),[5][6] ஜஸ்டிஸ் லீக் (2017), வொண்டர் வுமன் 1984 (2020) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் உள்ளூர் ஊடகங்களால் "மிகப்பெரிய இஸ்ரேலிய சூப்பர் ஸ்டார்"[7] என்று அழைக்கப்படும் கடோட் 2018 ஆம் ஆண்டில் டைம் டைம் (இதழ்) மூலம் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார், மேலும் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வருடாந்திர தரவரிசையில் இரண்டு முறை இடம்பிடித்துள்ளார்.[8]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம்
2009 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஜிசெல் யசார்
2010 டேட் நைட் நடான்யா
2010 நைட் அண்டு டே நவோமி
2011 பாசுடு பைவ் ஜிசெல் யசார்
2013 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 ஜிசெல் யசார்
2014 கிக்கிங் அவுட் சொஷ்சனா மிரிட் பென் ஹருஷ்
2015 பியூரியஸ் 7 ஜிசெல் யசார்
2016 பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன்
2016 கிறிமினல் ஜில் போப்
2016 கீப்பிங் அப் வித் தி ஜோனேசெஸ் நாடலீ ஜோன்சு
2016 டிரிப்பில் 9 எலீனா விலாஸ்லாவ்
2017 வொண்டர் வுமன் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன்
2017 ஜஸ்டிஸ் லீக் டையானா பிரிண்சு / வொண்டர் வுமன்
2018 ரால்ப் பிரேக்சு த இன்டர்நெட் ஷாங்க் (குரல்)
2019 பிட்டுவேன் டூ பேர்ன்சு:த மூவி அவராக
2020 வொண்டர் வுமன் 1984 டையானா பிரிண்சு / வொண்டர் வுமன்
2020 டெத் ஆன் த மைல் லின்னெட் ரிட்ஜ்வே-டாயில்
2021 ரெட் நோட்டீஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. Kadmi, Sivan (1 April 2010). "גל גדות" (in he). Ynet இம் மூலத்தில் இருந்து 14 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170914150055/http://www.ynet.co.il/articles/0,7340,L-3868197,00.html. 
  2. Weaver, Caity (15 November 2017). "Gal Gadot Kicks Ass". GQ. https://web.archive.org/web/20190107055731/https://www.gq.com/story/the-gal-gadot-next-door-profile%20 from the original on 7 January 2019. பார்க்கப்பட்ட நாள் 15 November 2017. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. Kadmi, Sivan (1 April 2010). "גל גדות" (in he). Ynet இம் மூலத்தில் இருந்து 14 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170914150055/http://www.ynet.co.il/articles/0,7340,L-3868197,00.html. 
  4. Hirschberg, Lynn. "Gal Gadot Listened to Beyoncé to Prepare for Her Wonder Woman Audition". W. https://web.archive.org/web/20190703080452/https://www.wmagazine.com/story/gal-gadot-wonder-woman-beyonce from the original on 3 July 2019. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017. {{cite web}}: |archive-url= missing title (help)
  5. Fleming, Mike (4 December 2013). "Emerging Star Gal Gadot Set For Wonder Woman In 'Batman Vs. Superman'". Deadline Hollywood. https://web.archive.org/web/20201229034615/https://deadline.com/2013/12/newcomer-gal-gadot-set-for-wonder-woman-in-batman-vs-superman-646905/ from the original on 29 December 2020. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013. {{cite web}}: |archive-url= missing title (help)
  6. "Gal Gadot to Play Wonder Woman in 'Batman vs. Superman'". Variety. 4 December 2013 இம் மூலத்தில் இருந்து 5 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131205155028/http://variety.com/2013/film/news/gal-gadot-wonder-woman-batman-vs-superman-1200918310/. 
  7. Friedman, Gabe. "Could Gal Gadot become the biggest Israeli superstar ever?". The Times of Israel. https://web.archive.org/web/20201229034617/https://www.timesofisrael.com/could-gal-gadot-become-the-biggest-israeli-superstar-ever/ from the original on 29 December 2020. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  8. "Time 100: The Most Influential People of 2018". Time. 19 April 2018. https://web.archive.org/web/20180420015900/http://time.com/collection/most-influential-people-2018/5217578/gal-gadot/ from the original on 20 April 2018. பார்க்கப்பட்ட நாள் 22 April 2018. {{cite magazine}}: |archive-url= missing title (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_கடோட்&oldid=3435547" இலிருந்து மீள்விக்கப்பட்டது