பாசுடு பைவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுடு பைவ் (பாசுடு & பியூரியசு 5[1] அல்லது பாசுடு & பியூரியசு 5: ரியோ ஆய்சுடு[2] எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை அதிரடித் திரைப்படம் ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை ஜசுடின் லின் இயக்கியுள்ளார். 2009இல் வெளியான பாசுடு & பியூரியசு திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், சோர்டானா பிருவிசுடர், டைரீசு கிப்சன், கிறிஸ் லூடாகிரிஸ், மட் இசுக்கல்சு, சுங் காங், டுவெயின் ஜான்சன், கால் கடோட், மற்றும் சோவாகுயிம் டி அல்மெய்டா ஆகியோர் நடித்துள்ளனர். பாசுடு பைவ், அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் டொமினிக் டொரெட்டோ (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.

நடிப்பு[தொகு]

பொலிசினால் தேடப்பட்டும் தொழிமுறை குற்றவாளி, தெரு கார் பந்தய வீரர். டீசல் இத்திரைப்படத்தில் தயாரித்து நடிப்பதில் $15 மில்லியன் பெறுகின்றார்.[3]
குற்றவாளியாக மாறிய ஓய்வு பெற்ற எப்பிஐ அதிகாரி. மியா டொரெட்டோவுடன் காதலன். Walker did many of his own stunts for the film, training with தாண்டோட்ட வல்லுநரான போல் டார்னெலுடன் பயிற்சி பெற்று படத்தின் அதிகமான சண்டைக் காட்சிகளை வால்கர் தானே செய்திருந்தார்.[4]
டொமினிக்கின் தங்கை மற்றும் பிரயானின் காதலி.
பிரயானின் பால்ய சிநேகிதன். கிப்சன் நடிப்பது சூன் 30, 2010இல் உறுதிப்படுத்தப்பட்டது.[6] கிப்சன் பாசுடு பைவ் திரைப்படத்திற்கு நடிக்க ஒப்பமிட்ட நேரம் டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால் இரண்டு படத்தையும் தக்கவைக்க புவேர்ட்டோ ரிகோவிற்கும் அட்லாண்டாவிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியிருந்தது.[7]
மியாமியில் இருக்கும் பிரயானினதும் ரோமானினதும் நண்பன்.லூடாகிரிஸ் இதில் நடிப்பதை சூலை 12, 2010இல் புவேர்ட்டோ ரிகோவில் நடிக்க செல்லுமிடத்தில் உறுதிப்படுத்தினார்.[8]
டொமினிக்கன் பால்ய சிநேகிதன். இசுக்கல்சு முதல் பாகத்தில் நடித்த போதிலும் இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு சூலை 16, 2010லேயே உறுதிப்படுத்தப்பட்டது.[9]
டொமினிக் குடியரசில் டொமினிக்கின் தொழில் கூட்டாளி மற்றும் தெரு கார் பந்தய வீரர்.
அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fast Five". bbfc.co.uk. British Board of Film Classification. ஏப்ரல் 13, 2011. August 25, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 1, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Fast Five Becomes Fast & Furious 5: Rio Heist and Picks Up New Poster". Scannain. July 4, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  3. "Hollywood's Top 40". Vanity Fair. Condé Nast. மார்ச்சு 2011. March 1, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 7, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. Production 2011, ப. 26–27.
  5. Production 2011, ப. 36.
  6. Vejvoda, Jim (ஜூன் 30, 2010). "Tyrese is Still Fast, Still Furious". IGN. News Corporation. July 5, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 11, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. Production 2011, ப. 20.
  8. "This Fast Five Movie Is Getting Ludacris". Latino Review. July 12, 2010. July 5, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 9, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  9. Siegel, Tatiana (July 16, 2010). "'Fast and the Furious' adds to cast". Variety (Reed Business Information). http://www.variety.com/article/VR1118021821. 
  10. Production 2011, ப. 21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடு_பைவ்&oldid=3314867" இருந்து மீள்விக்கப்பட்டது