ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்
திரையரங்கச் சுவரொட்டி
இயக்கம்ஜஸ்டின் லின்
தயாரிப்புநீல் எச். மோரிட்சு
வின் டீசல்
மைக்கேல் ஃபாட்ரெல்
கதைதிரைக்கதை:
கிறிஸ் மோர்கன்]
கதாபாத்திரங்கள்:
கேரி ஸ்காட் தாம்ப்சன்
இசைபிரையன் டைலர்
நடிப்புவின் டீசல்
பால் வாக்கர்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
ஜோர்டானா ப்ரீவ்ஸ்டர்
ஜான் ஓர்டிஸ்
லாஸ் அலோன்சோ
கால் கடோட்
ஒளிப்பதிவுஅமிர் மோக்ரி
படத்தொகுப்புஃப்ரெட் ரஸ்கின்
கிறிஸ்டியன் வாக்னர்
கலையகம்ரிலேட்டிவிட்டி மீடியா
ஒரிஜினல் ஃபிலிம்
ஒன் ரேஸ் ஃபிலிம்ஸ்
யுனிவர்சல் பிக்சர்ஸ்
நீல் எச். மோரிட்சு
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 3, 2009
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$85 மில்லியன் [1]
மொத்த வருவாய்$359,264,265[2]
முன்னர்The Fast and the Furious: Tokyo Drift (2006)

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் , த ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ் 4 என்றும் அழைக்கப்படுகிறது. இது த ஃபாஸ்ட் அண்ட் த ஃப்யூரியஸ் திரைப்பட தொடர்களின் நான்காவது திரைப்படமாகும். இந்த திரைப்படம், அமெரிக்காவில், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்களின் மூல திரைப்படத்துடன் கதைக்கரு தொடர்புடையதாக இருக்கிறது. இதில், வின் டீசல், பால் வாக்கர், மைக்கில் ராட்ரிகுஸ் மற்றும் ஜார்டனா ப்ரூஸ்ட்டர் ஆகியோர் அவர்களுடைய அதே கதாப்பாத்திரத்தில் மறுபடியும் இந்த கதையிலும் தோன்றியுள்ளனர்.[3][4] இந்தத் திரைப்படம், ஜஸ்டின் லின் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. இவர், இந்த தொடர்களின் மூன்றாவது பகுதியையும் இயக்கியுள்ளார்,The Fast and the Furious: Tokyo Drift .

கதைக்கரு[தொகு]

டொமினிகன் ரிபப்ளிக்கில் டொமினிக் டொரெட்டோவும் அவனுடைய குழுவினரும் எரிபொருள் வாகனங்களை கடத்திக்கொண்டு செல்வதாக படம் ஆரம்பிக்கிறது. இந்தக்குழுவில் லெட்டி, ரீகோ, டேகோ மற்றும் ஹான் லூ இருக்கிறார்கள். ஒரு திருட்டிற்குப் பின், டொமினிக் இந்த வழிப்பிராயணம் மிகவும் வெப்பமாக இருப்பதாகவும், ஹான்னிடம் தன்னுடைய “சொந்த வேலையை காணப்போவதற்கு” சரியான நேரம் என்று சொல்கிறார். டோம் அதைத் தொடர்ந்து லெட்டியை வேறு எங்கோ செல்ல விட்டுவிடுகிறார். அவர் பனாமா சிட்டியிலிருக்கும் போது, லெட்டி கொலைசெய்யப்பட்டுவிட்டதாக, டொரெட்டோவிற்கு தன்னுடைய சகோதரி மியா இடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. டோம் லாஸ் ஏஞ்சலேஸ்க்கு மறுபடியும் திரும்பி வந்து லெட்டி பயணம் செய்த காரின் சேதத்தை பரிசோதித்து, அதில் நைட்ரோமீதேனின் தடயங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கிறார். டோம் பிறகு நைட்ரோமீதேன் பயன்படுத்துகின்ற ஒரே கார் மெக்கானிக்கிடம் சென்று, அந்த எரிபொருளை வாங்கியிருந்த டேவிட் பார்க்கின் பெயரை அளிக்க அவரை வற்புறுத்துகிறார்.

இதனிடையில், எஃப்.பி.ஐ ஏஜெண்ட் பிரையன் ஒ’கானர் ஆர்டூரோ பிராகா என்ற ஒரு போதை பொருள் கடத்தல்காரனை பிடிக்க முயற்சிசெய்கின்றார். அவருடைய வேட்டை அவரை டேவிட் பார்க்கிடம் கொண்டு செல்கிறது. டோம் பார்க்குடைய வீட்டிற்கு முதலில் வந்து அவருடைய கணுக்கால்களைப் பிடித்து ஜன்னல் வழியாக அவரைத் தொங்கவிட்டு, பின்னர் விட்டுவிடுகிறார். பார்க்குடைய வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த பிரையன், பார்க்கை காப்பாற்றுகிறார், இதைத் தொடர்ந்து பார்க்க FBIயின் புதிய தகவல் அளிப்பவராகிறார். பார்க்கும் பிரையனும் லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு சாலை பந்தையத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர் ஐக்கிய அமெரிக்காவுக்கும் மெக்ஸிக்கோவிற்கும் பிராகாவுக்காக இடையே ஹெராயின் கடத்தும் ஒரு கும்பலில் கடைசி ஓட்டுநராக இருப்பார். பிரையன் காவலர் பிடிப்பிலிருந்து ஒரு நிஸ்ஸான் ஸ்கைலன் GT-R ஐ (உண்மையில் அது ஒரு மாற்றியமைக்கப்பட்ட GT-T R34 ஆகும்) தேர்ந்தெடுத்து பந்தையத்தில் இறங்குகிறார். டோமும் பந்தையத்திற்குள் இறங்குகிறார். இறுதியில் டோமும் பிரையனும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், டோம் பிரையனின் பின்புறம் உள்ள பாதுகாப்புச் சாதனத்தை இடித்ததால் கார் சுழன்றுவிடுகிறது, டோம் வெற்றிபெறுகிறார். பிரையன் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக அவருக்கு இருக்கும் பலத்தை பயன்படுத்தி, மற்றொரு ஓட்டுனர் ட்வைட் முல்லரை கைதுசெய்து, அணியில் அவருடைய இடத்தைப் பிடிக்கிறார்.

அடுத்த நாள், இந்தக் குழு பிராகாவின் ஆட்களில் ஒருவரான ஃபெனிக்ஸை சந்திக்கிறது. ஃபெனிக்ஸ் தான் லெட்டியை கொலை செய்தாரென்று டோமுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, எல்லையைக் கடந்து நிலத்தடி சுரங்கங்களின் வழியே சென்றார்கள். ஹெராயினை கொண்டு சேர்த்துவிட்ட பின்னர் பிராகா ஓட்டுனர்கள் கொலை செய்யப்படவேண்டும் (பிராகாவை பிடிப்பதற்காக லெட்டியை போலியாக எதிர்முகாமில் வைக்க முடிந்தது; லெட்டி கொலை செய்யப்படும்போது அதற்கு பதிலாக டோமின் விடுதலையைக் கோரினார்) என்று சொல்லியிருந்தது பிரையனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கார்களை விட்டு அனைத்து ஓட்டுனர்களும் வெளியே வரும்போது, ஏதோ தவறு நிகழ்கிறதென்று டோமுக்கு தெரிகிறது, டோமுடைய காரில் இருக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு டேங்குக்கு இணைக்கும் ஒரு குழாயை அவர் அவிழ்த்துவிட்டு சிகரெட் லைட்டரை தயாராக்குகிறார். ஒரு பரபரப்பான சண்டைக்குப் பின், டோமுடைய கார் வெடிக்கிறது. இதனால் பிராகாவின் ஆட்கள் திசை திருப்பப்படுகின்றனர். அந்த நேரத்தில் பிரையன் அமெரிக்க $60 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் உள்ள ஹம்மரை கடத்தி செல்கிறார். இருவரும் ஹெராயினை லாஸ் ஏஞ்சலிஸிக்கு கொண்டு சென்று அதை ஒரு காவலர் கைப்பற்று கிடங்கில் மறைத்து வைக்கிறார்கள். அடுத்த நாள் பிரையன், பிராகாவை வசீகரித்து ஹெராயினுக்காக நேரடியாக கொண்டு வரமுடியுமென்று தன்னுடைய மேலதிகாரிகளிடம் கூறுகிறார், அந்த நேரத்தில் காவலாளர் பிராகாவை கைது செய்யலாமென்று கூறுகிறார். டோமை மன்னித்தால் அவர் அதை செய்வதாகக் கூறுகிறார். ஆனால் மறுபக்கம் பிராகாவாக தோன்றும் மனிதன் ஒரு போலியாக வருகிறான், உண்மையான பிராகாவான காம்போஸ் மெக்ஸிக்கோவுக்குத் தப்பித்துச் செல்கிறான்.

பிரையனும் டோமும் பிராகாவை பிடிப்பதற்காக அவர்களாகவே மெக்ஸிக்கோவுக்கு செல்கிறார்கள். அவரை அவர்கள் ஒரு கிறித்தவ ஆலயத்தில் கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். பிராகாவுடைய முக்கிய கையாட்கள் தங்களுடைய தலைவனை மீட்க பின் தொடர்ந்து வரும்போது, நிலத்தடி சுரங்கங்கள் வழியாக பிரையனும் டோமுக்கு வண்டியை ஓட்டி அமெரிக்காவுக்குத் திரும்புகிறார்கள். இந்த பின் தொடர்வின் கடைசிக் கட்டத்தில், ஃபெனிக்ஸ் சுரங்கத்தின் முடிவில் முன் சென்று பிரையனுடைய காருக்குக் குறுக்கே நிறுத்துவதால் (T-போன் முறையில் மோதல்), பிரையனுடைய கார் மோதி பிரையன் காயமடைகிறார். ஃபெனிக்ஸ் பிரையனை கொலை செய்வதற்கு முன்பாக, டோம் சுரங்க இடிபாடுகளிலிருந்து காரை ஓட்டி வெளியே வந்து ஃபெனிக்ஸ்க்கு நேராக வண்டியை செலுத்தி அவரை கொலை செய்கிறார். காவலாளிகளும் ஹெலிகாப்டர்களும் அமெரிக்கப் பக்கத்தில் மோதிய இடத்திற்கு விரைந்து வரும்போது, பிரையன் டோமை வெளியே வர சொல்கிறார். ஓடி ஓடி களைத்துவிட்டதாக டோம் கூறுகிறார். பிரையன் கருணை கோரி விண்ணப்பித்தும், நீதிபதி டோமுக்கு 25 வருடம் சிறை தண்டனை விதிக்கிறார். சினிமாவின் இறுதி காட்சியில், லோம்போக் சிறைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறைப் பேருந்தில் டோம் ஏறுவதைக் காணமுடிகிறது. சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருக்கும்போது, பிரையன், மியா, ரீகோ மற்றும் டேகோ வந்து அதை நடுவில் நிறுத்துகிறார்கள்.

கதாபாத்திரங்கள்[தொகு]

 • டோமினிக் டொரெட்டோவாக வின் டீசல் : ஒரு ஆட்டோ மெக்கானிக் மற்றும் அமெரிக்காவில் ஒரு உயரிய சாலைப் பந்தைய ஓட்டுனர். டோம், பல செமி-டிரக்குகளை கடத்தியதற்காக காவலர் மூலமாக தேடப்பட்டுவருகிறார். படத்தின் துவக்கத்தில், அவர் டொமினிகன் ரிபப்ளிக்கில் வாழ்ந்து எரிபொருள் டிரக்குகளைக் கடத்த ஒரு பைக் கிராண்ட் நேஷனலை ஓட்டுகிறார். டோம் ஒரு ஷெவ்ரலெ ஷெவெல்லையும் SS ஓட்டுகிறார். மேலும் படத்தின் பின் பகுதியில், முதல் படத்தில் தோன்றின அவருடைய புத்துயிரூட்டப்பட்ட 1970 ஆம் ஆண்டின் டாட்ஜ் சார்ஜர் R/T ஐ (படத்தில் இது உண்மையில், ஒரு வித்தியாசமான முன் கம்பியமைப்பையுடைய மாற்றியமைக்கப்பட்ட 1969 மாடல் ஆகும்) ஓட்டுகிறார். டோம் இறுதியாக தன்னுடைய முன்னாள் பெண் தோழியான லெட்டியின் மரணத்திற்காக, பிராகாவின் ஆட்களை பழிவாங்க லாஸ் ஏஞ்சல்ஸிற்குத் திரும்புகிறார்.
 • பிரையன் ஒ’ கார்னராக பால் வாக்கர் : ஒரு முன்னாள் காவல் அதிகாரி, ஆட்டோ மெக்கானிக் மற்றும் திறமை மிக்க சாலை பந்தய ஓட்டுனர். பிரையன் தற்போது ஒரு FBI ஏஜெண்டாக பணிபுரிந்து மெக்ஸிக்கோவின் போதை பொருள் தலைவனான ஆர்டூரோ பிராகாவை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பிரையன் முதலில் ஒரு நிஸ்ஸான் ஸ்கைலைன் GTT R34ஐ ஓட்டுகிறார், பின்னர் படத்தின் எஞ்சிய பகுதியில் ஒரு சுபாரு இம்ப்ரஸா WRX STI ஓட்டுகிறார்.
 • லெடிஷியா “லெட்டி” ஆர்டிஸாக மிஷல் ராட்ரிகஸ் : படத்தின் துவக்கத்தில் டொமினிகன் ரிபப்ளிக்கில் வாழும் டொமினிக்கின் பெண் தோழி ஆவார். பிராகாவின் நிறுவனத்தால் அவர் கொலை செய்யப்படுவதே டொமினிக்கை பழிவாங்க முடுக்கி விடுகிறது. அவர் ஒரு 1970 பிளிமத் ரோட் ரன்னரை ஓட்டுகிறார்.
 • மியா டொரெட்டோவாக ஜோர்டானா ப்ரூஸ்டர் : டொமினிக்கின் தங்கை; பிரையனின் காதலி. பிராகாவின் வழக்கில் இருவரின் வழிகளும் குறுக்கிடும்போது இருவருடனும் மறுபடியும் சேர்கிறார். மியா ஒரு JDM ஆக மாற்றப்பட்ட ஹோண்டா NSX சை ஓட்டுகிறார்.
 • ராமொன் காம்போஸ்/ஆர்டூரோ பிராகாவாக ஜான் ஆர்டிஸ் : ஆரம்பத்தில் பிராகாவின் நிறுவனத்திற்கு மத்தியஸ்தராக காட்சியளிக்கிறார். ஆனால் ஒரு FBI அறிக்கை அவர் தான் பிராகாவென்று வெளியாக்குகிறது. ஒரு மிகவும் சக்திவாய்ந்த போதை மருந்து கடத்தும் தலைவன், ஹெராயினுடன் அமெரிக்க-மெக்ஸிக்க எல்லையைக் கடக்க சாலை பந்தயக்காரர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.
 • ஃபெனிக்ஸ் கால்டெரானாக லாஸ் அலொன்ஸோ : லெட்டியின் மரணத்திற்கு பொறுப்பான பிராகாவின் கையாள். ஃபெனிக்ஸ் ஒரு ஃபோர்ட் கிரான் டொரினோவை ஓட்டுகிறார்.
 • கிஸல் ஹராபோவாக கால் கேடாட் : பிராகாவுக்கான ஒரு மத்தியஸ்த பெண். ஆனால் டொமினிக் அவருடைய வாழ்க்கையைக் காப்பாற்றி, டொமினிக்கும் பிரையனும் போதை மருந்து கடத்தும் தலைவனை கண்டுபிடிக்க உதவிய பின்பு டொமினிக்குடன் சேர்ந்துகொள்கிறார். கிஸல் ஒரு TechArt GT ஸ்போர்ட் ஓட்டுகிறார்.
 • பென்னிங்காக ஜேக் கான்லி
 • ஹான் லூவாக சுங்க் காங்க் : படத்தின் பின் - தொடர்வு படமான டோக்யோ டிரிஃப்டில் தோன்றி, டொமினிகன் ரிபப்ளிக்கில் டொமினிக்கின் அணியிலிருக்கும் ஒருவர். அனல் குறையும் போது டோக்யோவுக்கு செல்வதாக ஹான் கூறுகிறார். “டோக்யோவில் ஏதோ பிராமதாகச் செய்வதாகக் கேள்விப்படுகிறேன்” என்று ஹான் டோமிடம் கூறுகிறார்.
 • ரீகோவாக டான் ஓமர் , படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் தோன்றுகிறார்.
 • டேகோ வாக டேகோ கால்டெரான் - இவரும் படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் ரீகோவுடன் தோன்றுகிறார்.
 • அலெக்ஸாக பிராண்டன் டி. ஜாக்ஸன்

தயாரிப்பு[தொகு]

இந்த படத்தின் கார்கள் சான் ஃபெர்னாண்டோ வேலியில் காலிஃபோர்னியாவின் தென் பகுதியில் செய்யப்பட்டன. படத்திற்காக சுமார் 240 கார்கள் உருவாக்கப்பட்டன.[5] ஆனால் நகலான வாகனங்கள் அவைகளுடைய உண்மை மாதிரிகளின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிப்பதில்லை. உதாரணத்திற்கு F-பாம்பின் உண்மை வடிவத்தில் ஒரு இரட்டை- சுழலூட்டல், 1500 கு.தி. இயந்திரப் பொறியும், 5-ஸ்பீட் டிரான்ஸ்மிஷனும் இருந்தது. ஆனால் ஹாட் ராட் இதழின் டேவிட் ஃப்ரீபர்கரால் உருவாக்கப்பட்ட 1973 ஷெவ்ரலெ கமாரோவான F-பாம்பின் நகல் வடிவத்தில் ஒரு 300 கு.தி. கிரேட் V8 இயந்திரப் பொறியும், ஒரு 3-ஸ்பீட் தானியங்கி டிரான்ஸ்மிஷனும் இருந்தது. மேலும், முதல் படத்தில் பயன்படுத்தப்பட்ட டாட்ஜ் சார்ஜர் 426 ஹெமி R/T 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட்து; ஆனால் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட 1969 டாட்ஜ் சார்ஜர் R/T 426 ஹெமி சற்று மாற்றியமைக்கப்பட்ட முன் கம்பியமைப்புடன் ஒரு 1970 காரை போன்று தோற்றமளிக்க உருவாக்கப்பட்டது; உண்மையான 1970 டாட்ஜ் சார்ஜர் துண்டுதுண்டானது, இது மறுபடியும் கட்டியெழுப்பப்படுவதற்காக முழுவதும் பிரிக்கப்பட்டது.[6]

இசை[தொகு]

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரிஸ்க்கான இசை பிரையன் டைலரால் இயற்றப்பட்டது, இவர் இந்த இசையை ஹாலிவுட் ஸ்டூடியோ சிம்ஃபனியுடன் நியுமான் ஸ்கோரிங்க் ஸ்டேஜில் 20வது சென்சுரி ஃபாக்ஸில் பதிவு செய்யப்பட்டது.[7] இந்த இசைக்கான தொகுப்பு வெரேஸ் சாராபாண்டே ரெகார்ட்ஸ் மூலமாக 78 நிமிடங்களுக்கான இசையுடன் CD யில் வெளியிடப்பட்டது.

டஸ் இட் அஃபண்ட் யு, யா? என்ற பாடல் குழுவின் “வீ ஆர் இராக்ஸ்டார்ஸ்” என்ற பாடல், திரைப்பட முன்னோட்டங்களில் சிறப்பம்சம் வகித்தது. சோல்யா பாய் டெல் ‘எம் என்ற குழுவால் இயற்றப்பட்டு டிராவிஸ் பார்க்கரால் “கிரான்க் தட்” என்ற பாடல் மறுவடிவம் செய்யப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஸ்டார் டிராக் படத்திற்கான அதிகாரப்பூர்வ ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடல் “பிளான்கோ” என்று பெயரிடப்பட்டது. இது பிட்புல்லால் பாடப்பட்டு, ஃபேர்ரெல் வில்லியம்ஸ் சிறப்புத் தோற்றமளித்தார், இது த நெப்டியூன்ஸ் மூலமாக தயாரிக்கப்பட்டது.[7] ஒலிப்பதிவிலிருந்தான முதல் முன்னோட்ட பாடல் (முதலில் இரண்டாவது பாடலென்று நினைக்கப்பட்டது, ஆனால் பிற்பாடு இடமாற்றப்பட்டது) “கிரான்க் தட்(டிராவிஸ் பார்க்கர் ராக் மறுவடிவமைப்பு)” என்று தலைப்பிடப்பட்டதாகும். இது முதலில் சோல்யா பாயினால் பாடப்பட்டது, ஆனால் இந்த வடிவில் டிராவிஸ் பார்க்கரும் பாடுகிறார். இந்த தொகுப்பில் பிட்புல் பாடி லில் ஜான் சிறப்புத் தோற்றமளிக்கும் இரண்டாவது பாடல் “கிரேஸி” ஆகும். இந்த பாடல் பிட்புல்லுடைய வருங்கால பாடல் தொகுப்பிலும் காட்சியளிக்கிறது. மூன்றாவதும் கடைசியுமான பாடல் ராபின் திக் மூலமாக பாடப்பட்ட “பேட் கர்ல்ஸ்” ஆகும். த நெப்டியூன்ஸால் தயாரிக்கப்பட்ட ஃபேர்ரல் வில்லியம்ஸ் சிறப்புத் தோற்றமளிக்கும் பஸ்டா ரைம்ஸின் “ஜி-ஸ்ட்ரோ” என்ற பாடலும் ஒலிப்பதிவில் சிறப்பிடம் பெறும். இந்த பாடல் பஸ்டா ரைம்ஸின் பேக் ஆன் மை பி.எஸ் ” என்ற பாடல் தொகுப்பின் மீதமுள்ள பாடலாகும், அமேசான் இந்த பாடல் தொகுப்பிற்கு 5 க்கு 3.5 என்ற சராசரியான மதிப்பெண்ணை அளித்து, இது ஸ்பானிஷ்-கருப்பொருள் நிறைந்த பெரும்பாலும் சராசரியான பாடல்களே கொண்ட ஒரு ராப் ஒலிப்பதிவென்று கருத்துக் கூறியது. “கிரான்க் தட்” சேர்க்கப்படாமல் இண்டர்ஸ்கோப்பும் ஸ்டார் டிராக் ரெக்கார்டுகளையும் படத்திற்கான ஒலிப்பதிவை வெளியிட்டன.

கொரியன் குழுவான TVXQவின் “ரைஸிங்க் சன்” என்ற பாடலும் பாடல் தொகுப்பில் விடப்பட்ட மற்றொரு பாடலாகும்.

இந்த படத்தின் ஜப்பானிய வடிவத்தில் ஜப்பானிய ராக் இசைக் குழுவான த கசட்டேயின் “பிஃபோர் ஐ டிகே” என்ற பாடல் இடம்பெறுகிறது.

வரவேற்பு[தொகு]

தொழில்முறையான விமர்சகர்களிடமிருந்து நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகிய இரண்டுமே கலந்த விமர்சனங்கள், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸிற்கு கிடைத்தது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரையிலும், ராட்டன் டொமாட்டோஸ் இணையத்தளத்தில் உள்ள டொமாட்டோமீட்டரில் 28 சதவீதமாகவும்[8], மெட்டாக்ரிட்டிக்கில் 45 சதவீதமாகவும் தரப்படுத்தின.[9] எண்டர்டெயின்மெண்ட் வீக்லி ,[10] த ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ,[11] மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் [12] ஆகியவை அனைத்தும் திரைப்படத்தை புகழ்ந்தன. எனினும், ரோஜர் எமர்ட் என்பவர், முந்தைய திரைப்படங்களுக்கு நேர்மறையான விமர்சனங்களை கொடுத்திருதாலும், இந்த திரைப்படத்திற்கு சாதகமற்ற கருத்துகளை வழங்கினார்: "இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை பார்த்து நான் பிரம்மிப்படைகிறேன், ஆனால் இந்த படம் எனக்கு வித்தியாசமான ஒன்றாகத் தோன்றவில்லை. இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட மூன்று திரைப்படத் தொடர்களும், வீடியோ கேம்களாக மாற்றப்பட்ட பிறகு, நான்காவது ஒன்று எதற்காக எடுக்கப்படவேண்டும்? ஓ. நான் என்னுடைய சொந்த கேள்விக்கே பதிலளித்துவிட்டேன்."[13]

பாக்ஸ் ஆபிஸ்[தொகு]

திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே $30.5 மில்லியன்கள் வசூலைத் தாண்டியது, அந்த வாரத்து வசூலில் $70,950,500 வசூலித்து முன்னிலையில் இருந்தது, இது டோக்கியோ டிரிஃப்ட் தன்னுடைய முழு உள்நாட்டு ஓட்டத்திலுமான வருமானதைவிட ஒரு வாரத்திலேயே அதிகமாக ஈட்டியது.[14] 2009 ஆம் ஆண்டில் வெளியான மற்ற படங்களை விட இந்த படத்திற்கு மிகப்பெரிய முதல் வார இறுதி கிடைத்தது (இருப்பினும், ஸ்டார் ட்ரெக் , X-Men Origins: Wolverine , ஹாரி பாட்டர் அண்டு த ஹாஃப்-பிளட் பிரின்ஸ் , Transformers: Revenge of the Fallen மற்றும் The Twilight Saga: New Moon ஆகியவை இப்படத்தை விட அதிகமாக வசூலித்தது), பெரும்பாலான நிறுவன பார்வையாளர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு அதிகமான வருவாய், இப்படத்தில் கிடைத்தது.[15] ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்களிலேயே, முதல் வார இறுதியில் அதிகமான வருமானத்தை சம்பாதித்த படம் என்ற பட்டம் இதற்கு கிடைத்தது[16]. கார் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாவற்றையும் இந்த திரைப்படம் தோற்கடித்துவிட்டது, இதற்கு முன்னதாக கார்ஸ் என்ற திரைப்படம் $60.1 மில்லியன் வருமானத்தை ஈட்டி சாதனை செய்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி வரையிலும், உள்நாட்டு வசூலில் $155,064,265யும், உலகளவில் $359,264,265யும், இந்த திரைப்படம் வசூலித்தது (இதன் மூலம், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிகவும் வெற்றிபெற்ற திரைப்படமாக இது விளங்கியது). காரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிகவும் அதிகமாக வருமானத்தை ஈட்டிய திரைப்படங்களில், கார்ஸ் என்ற திரைப்படத்திற்கு அடுத்ததாக, இரண்டாம் நிலையில் இந்தத் திரைப்படம் உள்ளது.[17]

வீட்டு உபயோகத்திற்கான வெளியீடு[தொகு]

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் , 2009 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி டிவிடியிலும் ப்ளூ-ரேவிலும் வெளியிடப்பட்டது.[18] இந்த டிவிடி, இரு-வட்டுத் தொகுப்பாக உள்ளது, அவற்றில் உள்ளடங்குபவை:

 • திரைப்படத்தின் டிஜிட்டல் நகல்
 • அண்டர் த ஹூட்: மசில் கார்கள் மற்றும் இறக்குமதிகள்
 • மிகவும் பரப்பான சண்டைக்காட்சிகள்: சண்டைகள்
 • பிக் ரிக் ஹிஸ்ட் என்ற காட்சி
 • வின் டீசலுடன் ஓட்டனர் பயிற்சிப் பள்ளி
 • இதுவரைக்கும் காணப்படாத லாஸ் பண்டோலெராஸ் என்ற குறும்படத்திலுள்ள நிகழ்வுகள் தான் ஃபாஸ் அண்ட் ஃப்யூரியஸின் விறுவிறுப்பான தொடக்கத்திற்கு கொண்டு செல்கிறது. இது வின் டீசலால் எழுதி இயக்கப்பட்டது. இது iTunes ஸ்டோர்களில் இலவச பதிவிறக்கமாக வெளியிடப்பட்டது.

2009 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வரையிலும், 2,900,861 டிவிடிக்கள் விற்கப்பட்டன, இந்த விற்பனையில் $47.82 மில்லியன் வருமானம் கிடைத்தது. உலகளவில் திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்பட்டதில் மொத்தம் $407,085,500 வருமானம் கிடைத்தது..[19]

தொடர்கள்[தொகு]

இதற்கு அடுத்து வரும் தொடர் உருவாக்கத்தில் உள்ளது. "நான் இந்த விஷயத்தைக் குறித்து யூனிவர்சலில் உள்ள செயற்குழுவிடம் பேசியிருக்கிறேன், அவர்கள் இதைப் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்" மற்றும் ஆஸ்திரேலியா அல்லது பிரேசிலில் படப்பிடிப்பு களம் அமைக்கலாம் என்றும் யோசனை கூறினர் என்று பால் வாக்கர் கூறினார்.[20] ஐந்தாவது மற்றும் ஆறாவது திரைப்படங்களையும் ஒரே நேரத்தில் படம்பிடிக்க விரும்புவதாக வின் டீசல் கூறினார்.[21][22]

குறிப்புகள்[தொகு]

 1. http://boxofficemojo.com/movies/?id=fastandthefurious4.htm
 2. http://www.the-numbers.com/movies/2009/FFUR4.php
 3. Merrick (2008-03-06). "Another Familiar Face Is Returning For The New FAST AND THE FURIOUS Film!!". AintItCool.com. 2008-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 4. Chris Beaumont (2008-03-07). "Michelle Rodriguez Joins Walker and Diesel for The Fast and the Furious 4". FilmSchoolRejects.com. 2010-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-09 அன்று பார்க்கப்பட்டது.
 5. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸில் அதிகமான கார்கள் மற்றும் அதிரடிக்காட்சிகள் உள்ளன, எட்மண்ட்ஸ் இன்ஸைட்லைன், 2009 ஆம் ஆண்டு மார்ச் 12ம் தேதி.
 6. த எஃப்-பாம் ட்ராப்ஸ் ஆன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் எட்மண்ட்ஸ் இன்ஸைட்லைன், 2009 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி.
 7. 7.0 7.1 Dan Goldwasser (2009-02-24). "Brian Tyler scores fast and furious with Fast & Furious". ScoringSessions.com. http://www.scoringsessions.com/news/178/. பார்த்த நாள்: 2009-02-24. 
 8. ராட்டன் டொமாட்டோஸ் - ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்
 9. "Fast & Furious". Metacritic.
 10. Schwarzbaum, Lisa (2009-04-01). "Fast & Furious (2009)". Entertainment Weekly.
 11. Honeycutt, Kirk (2009-04-02). "Film Review: Fast & Furious". Hollywood Reporter. 2009-04-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2010-01-04 அன்று பார்க்கப்பட்டது.
 12. Sharkey, Betsy (April 3, 2009). "Video review: Fast & Furious". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/la-et-fastfurious3-2009apr03,0,4338270.story. பார்த்த நாள்: April 6, 2009. 
 13. "Fast & Furious". 2012-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-27 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Daily Box Office for Friday, April 3, 2009". Box Office Mojo.
 15. Rich, Joshua (April 5, 2009). "Fast & Furious shatters box office records". Entertainment Weekly. http://www.cnn.com/2009/SHOWBIZ/Movies/04/05/boxoffice.ew/index.html?section=cnn_latest. பார்த்த நாள்: April 5, 2009. 
 16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-04 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Car films".
 18. "Blu-ray.com – Fast & Furious Blu-ray".
 19. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-04 அன்று பார்க்கப்பட்டது.
 21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-06-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-04 அன்று பார்க்கப்பட்டது.
 22. http://www.eonline.com/uberblog/b118234_enough_in_tank_another_fast_furious.html

புற இணைப்புகள்[தொகு]