உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டிவிடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு (டி.வி.டி)

டிவிடி-ஆர் பக்க படிக்க / எழுத
டிவிடி-ஆர் படிக்கும் / எழுதும் பக்கம்
ஊடக வகைஒளியியல் வட்டு
கொள்திறன்4.7 ஜி.பி. (ஒற்றை-பக்கம், ஒற்றை-அடுக்கு – பொதுவானது)
8.5–8.7 ஜி.பி (ஒற்றை-பக்கம், இரட்டை-அடுக்கு)
9.4 ஜி.பி (இரட்டைப் பக்கம், ஒற்றை-அடுக்கு)
17.08 ஜி.பி (இரட்டை-பக்கம், இரட்டை-அடுக்கு – அரிதானது)
வாசித்தல் தொழிநுட்பம்650 nm லேசர், 10.5 Mbit/s (1×)
பதிவுத் தொழிநுட்பம்10.5 Mbit/s (1×)
Standardடிவிடி கருத்துக்களம் டிவிடி புத்தகங்கள் மற்றும் டிவிடி + ரைட்டர் கூட்டணி குறிப்புகள்

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு அல்லது இறுவட்டு என்பது குறுவட்டுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் தரவுகளைச் சேமிக்கக் கூடியது. (குறைந்த அளவாக 4.5 GB அளவிலான தரவினைச் சேமிக்க வல்லது.) இன்று நிகழ்படங்கள் எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எ (VHS) அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. குறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.

டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் எண்மிய பல்திற வட்டு எனலாம்.

  • 4.7 GB (ஒரு புறம், ஓரடுக்கு -( பொதுவான பயன்பாடு))
  • 8.5–8.7 GB (ஒருபுறம், ஈரடுக்கு)
  • 9.4 GB (இரு புறம், ஓரடுக்கு)
  • 17.08 GB (இரு புறம், ஈரடுக்கு -அரிதான பயன்பாடு) ஆகிய கொள்திறன்களில் இறுவட்டுகள் உள்ளன.

தொழில்நுட்பம்

[தொகு]
DVD-RW Drive operating with the protective cover removed.

பல்திற இறுவட்டு (DVD) 650 நா.மீ (nm) அலைநீளம் கொண்ட சீரொளிக் கற்றையைப் வெளிவிடும் இருமுனையத்தைப் பயன்படுத்துகின்றது. ஆனால் குறுந்தகடு (சிடி), 780 நா.மீ அலைநீளச் சீரொளியைப் பயன்படுத்துகின்றது. பல்திற இறுவட்டு குறைந்த அலைநீள சீரொளியைப் பயன்படுத்துவதால், மிகவும் சிறிய புள்ளியாகக் குவியச்செய்ய இயலும், ஆகவே அதிகமான எண்ணிக்கையில் புள்ளிபோன்று குழிகளை உருவாக்க முடியும் (பல்திற இறுவட்டில் உள்ள புள்ளிகள் 0.74 µm (மைக்குரோ மீட்டர்) அளவினதாகவும், குறுந்தகட்டில் உள்ளவை 1.5 µm மைக்குரோ மீட்டர் அளவினதாகவும் இருக்கும்).

இதை ஒப்பிடும்பொழுது புதிதாக வந்துள்ள புளூ-ரே என்னும் நீலக்கதிர் வட்டு இன்னும் குறைந்த அலை நீளம், 405 நா.மீ கொண்ட சீரொளியைப் பயன்படுத்துகின்றது, இந்த அலைநீளம் நீல நிற ஒளியைத் தருவதால் நீலக்கதிர் வட்டு எனப் பெயர்பெறுகின்றது. இரு படல (dual-layer) வட்டு ஒன்று 50 GB கொள்திறன் கொண்டிருக்கும்.