உள்ளடக்கத்துக்குச் செல்

அகிவா கோல்ட்ஸ்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிவா கோல்ட்ஸ்மேன்
பிறப்புசூலை 7, 1962 (1962-07-07) (அகவை 61)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரெபேக்கா இசுபைக்கிங்சு-கோல்ட்ஸ்மேன்
(தி. 2004; d. 2010)

ஜோன் ரிச்டர்
(தி. 2014)
பிள்ளைகள்2

அகிவா ஜே. கோல்ட்ஸ்மேன் (ஆங்கில மொழி: Akiva J. Goldsman) (பிறப்பு: சூலை 7, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் [[[திரைப்படத் தயாரிப்பாளர்]] ஆவார். இவர் பிரபலமான நாவல்களின் தழுவல்களை தயாரிப்பதில் பெயர் பெற்றவர்.[1]

இவர் திரைக்கதை எழுத்தாளராக தி கிளையண்ட் (1994), பேட்மேன் பெரெவர் (1995), பேட்மேன் & ராபின் (1997), ஐ ரோபோ (2004), சிண்ட்ரெல்லா மேன் (2005) மற்றும் ஐ ஆம் லெஜண்ட் (2007) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டில் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதையும், 2001 ஆம் ஆண்டு வெளியான எ பியூட்டிஃபுல் மைன்டு திரைப்படத்திற்கான சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதையும் பெற்றார், இது சிறந்த படத்திற்கான அகாதமி விருதையும் வென்றது. பின்னர் இவர் 2006 இல் மீண்டும் எ பியூட்டிஃபுல் மைன்டு இயக்குநரான ரான் ஹவர்டு உடன் இணைந்து டான் பிரவின் நாவலான த டா வின்சி கோட் என்ற நாவலை படமாக்கினார்கள். அதை தொடர்ந்து இவர் 2009 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் என்ற படத்திற்காக திரைக்கதையையும் எழுதினார்.

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் டிசி காமிக்ஸ் தொலைக்காட்சித் தொடரான டைட்டன்சு மற்றும் பாரமவுண்ட் பிளஸ் தொடரான இசுடார் இட்ரெக்: பிகார்ட்[2] மற்றும் அதன் தொடரிசியான இசுடார் இட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் மற்றும் இசுடார் இட்ரெக்: நெமசிசு ஆகியவற்றை இணைந்து உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிவா_கோல்ட்ஸ்மேன்&oldid=3485204" இலிருந்து மீள்விக்கப்பட்டது