உள்ளடக்கத்துக்குச் செல்

லோயிசு லேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோயிசு லேன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டிசி காமிக்ஸ்
முதல் தோன்றியதுஆக்‌சன் காமிக்சு #1
(ஜூன் 1938)
உருவாக்கப்பட்டதுஜெர்ரி சீகல்
ஜோ சஸ்டர்
கதை தகவல்கள்
குழு இணைப்புடெய்லி பிளானட்
கேலக்ஸி கம்யூனிகேஷன்சு
பங்காளர்கள்கிளார்க் கென்டு
ஜிம்மி ஓல்சன்
உதவி செய்யப்படும் பாத்திரம்சூப்பர்மேன்
சுபேர்போய்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்சூப்பர்வுமன்
ரெட் டொர்னாடோ

லோயிசு லேன் (ஆங்கில மொழி: Lois Lane) என்பவர் டிசி காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் எழுத்தாளர் ஜெர்ரி சீகல் மற்றும் கலைஞர் ஜோ சஸ்டர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, இவர் முதலில் ஜூன் 1938 இல் வெளியான 'ஆக்‌சன் காமிக்சு #1' என்ற வரைகதை தொகுப்பில் தோன்றினார். இவர் டெய்லி பிளானட்டின் என்ற பத்திரிகையின் விருது பெற்ற பத்திரிகையாளர் மற்றும் மீநாயகன் சூப்பர்மேன் மற்றும் துணை பணியாளர் கிளார்க் கென்டு ஆகியோரின் காதலி ஆவார். மேலும் இவர் டிசி வரைகதை தொகுப்புகளில் சூப்பர்மேனின் மனைவி மற்றும் ஜான் கென்ட் மற்றும் சூப்பர்போய் ஆகியோரின் தாயாராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

லோயிசின் உடல் தோற்றம் முதலில் ஜோ சஸ்டரால் பணியமர்த்தப்பட்ட ஜோன் கார்ட்டரை அடிப்படையாகக் கொண்டது. தனது கதாபாத்திரத்திற்க்காக ஜெர்ரி சீகல் என்பவர் நடிகை கிளெண்டா பாரெலின் என்பவரை கற்பனையான நிருபர் டார்ச்சி பிளேனை தொடர்ச்சியான படங்களில் சித்தரித்ததன் மூலம் ஈர்க்கப்பட்டார். எழுத்தாளர் ஜெர்ரி சீகல் என்பவர் லோயிசு லேன் என்ற பெயரை நடிகை லோலா லேனிடமிருந்தும், நிஜ வாழ்க்கைப் பத்திரிக்கையாளரான நெல்லி பிளை[1] என்பவரையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கினார்.

இந்த கதாபாத்திரம் வரைகதை மற்றும் பிற ஊடகத் தழுவல்களின் சித்தரிப்புகள் மாறுபட்டுள்ளன. ஆதாவது 1970 ஆம் ஆண்டுகிலிருந்து வந்த இவரது பதிப்புகளில் இவர் ஒரு துணிச்சலில்லாத பத்திரிகையாளராகவும், அறிவுரீதியாக சூப்பர்மேனுக்குச் சமமாகவும் சித்தரிக்கபட்டுள்ளது. அதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தொடங்கி எழுத்தாளர் குவெண்டா பாண்டின் என்பவர் லோயிஸ் லேன் என்ற இளம் வயது புதின தொடரில் இவரை கதாநாயகியாக சித்தரித்தார்.

லோயிசு பல்வேறு மீடியா தழுவல்களில் தோன்றினார் மற்றும் சிறந்த அறியப்பட்ட பெண் வரைகதை புத்தக பாத்திரங்களில் ஒருவர் ஆனார். 1940 ஆம் ஆண்டுகளில் வெளியான சூப்பர்மேன் திரைப்படத் தொடர்களில் நடிகை நோயல் நீல் என்பவர் முதன்முதலில் லோயிஸ் லேன் என்ற கதாபாத்திரத்தை சித்தரித்தார், பின்னர் 1950 ஆம் ஆண்டுகளில் ஒளிபரப்பான அட்வென்ச்சர்சு ஆப் சூப்பர்மேன் என்ற தொடரிலும் இவரே மீண்டும் நடித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் ரிட்டர்ன்சு திரைப்படத்தில் கேட் போஸ்வொர்த் என்பவரும் மற்றும் 2016 ஆம் ஆண்டு முதல் வெளியான டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் நடிகை ஏமி ஆடம்சு என்பவரும் நடித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Farghaly, Nadine (2013). Examining Lois Lane: The Scoop on Superman's Sweetheart. Lanham, Maryland: Scarecrow Press, Inc. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810892378.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோயிசு_லேன்&oldid=3502546" இலிருந்து மீள்விக்கப்பட்டது