ஆடம் இசுடிகியேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம் இசுடிகியேல்
பிறப்புஆடம் ஜான் இசுடிகியேல்
சனவரி 9, 1978 (1978-01-09) (அகவை 45)
டிட்ராயிட், மிச்சிகன், அமெரிக்கா
பணி

ஆடம் ஜான் இசுடிகியேல் (ஆங்கில மொழி: Adam John Sztykiel) (பிறப்பு: சனவரி 9, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தொலைக்காட்சி எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 'அண்டட்டேபிள்'[1] என்ற தொடரை உருவாக்கியதன் மூலம் அறியப்படுகிறார்.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இசுடிகியேல் சனவரி 9, 1978 இல் டிட்ராயிட், மிச்சிகனில் பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[4]

தொழில்[தொகு]

இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான 'மேட் ஆப் கோனார்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு டாட் பிலிப்சு இயக்கத்தில் வெளியான 'டு டேட்' என்ற நகைச்சுவை படத்தில் பணிபுரிந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு 'ஆல்வின் அண்ட் சிப்மங்க்ஸ்: தி ரோட் சிப்' என்ற கணினி இயங்குபடம் படத்தில் ராண்டி மாயம் சிங்கர் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதினார். அதை தொடர்ந்து 2021 இல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் ஆடம் என்ற படத்தில் பணிபுரிந்துள்ளார். இந்த படத்தை ஜாமே காலெட்-செர்ரா என்பவர் இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_இசுடிகியேல்&oldid=3489463" இருந்து மீள்விக்கப்பட்டது