டிசி பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசி பிலிம்ஸ்
வகைபிரிவு[1]
வகைமீநாயகன்
நிறுவுகைமே 17, 2016; 7 ஆண்டுகள் முன்னர் (2016-05-17)
நிறுவனர்(கள்)ஜெஃப் ஜான்ஸ்
ஜான் பெர்க்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
  • வால்டர் ஹமாடா (தலைவர்)
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம்
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ். மகிழ்கலை
துணை நிறுவனங்கள்வெர்டிகோ காமிக்ஸ்
இணையத்தளம்dccomics.com/movies

டிசி பிலிம்ஸ் (ஆங்கில மொழி: DC Films) என்பது வார்னர் புரோஸ். பிக்சர்ஸின் ஒரு பிரிவான அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பு ஆகும். இது வார்னர் புரோஸின் கீழ் முதன்மையான திரைப்பட இசுடியோ ஆகும், இது காமிக்ஸின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. டிசி பிலிம்ஸின் தற்போதைய தலைவர் வால்டர் கமாடா ஆவார்.[2]

வரலாறு[தொகு]

பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற திரைப்படத்தின் நல்ல வரவேற்புக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம் என்ற புனைபிரபஞ்சத்தின் கீழ் படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இவ் நிறுவனம் 2016 மே மாதம் மறுசீரமைக்கப்பட்டது. இதனால் வார்னர் பிரதர்ஸ் கீழ் டிசி என்டர்டெயின்மென்ட் உரிமையாளர் திரைப்படங்கள் வந்தன. வார்னர் பிரதர்ஸ் நிர்வாக துணைத் தலைவர் ஜான் பெர்க் மற்றும் டிசி காமிக்ஸ் தலைமை அதிகாரிகளால் 'டிசி பிலிம்ஸ்' என்ற புதிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது. இது மார்வெல் ஸ்டுடியோவின் மார்வெல் திரைப் பிரபஞ்சத்துடன் நேரடியாக போட்டியிடும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டது.[3]

திரைப்படங்கள்[தொகு]

# திரைப்படம் ஆண்டு இயக்குனர் குறிப்புகள்
வெளியிடப்பட்டது
1 சூசைட் ஸ்க்வாட் 5 ஆகஸ்ட் 2016 டேவிட் ஆயர்
2 வொண்டர் வுமன் 2 ஜூன் 2017 பாட்டி யென்கின்சு
3 ஜஸ்டிஸ் லீக் 7 நவம்பர் 2017 சாக் சினைடர்
ஜோஸ் வேடன்
4 அக்வாமேன் 21 டிசம்பர் 2018 ஜேம்ஸ் வான்
5 ஷசாம்! 5 ஏப்ரல் 2019 டேவிட் எப். சாண்ட்பெர்க்கு
6 ஜோக்கர் 4 அக்டோபர் 2019 டாட் பிலிப்சு இது டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லை.
7 பேர்ட்ஸ் ஆஃப் பிரே 7 பிப்ரவரி 2020 காத்தி யான்
8 வொண்டர் வுமன் 1984 25 டிசம்பர் 2020 பாட்டி யென்கின்சு
9 சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் 18 மார்ச்சு 2021 சாக் சினைடர்
10 தி சூசைட் ஸ்க்வாட் 5 ஆகஸ்ட் 2021 ஜேம்ஸ் கன்
11 தி பேட்மேன் 4 மார்ச் 2022 மாட் ரீவ்ஸ் இது டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லை.
வெளியாகவுள்ள திரைப்படங்கள்
12 பிளாக் ஆடம் 21 அக்டோபர் 2022 ஜாமே காலெட்-செர்ரா
13 ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு 21 டிசம்பர் 2022 ஜேம்ஸ் வான்
15 அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் 17 மார்ச் 2023 டேவிட் எப். சாண்ட்பெர்க்கு
16 தி பிளாஷ் 23 ஜூன் 2023 ஆண்டி முசியெட்டி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசி_பிலிம்ஸ்&oldid=3494978" இருந்து மீள்விக்கப்பட்டது