சமுத்திரப்புத்திரன் (படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்வா மேன் ( தமிழ் : சமுத்திரபுத்திரன் ) திரைப்பட தலைப்பு

சமுத்திரப்புத்திரன் 2018ல் வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும்.இப்படம் டீசி காமிக்ஸ் பாத்திரமான சமுத்திரப்புத்திரனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.இப்படத்தை விநியோகித்தவர்கள் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ். DC நீட்டிக்கப்பட்ட யுனிவர்ஸின் (DCEU) ஆறாவது படம் இது. இது ஜேம்ஸ் வான் ஆல் இயக்கப்பட்ட படமாகும். இது ஜியோஃப் ஜான்ஸ், வான் மற்றும் பீல் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஜேசன் மோமோவாவை தலைப்பு பாத்திரமாகக் கொண்டது, அம்பர் ஹியர்ட், வில்லெம் டஃபோ, பேட்ரிக் வில்சன், டால்ப் லுண்ட்க்ரேன், யஹ்யா அப்துல்-மேட்டீன் II மற்றும் நிக்கோல் கிட்மேன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், சமுத்திரப்புத்திரன் அட்லாண்டிஸ் எனும் நீருக்கடியில் உள்ள பேரரசின் வாரிசு எனத் தெரிந்துக் கொண்டப் பின்னர் தனது சகோதரர் ஆர்மிற்கு எதிராக தனது மக்களை வழிநடத்தி முன்னேற வேண்டும் எனும் குறிக்கோள் கொண்டுள்ளார். ஏனெனில் ஆர்ம் மேற்பரப்பு உலகிற்கு எதிராக நீருக்கடியில் உள்ள ஏழு ராஜ்யங்களை ஐக்கியப்படுத்த விரும்புகிறார்.

வரவேற்பு[தொகு]

வசூல்[தொகு]

சமுத்திரப்புத்திரன் படம் அமெரிக்காவிலும் கனடாவிலும் 335.1 மில்லியன் டாலர்களை வசூலித்தது.மற்ற பிராந்தியங்களில் $ 812.6 மில்லியன் என உலகளவில் மொத்தம் $ 1.148 பில்லியன் டாலர்களை வசூலித்தது. உலகளாவிய ரீதியில், இது டீசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மிக அதிமான வசூல் ஈட்டிய படமாகும். [1] [2]

குறிப்புகள்[தொகு]