உள்ளடக்கத்துக்குச் செல்

பேட்கேர்ள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்கேர்ள்
இயக்கம்அடில் எல் ஆர்பி
பிலால் ஃபல்லாஹ்
தயாரிப்புகிறிஸ்டின் பர்
மூலக்கதை
பேட்கேர்ள்
படைத்தவர்
  • கார்ட்னர் பாக்சு
  • கார்மைன் இன்ஃபான்டினோ
திரைக்கதைகிறிஸ்டினா காட்சன்
இசைநடாலி கோல்ட்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் மதிசன்
கலையகம்
விநியோகம்எச்பிஓ மாக்சு
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90 ஆங்கிலம்

பேட்கேர்ள் (ஆங்கில மொழி: Batgirl) என்பது வெளியிடப்படாத அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது பேட்கேர்ள் என்ற டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய மீநாயகன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எச்பிஓ மாக்சு என்ற ஓடிடி தளத்திற்காக அடில் எல் ஆர்பி மற்றும் பிலால் ஃபல்லாஹ் ஆகியோர் இணைந்து உருவாகியுள்ளார்கள்.[1]

இப்படத்தில் லெஸ்லி கிரேசு, ஜே. கே. சிம்மன்சு,[2] பிரெண்டன் பிரேசர், ஜேக்கப் சிபியோ, மைக்கேல் கீட்டன் மற்றும் ஐவரி அக்வினோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் உருவாக்கம் மார்ச்சு 2017 இல் ஜோஸ் வேடனுடன் தொடங்கியது,[3] ஆனால் இவர் ஒரு வருடம் கழித்து இந்த திட்டத்தை கைவிட்டார்.[4] பின்னர் ஏப்ரல் 2018 இல் புதிய திரைக்கதை எழுத கோட்சன் பணியமர்த்தப்பட்டார், மே 2021 இல் படம் எச்பிஓ மாக்சு அசல் திரைப்படம் என உறுதிசெய்யப்பட்டபோது, எல் ஆர்பி மற்றும் ஃபல்லா இயக்குவதற்கு பணியமர்த்தப்பட்டார். ஜூலை மாதம் நடிகை லெஸ்லி கிரேசு[5] என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நவம்பர் 2021 முதல் மார்ச்சு 2022 வரை இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக 2022 இல் எச்பிஓ மாக்சு இல் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 2022 இல் டிசி பிலிம்ஸ் மற்றும் எச்பிஓ மாக்சு இன் தலை நிறுவனமான வார்னர் புரோஸ். டிஸ்கவரி, படம் முடியும் தருவாயில் இருக்கும் போது, இஸ்டுடியோவின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் திரையரங்கு வெளியீடுகளில் கவனம் செலுத்துவதன் காரணமாக இந்த படத்தை வெளியிடத் திட்டமிடவில்லை என்று அறிவித்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Van Gils, Lieven (October 14, 2021). "Adil El Arbi en Bilall Fallah verklappen op Film Fest Gent: "Zo zal onze Batgirl eruitzien"". VRT NWS. Archived from the original on October 15, 2021. பார்க்கப்பட்ட நாள் October 15, 2021.
  2. Kit, Borys; Galuppo, Mia (July 29, 2021). "'Batgirl' Movie: J. K. Simmons in Talks to Return to Batman Universe as Commissioner Gordon (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 29, 2021. பார்க்கப்பட்ட நாள் July 29, 2021.
  3. McNary, Dave (March 30, 2017). "'Batgirl' Movie: Joss Whedon to Direct Standalone Film". Variety. Archived from the original on March 30, 2017. பார்க்கப்பட்ட நாள் September 22, 2019.
  4. Kit, Borys (February 22, 2018). "Joss Whedon Exits 'Batgirl' Movie (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on February 22, 2018. பார்க்கப்பட்ட நாள் September 22, 2019.
  5. Couch, Aaron; Kit, Borys (July 21, 2021). "'Batgirl' Casts 'In The Heights' Star Leslie Grace as Superhero". The Hollywood Reporter. Archived from the original on July 21, 2021. பார்க்கப்பட்ட நாள் July 21, 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்கேர்ள்_(திரைப்படம்)&oldid=3489461" இலிருந்து மீள்விக்கப்பட்டது