பழனி
பழனி | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 10°27′00″N 77°30′58″E / 10.450000°N 77.516100°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
வட்டம் | பழநி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
67,231 (2001[update]) • 10,140/km2 (26,262/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi) • 341 மீட்டர்கள் (1,119 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/palani/ |
பழனி (Palani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சங்ககாலம்
இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.
வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு[4] என்றனர். [5]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,467 ஆகும். அதில் 34,827ஆண்களும், 35,640 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6467 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.71%, இசுலாமியர்கள் 12.4% , கிறித்தவர்கள் 2.44% மற்றும் பிறர் 0.46% ஆகவுள்ளனர்.[6]
வழிபாட்டுத்தலங்கள்
- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்)
- திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடு)[7]
- பெருமாள் கோயில்
- பெரியநாயகி அம்மன் கோயில் (யானைக்கோயில்)[8]
- ரெணகாளியம்மன் கோயில்.
- மாரியம்மன் கோயில்[9]
- பட்டத்து விநாயகர் கோயில்
- பெரியாவுடையார் கோயில்
- இடும்பன் மலைக் போயில்
- பெரிய பள்ளிவாசல்
- சின்ன பள்ளிவாசல்
- அல் ஃபலாஹ் பள்ளிவாசல்
- மஸ்ஜிதுர் ரஹ்மான் (JAQH)
- கன்னி பீவி தர்ஹா பள்ளிவாசல்
- மாமன்பள்ளி தர்ஹா
- வரதாபட்டினம் தர்ஹா
- புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
- புனித பனிமய மாதா சிற்றாலயம்
சுற்றுலாத் தலங்கள்
- கொடைக்கானல்
- சண்முகா நதி
- பாலாறு,பொருந்தலாறு அணை
- அயிரை மலை (ஐவர் மலை) சமணப் பள்ளி
- குதிரை ஆறு அணை
- வரதமா நதி அணை
கல்வி நிறுவனங்கள்
கல்லூரிகள்
- அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
- அருள்மிகு பழனி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
- திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி
- திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி
பல்தொழில் நுட்பப்பயிலகம்
- அருள்மிகு பழனி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
- திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்
பள்ளிகள்
- நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
- ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
- தேவி மேனிலைப் பள்ளி
- புனித ஜோசப் மேனிலைப் பள்ளி
- புனித பால் மேனிலைப் பள்ளி
- சிறுமலர் உயர்நிலைப் பள்ளி
- அக்ஷயா மேனிலைப் பள்ளி
- சிரி ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி
- சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி
- சி.எஸ்.இ உவேக்மென் பள்ளி
- சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளி
- பாரத் வித்யா பவன் மேனிலைப்பள்ளி
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Paḷḷu ilakkiyam
- ↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21
- ↑ [ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]
- ↑ சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்! https://www.vikatan.com/news/spirituality/138120-remedies-to-remove-sani-dosha-temple-in-palani.html
- ↑ "டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை https://www.vikatan.com/news/spirituality/150386-a-story-about-the-periyanayagi-amman-temple-and-the-belief-surrounding-it.html
- ↑ பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி! https://www.vikatan.com/news/spirituality/150237-pazhani-mariyamman-temple-festival.html