2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
20வது பொதுநலவாய விளையாட்டுக்கள்
20வது பொதுநலவாய விளையாட்டுக்கள்
நிகழ் நகரம்கிளாஸ்கோ, இசுக்காட்லாந்து
குறிக்கோள்மக்கள், இடம், பேரவா
(People, Place, Passion)
பங்குபெறும் நாடுகள்71 பொதுநலவாய அணிகள்
நிகழ்வுகள்17 விளையாட்டுக்கள்[1]
துவக்கவிழா23 சூலை[2]
இறுதி விழா3 ஆகத்து
முதன்மை விளையாட்டரங்கம்ஹாம்ப்டென் பூங்கா (தடகள விளையாட்டுக்கள் மற்றும் இறுதிவிழா)
செல்டிக் பூங்கா (துவக்க விழா)
இணையதளம்www.glasgow2014.com

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. முன்னதாக 1970இலும் 1986இலும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எடின்பரோ நகரில் நடந்துள்ள போதிலும் இதுவே இசுக்காட்லாந்தில் நடைபெறவுள்ள மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இருப்பினும் 1997 இறகுப்பந்தாட்ட உலகப்போட்டிகள் உள்ளிட்டு, 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற உள்ள 17 விளையாட்டுக்களிலும் கடந்த பத்தாண்டுகளில் கிளாசுக்கோவும் இசுக்காட்லாந்தும் உலக, பொதுநலவாய, ஐரோப்பிய அல்லது பிரித்தானிய அளவில் போட்டிகளை நடத்தியுள்ளன.[3]

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் 9, 2007இல் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்ற நகர் பெயரை அறிவித்தது.

ஏற்று நடத்தும் நகரத் தேர்வு[தொகு]

இசுக்காட்டிலாந்தின் நகரங்களிடையே போட்டி நடத்தும் உரிமைக்கான கேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டன. குறுக்கப்பட்ட இரு நகரங்களில் 1970, 1986 ஆண்டுகளில் பொதுநலவாய விளையாட்டுக்களையும் 2000இல் பொதுநலவாய இளைஞர் விளையாட்டுக்களையும் ஏற்று நடத்திய எடின்பரோவை விட கிளாஸ்கோ தகுதியுடையதாக செப்டம்பர் 2004இல் கூடிய இசுக்காட்லாந்தின் பொதுநலவாய விளையாட்டுக்கள் சங்கம் செலவு- பயன் பகுப்பாய்வு செய்து தீர்மானித்தது. மாண்புமிகு அரசியின் ஒப்புதலுடனும் இசுக்காட்லாந்தின் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் ஆகத்து 16, 2005இல் கிளாஸ்கோவிற்கு இந்த உரிமையை இசுக்காட்லாந்தின் முதல்வர் வழங்கினார்.[4][5]

கிளாஸ்கோ நகர மையம்.

இதனைத் தொடர்ந்து கிளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பிற்கு மெல்பேர்ணில் நடந்த 2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் போது தனது மனுவை அளித்தது. எதிராக நைஜீரியாவின் தலைநகர், அபுஜாவும் கனடாவின் ஆலிபாக்சும் போட்டியிட்டன.[6] நகராட்சி நிதி பெறுவது மறுக்கப்பட்டநிலையில் ஆலிபாக்சு தனது கேட்புமனுவை மீட்டுக்கொண்டது.[7]

2014 போட்டிகளை நடத்தும் நகரத்திற்கான இறுதித் தேர்வு கொழும்பு, இலங்கையில் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் பொதுச்சபையில் எடுக்கப்பட்டது. இதில் அனைத்து 71 பொதுநலவாய உறுப்பினர் சங்கங்களும் கலந்து கொண்டன. இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு போட்டியிட்ட இரு நகரங்களுக்கிடையே கிளாஸ்கோ தேர்ந்தெடுக்கப்பட்டது.

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஏலக்கேட்பு முடிவுகள்
நகரம் நாடு வாக்குகள்
கிளாஸ்கோ இசுக்கொட்லாந்து 47
அபுஜா நைஜீரியா 24

பங்கேற்கும் நாடுகள்[தொகு]

2014ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் 71 நாடுகள் பங்கேற்றன.[8] அக்டோபர் 7, 2013இல் காம்பியா, பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து விலகியதையடுத்து, இந்த விளையாட்டுக்களில் பங்கேற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.[9]

பங்கேற்கும் பொதுநலவாய நாடுகளும் ஆட்பகுதிகளும்

நிகழ்ச்சி நிரல்[தொகு]

பின்வரும் அட்டவணை போட்டி நிகழ்வுகள் நடைபெறும் நாட்களை காட்டுகின்றது.[54]

முதன்மைக் கட்டுரைகளைக் காண அட்டவணையில் உள்ள நீல இணைப்புகளின்மீது சொடுக்கவும்.

து.வி துவக்கவிழா போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் நி.வி நிறைவு விழா
சூலை/ஆகத்து 23
புத
24
வியா
25
வெள்
26
சனி
27
ஞாயி
28
திங்
29
செவ்
30
புத
31
வியா
1
வெள்
2
சனி
3
ஞாயி
நிகழ்வுகள்
விழாக்கள் து.வி நி.வி
தடகள விளையாட்டுக்கள் 4 7 7 7 9 7 9 50
இறகுப்பந்தாட்டம் 1 5 6
குத்துச்சண்டை 13 11
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் 4 4 5 4 2 2 2 23
நீரில் பாய்தல் 3 2 3 2 10
சீருடற்பயிற்சிகள் 1 1 4 2 2 5 5 20
வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
யுடோ 5 4 5 14
புற்றரை பந்துருட்டு 1 2 2 2 3 10
வலைப் பந்தாட்டம் 1 1
எழுவர் ரக்பி 1 1
சுடுதல் 3 5 2 4 5 19
சுவர்ப்பந்து 2 1 2 5
நீச்சற் போட்டி 6 8 7 7 8 8 44
மேசைப்பந்தாட்டம் 1 1 2 3 7
நெடுமுப்போட்டி 2 1 3
பாரம் தூக்குதல் 2 2 2 2 2 2 2 1 4 19
மற்போர் 5 5 4 14
மொத்த நிகழ்வுகள் 20 22 30 23 27 31 19 25 20 33 11 261
ஒட்டு மொத்தம் 20 42 72 95 122 153 172 197 217 250 261
சூலை/ஆகத்து 23
புத
24
வியா
25
வெள்
26
சனி
27
ஞாயி
28
திங்
29
செவ்
30
புத
31
வியா
1
வெள்
2
சனி
3
ஞாயி
நிகழ்வுகள்

துவக்க விழா[தொகு]

சூலை 23 அன்று பிரித்தானிய சீர்நேரம் 21:00 முதல் 23:40 வரை செல்டிக் பார்க் அரங்கத்தில் நடந்த துவக்க விழாவினை 40,000 பேர் கண்டனர். உலகம் முழுவதுமாக 100 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் கண்டனர்.[55] விளையாட்டுப் போட்டிகளை அரசி எலிசபெத் II துவக்கி வைத்தார். பொதுநலவாயத்தின் கூட்டு இலக்குகளையும் ஆசைகளையும் குறிப்பிட்ட அரசி பொதுநலவாய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளையும் குறிப்பிட்டார்.[56] துவக்கவிழாவில் ரோட் இசுட்டூவர்ட், நிக்கோலா பெனெடெட்டி, ஜூலி ஃபௌலிசு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து செய்தியும் ஒளிபரப்பப்பட்டது. மலேசியா எயர்லைன்சு விமானம் 17 துர்நிகழ்விற்காக ஒரு நிமிட மவுனம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு முழுமையும் நேரலையாக பிபிசி ஒன் ஒளிபரப்பியது.[57]

பதக்கப் பட்டியல்[தொகு]

பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்[தொகு]

தரவரிசைப்படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் மட்டுமே பதக்கப் பட்டியலில் தரப்பட்டுள்ளன. மொத்தம் அனைத்து நாடுகளும் பெற்ற பதக்கங்களின் மொத்தத் தொகையைக் குறிக்கிறது.

பன்னாட்டு ஒலிம்பிக் குழு பதிப்பித்துள்ள பதக்க வரிசை மரபுப்படி இந்த அட்டவணையில் தரவரிசை தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் வென்ற தங்கப் பதக்கங்களின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் வெங்கலப் பதக்கங்கள் அடுத்துமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னரும் இரு நாடுகள் சமநிலையில் இருந்தால் ஒரே தர வரிசை எண்ணுடன் அவர்களின் ப.ஒ.கு மூன்றெழுத்துச் சுருக்கத்தின் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[58][59]

  நடத்தும் நாடு (இசுக்காட்லாந்து)
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  இங்கிலாந்து 58 59 57 174
2  ஆத்திரேலியா 49 42 46 137
3  கனடா 32 16 34 82
4  இசுக்காட்லாந்து 19 15 19 53
5  இந்தியா 15 30 19 64
6  நியூசிலாந்து 14 14 17 45
7  தென்னாப்பிரிக்கா 13 10 17 40
8  நைஜீரியா 11 11 14 36
9  கென்யா 10 10 5 25
10  ஜமேக்கா 10 4 8 22
மொத்தம் 261 261 302 824

விளையாட்டுச் சின்னம்[தொகு]

கிளைடே , ஒரு வகையான முற்செடியின் உருவம் போல விளையாட்டுச் சின்னம் வரையப்பட்டது .[60]

சர்ச்சைகள்[தொகு]

 • இந்தப் போட்டிகளின் அலுவல்முறையான பாடலின் ஒளிதக் காட்சியில் இந்திய தேசியக் கொடி தலைகீழாக பிடிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.[61]

இதையும் காண்க[தொகு]

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sports Programme". 2010-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-25 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2014 Fast Facts
 3. "Candidate City File: Glasgow's credentials (page 121)" (PDF). 2013-07-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 4. Blair enjoys Games as tour begins
 5. "BBC News:Scotland:Final push for Glasgow 2014 Games". BBC News website (BBC News). 5 நவம்பர் 2007. http://news.bbc.co.uk/1/hi/scotland/7077966.stm. பார்த்த நாள்: 14 மே 2010. 
 6. BBC News - Glasgow launches Commonwealth bid
 7. BBC News - Commonwealth bid city pulls out
 8. Brocklehurst, Steven (2013-03-11). "BBC News - Glasgow 2014: What is the Queen's Baton Relay?". bbc.co.uk. 2014-06-19 அன்று பார்க்கப்பட்டது.
 9. "The Gambia withdraw from Glasgow 2014 Commonwealth Games". டெய்லி மெயில். DMG Media. 2013-10-06. 2014-06-19 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Anguilla's Team Selected for the XX Commonwealth Games". anguillacommonwealthgames.com. 30 சூன் 2014. 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Meet Our Glasgow 2014 Chef de Mission!". antiguaolympiccommittee.com/. The Antigua and Barbuda Olympic Association. 27 சூன் 2014. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 12. "69-member contingent to represent B'desh in Commonwealth Games". unbconnect.com/. UB Connect. 25 மே 2014. 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Barbados Commonwealth Games Contingent 2014". www.olympic.org.bb/. Barbados Olympic Association. 13 சூலை 2014. 22 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 14. "12 For Commonwealth Games". 7 News Belize. 15 சூலை 2014. http://www.7newsbelize.com/sstory.php?nid=29273. பார்த்த நாள்: 4 சூலை 2014. 
 15. "Bermuda's 18-strong Commonwealth squad announced". Bermuda Sun. 20 சூன் 2014. Archived from the original on 2018-12-24. https://web.archive.org/web/20181224012407/http://www.bermudasun.bm/Error.aspx?aspxerrorpath=%2FContent%2FSPORTS%2FSports%2FArticle%2FBermuda-s-18-strong-Commonwealth-squad-announced%2F8%2F203%2F78511. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 16. Keetile, Portia (6 சூலை 2014). "Bermuda's 18-strong Commonwealth squad announced". Daily News (Botswana) (காபரோனி, போட்சுவானா: BOPA). Archived from the original on 15 ஜூலை 2014. https://web.archive.org/web/20140715004005/http://www.dailynews.gov.bw/news-details.php?nid=12674. பார்த்த நாள்: 7 சூலை 2014. 
 17. "10 Athletes For Glasgow Commonwealth Games". Virgin Islands Platinum News. 7 சூலை 2014. http://www.bviplatinum.com/news.php?articleId=1404478795. பார்த்த நாள்: 7 சூலை 2014. 
 18. Vubemtoh, Fred (8 சூலை 2014). "Cameroonian Athletes In Aberdeen For Commonwealth Games". Cameroon Tribune. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224012300/https://www.cameroon-tribune.cm/index2.php/index.php?option=com_content&view=article&id=82783:cameroonian-athletes-in-aberdeen-for-commonwealth-games&catid=6:sport&Itemid=3%20. பார்த்த நாள்: 8 சூலை 2014. 
 19. "Susan Nattrass named Commonwealth Games flag-bearer". CBC Sports (ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா: CBC). 26 சூன் 2014. http://www.cbc.ca/sports/susan-nattrass-named-commonwealth-games-flag-bearer-1.2688555. பார்த்த நாள்: 26 சூன் 2014. 
 20. Anderson, Gary (30 மே 2014). "Cayman Islands names biggest ever Commonwealth Games squad for Glasgow 2014". Insidethegames (Insidethegames.biz). http://www.insidethegames.biz/commonwealth-games/2014/1020425-cayman-islands-names-biggest-ever-commonwealth-games-squad-for-glasgow. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 21. "Cook Islands 2014 Commonwealth Games Team". www.cookislands.org.uk/. 29 நவம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 22. Anderson, Gary (18 மே 2014). "Falkland Islands names largest ever squad as 25 athletes set to compete at Glasgow 2014". Insidethegames (Insidethegames.biz). http://www.insidethegames.biz/commonwealth-games/2014/1020141-falkland-islands-names-largest-ever-squad-as-25-athletes-set-to-compete-at-glasgow-2014. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 23. "Fiji confirms names for Commonwealth Games", FijiLive, 6 June 2014
 24. "Jul 14 - Team Gibraltar to Take on the Commonwealth Games". hhttp://www.yourgibraltartv.com/. 14 சூலை 2014. 14 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)
 25. "Kirani James leads 16-member Grenada team to Commonwealth Games". Jamaica Observer (செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா). 10 சூலை 2014. Archived from the original on 29 ஜனவரி 2017. https://web.archive.org/web/20170129185514/http://www.jamaicaobserver.com/news/Kirani-James-leads-16-member-Grenada-team-to-Commonwealth-Games. பார்த்த நாள்: 10 சூலை 2014. 
 26. "Glasgow 2014: Guernsey name Commonwealth Games team". பிபிசி. 12 சூன் 2014. http://www.bbc.com/sport/0/commonwealth-games/27808274. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 27. "GOA names team for 2014 Commonwealth Games". SportsDesk. 23 சூன் 2014. Archived from the original on 5 ஜனவரி 2019. https://web.archive.org/web/20190105181032/http://www.sportsdeskgy.com/goa-names-team-2014-commonwealth-games/%20. பார்த்த நாள்: 25 சூன் 2014. 
 28. "India to send 224 athletes in Glasgow Commonwealth Games". Deccan Herald. 11 சூலை 2014. http://www.deccanherald.com/content/419126/india-send-224-athletes-glasgow.html. பார்த்த நாள்: 11 சூலை 2014. 
 29. Anderson, Gary (18 மே 2014). "Cyclists Cavendish and Kennaugh head largest ever Isle of Man squad for Glasgow 2014". Insidethegames (Insidethegames.biz). http://www.insidethegames.biz/commonwealth-games/2014/1020042-cyclists-cavendish-and-kennaugh-head-largest-ever-isle-of-man-squad-for-glasgow-2014. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 30. "114-member team for Commonwealth Games". Jamaica Observer (Kingston, ஜமேக்கா). 3 சூலை 2014. Archived from the original on 14 ஜூலை 2014. https://web.archive.org/web/20140714232947/http://www.jamaicaobserver.com/latestnews/114-member-team-for-Commonwealth-games. பார்த்த நாள்: 3 சூலை 2014. 
 31. "Le Couilliard to carry Jersey flag". Channel Online Tv. 3 சூலை 2014. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224012243/http://www.channelonline.tv/channelonline_jerseynews/DisplayArticle.asp?ID=511749. பார்த்த நாள்: 7 சூலை 2014. 
 32. Singh, Aftar (11 சூன் 2014). "Nicol to lead Asia, Chong Wei to lead M'sia at CWG". The Star (Malaysia). http://www.thestar.com.my/Sport/Other-Sport/2014/06/11/Nicol-to-lead-Asia-Chong-Wei-to-lead-Msia-at-CWG/. பார்த்த நாள்: 26 சூன் 2014. 
 33. "Commonwealth Games 2014". www.nocmaldives.org/. Maldives Olympic Committee. 2 சூன் 2014. 25 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 34. "35 Namibian athletes to Commonwealth Games". The Namibian. 7 சூலை 2014. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224012405/https://www.namibian.com.na/indexx.php?id=15006&page_type=story_detail&category_id=4. பார்த்த நாள்: 7 சூலை 2014. 
 35. "Team complete with hockey naming". New Zealand Olympic Committee. 8 சூலை 2014. 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 36. Abbasi, Kashif (23 சூன் 2014). "Northern Ireland sends biggest ever team to Commonwealth Games". The News Letter (பெல்பாஸ்ட், வட அயர்லாந்து). Archived from the original on 7 ஆகஸ்ட் 2014. https://web.archive.org/web/20140807021235/http://www.newsletter.co.uk/news/northern-ireland-sends-biggest-ever-team-to-commonwealth-games-1-6137451. பார்த்த நாள்: 25 சூன் 2014. 
 37. "Inam eyes repeat of gold feat in Glasgow". Dawn (இஸ்லாமாபாத், பாக்கித்தான்). 12 சூலை 2014. http://www.dawn.com/news/1118599/inam-eyes-repeat-of-gold-feat-in-glasgow. பார்த்த நாள்: 12 சூலை 2014. 
 38. "Team PNG Set To Make Their Mark Offshore". EM TV. 19 சூன் 2014. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224012356/https://emtv.com.pg/news-app/item/team-png-set-to-make-their-mark-offshore. பார்த்த நாள்: 25 சூன் 2014. 
 39. Mugabe, Bonnie (18 சூன் 2014). "Rwanda: RNOC Pick Team for Glasgow Games". AllAfrica.com. 25 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
 40. "St Helena Team Leaves for Commonwealth Games". St. Helena Independent: p. 3. 11 சூலை 2014. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224012345/http://www.saint.fm/wp-content/uploads/2014/07/St-Helena-Independent-20140711.pdf. பார்த்த நாள்: 11 சூலை 2014. 
 41. "Twelve to represent St Kitts and Nevis at Commonwealth Games". grenadasports.gd/. 7 சூலை 2014. 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 42. "St.Lucia has its largest contingent yet to the Commonwealth Games". www.caribbeanhotfm.com/. 12 சூலை 2014. 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 43. "SVG Names Team for Commonwealth Games". grenadasports.gd/svg-names-team-commonwealth-games/. 9 சூலை 2014. 14 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 44. "Sport: Samoa eyes record haul in Glasgow". www.radionz.co.nz/. Radio New Zealand International. 2 சூலை 2014. 2 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 45. Anderson, Gary (12 சூன் 2014). "Hosts Scotland reveal final names in largest ever Commonwealth Games squad for Glasgow 2014". Insidethegames (Insidethegames.biz). http://www.insidethegames.biz/commonwealth-games/2014/1020700-hosts-scotland-reveal-final-names-in-largest-ever-commonwealth-games-squad-for-glasgow-2014. பார்த்த நாள்: 22 சூன் 2014. 
 46. Yong Teck, Lim (2 சூலை 2014). "Dual-contingent flag presentation ceremony mark start of Singapore’s 2014 Commonwealth Games and YOG journey". Red Sports. http://www.redsports.sg/2014/07/02/teamsg-flag-presentation/. பார்த்த நாள்: 2 சூலை 2014. 
 47. "Sport: Solomon Islands confident of winning first Commonwealth medal". www.radionz.co.nz/. Radio New Zealand International. 9 சூலை 2014. 11 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 48. Jackman, Rebecca (16 சூலை 2014). "SA’s finest off to Commonwealth Games". Daily News. http://www.iol.co.za/dailynews/news/sa-s-finest-off-to-commonwealth-games-1.1720734#.U8bOYvldWuI. பார்த்த நாள்: 16 சூலை 2014. 
 49. Wasala, Chinthana (27 சூன் 2014). "Nishanthe Piyasena appointed Chef-de Mission". Daily News (Sri Lanka). Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224013736/http://www.dailynews.lk/?q=sports%2Fnishanthe-piyasena-appointed-chef-de-mission%20. பார்த்த நாள்: 3 சூலை 2014. 
 50. "Sport: Tonga pin Commonwealth hopes on boxing repeat". www.radionz.co.nz/. Radio New Zealand International. 13 சூலை 2014. 13 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 51. "Team Uganda Members To Get UGX 2.1M Commonwealth Games Allowance". ugandaradionetwork.com/. Uganda Radio Network. 3 சூலை 2014. 7 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 52. "Family matters for Vanuatu's Commonwealth Games Team". www.radioaustralia.net.au/. Radio Australia. 9 சூலை 2014. 10 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 53. Southcombe, Matthew (4 சூலை 2014). "Commonwealth Games 2014: The team has been finalised - meet the athletes who will represent Wales in Glasgow". WalesOnline (Media Wales). http://www.walesonline.co.uk/sport/other-sport/athletics/commonwealth-games-2014-team-been-7371057. பார்த்த நாள்: 4 சூலை 2014. 
 54. "Full competition schedule" (PDF). Glasgow 2014 Ltd. 7 அக்டோபர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 செப்டம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
 55. "BBC News - Glasgow 2014: Commonwealth Games begin at Celtic Park". bbc.com. 2014-07-23. 2014-07-24 அன்று பார்க்கப்பட்டது.
 56. Duncanson, Hilary (23 சூலை 2014). "Queen tells of 'shared ideals' at Commonwealth Games opening ceremony". Irish Independent. Press Association (Dublin: Independent News & Media). http://www.independent.ie/world-news/europe/queen-tells-of-shared-ideals-at-commonwealth-games-opening-ceremony-30455671.html. பார்த்த நாள்: 24 சூலை 2014. 
 57. "BBC One - Commonwealth Games, Glasgow 2014, Opening Ceremony". bbc.co.uk. 23 சூலை 2014. 23 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
 58. "Medal Table - Glasgow 2014 - BBC Sport". 2014-07-16. http://www.bbc.co.uk/sport/commonwealth-games/2014/medals/countries. 
 59. "Medal Table - Glasgow 2014 Commonwealth Games". Glasgow 2014. 2014-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 60. "Thistle man Clyde is Glasgow Commonwealth Games mascot". BBC News Glasgow and West Scotland (British Broadcasting Corporation (BBC)). 20 செப்டம்பர் 2012. http://www.bbc.co.uk/news/uk-scotland-glasgow-west-19651062. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2012. 
 61. "காமன்வெல்த் போட்டி அதிகாரப்பூர்வ பாடல் வீடியோவில் தலைகீழாக இந்திய தேசிய கொடி Read more at: http://tamil.oneindia.in/news/international/indian-flag-upside-down-commonwealth-games-2014-official-song-video-206841.html". சிவா. ஒன்இந்தியா. 24 சூலை 2014. 24 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]


முன்னர்
புது தில்லி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
நிகழ்நகரம்
XX பொதுநலவாய விளையாட்டுக்கள்
பின்னர்
கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து