பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு
Commonwealth Games Federation seal.svg
பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின்
சின்னம்
சுருக்கம்CGF
குறிக்கோள் உரைமனிதம் – சமத்துவம் – ஊழ்
முன்னோர்பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு
உருவாக்கம்1932
பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் கூட்டமைப்பாக
தலைமையகம்இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
உறுப்பினர்கள்
71 பொதுநலவாய விளையாட்டுச் சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
அரச மாண்புமிகு இளவரசர் துங்கு இம்ரான்
துணைத்-தலைவர்/கள்
  • புரூசு இராபர்ட்சன்
  • கிடியோன் சாம்
புரவலர்
அரச மாண்புமிகு அரசி எலிசபெத் II
துணைப்-புரவலர்
அரச மாண்புமிகு இளவரசர் எட்வர்டு
வலைத்தளம்அலுவல்முறை வலைத்தளம்
பொதுநலவாய விளையாட்டுக்கள் இயக்கம் மற்றும் கூட்டமைப்பின் கொடி

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு (Commonwealth Games Federation, CGF) பொதுநலவாய விளையாட்டுக்களை கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் உருவான பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்த அனைத்து விடயங்களுக்கும் இந்த அமைப்பே பொறுப்பானதாகும்.

அமைப்பு[தொகு]

இக்கூட்டமைப்பு பொதுச்சபை மற்றும் செயல் வாரியம் மூலம் செயல்படுகிறது[1]:

பொதுச்சபை[தொகு]

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் முழுமையான அதிகாரமும் பொறுப்பும் பொதுச்சபைக்கு உள்ளது. எந்த நகரமும் எந்த உறுப்பினர் சங்கமும் விளையாட்டுக்களை ஏற்று நடத்தும் போன்ற முடிவுகளை வாக்கெடுப்பின் மூலம் எடுக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு உள்ளது. ஒவ்வொரு உறுப்பினர் நாட்டின் 'பொதுநலவாய விளையாட்டுச் சங்கத்திற்கும்' (CGA) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்பாளர்கள் இப்பொதுச்சபையில் அங்கம் வகிக்கின்றனர்; தவிர செயல் வாரிய உறுப்பினர்கள், துணைப் புரவலர், வாழ்நாள் துணைத் தலைவர்கள் ஆகியோரும் இப்பொதுச்சபை உறுப்பினர்கள் ஆவர்.

பொதுச்சபையின் அமர்வுகளுக்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் தலைவர் தலைமை தாங்குகிறார். வாக்கெடுப்புகளில் அவைத்தலைவருக்கும் ஒவ்வொரு பொதுநலவாய விளையாட்டுச் சங்கத்திற்கும் ஒரு வாக்கு உண்டு. துணைப்-புரவலர், வாழ்நாள் துணைத்-தலைவர்கள், செயல் வாரியம், ஒரு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைக்கும் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரால் அழைக்கப்பட்ட நோக்காளர்கள் சபை விவாதங்களில் பங்கேற்கலாம்; ஆனால் வாக்களிக்க இயலாது.

செயல் வாரியம்[தொகு]

பொதுச்சபையின் உறுப்பினர் சங்கங்களின் சார்பாளர்களால் செயல் வாரியம் அமைக்கப்படுகிறது; இது விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் பொதுச்சபை சார்பாக அதன் அதிகாரத்துடன் இயங்குகிறது. செயல்வாரியத்தில் பணிநிமித்தம் துணைப்-புரவலர் (தற்போது, இளவரசர் எட்வர்டு), தலைவர், கூட்டமைப்பின் ஆறு அலுவலர்கள் மற்றும் கூட்டமைப்பின் ஆறு மண்டலங்களின் (ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், ஆசியா, கரிபியன், ஐரோப்பா, ஓசியானியா) சார்பாக அந்த மண்டலங்களின் துணைத்தலைவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

செயல் வாரிய உறுப்பினர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; சிலர் நியமிக்கப்படுகின்றனர். பொதுவாக தாங்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து அடுத்த பொதுநலவாய விளையாட்டுக்கள் முடிந்து அடுத்தாண்டு பொதுச்சபை அமர்வு கலையும் வரை பணி புரிகின்றனர். சிலர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் அல்லது மீண்டும் நியமிக்கப்படலாம். துணைப்-புரவலர் பொதுச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது வாழ்நாள் முழுமையும் பணியில் உள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "ARTICLE 12". பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. பார்த்த நாள் 12 சூலை 2014.

வெளி இணைப்புகள்[தொகு]