இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள் (BWF World Championships, முன்னதாக IBF World Championships) அல்லது உலக இறகுப்பந்தாட்ட போட்டிகள் உலகின் தலைசிறந்த இறகுபந்தாட்ட வீரர்களாக முடிசூட்ட இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (பிடபுள்யூஎஃப்) நடத்தும் போட்டிப்பந்தயங்கள் ஆகும். இந்தப் போட்டிகள் 1977இல் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1983 வரை நடத்தப்பட்டன. 1985ஆம் ஆண்டுமுதல் 2005 வரை இந்தப் போட்டிகள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2006ஆம் ஆண்டிலிருந்து இது ஆண்டுக்கொருமுறை நடத்தப்பெறும் போட்டிகளாக மாற்றப்பட்டன.

இருப்பினும், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் ஆண்டுகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுவதில்லை.

உலகப் போட்டிகள் நடைபெற்ற இடங்கள்[தொகு]

கீழே உள்ள அட்டவணையில் உலகப் போட்டிகள் நடைபெற்ற அனைத்து நகரங்கள் மற்றும் நாடுகளைப்பட்டியளிடுகின்றது:

2014 வரை உலகப்போட்டிகள் நடைபெற்ற நாடுகள்
ஆண்டு எண் நகரம் நாடு
1977 I மால்மோ (1)  சுவீடன் (1)
1980 II ஜகார்த்தா (1)  இந்தோனேசியா (1)
1983 III கோபனாவன் (1)  டென்மார்க் (1)
1985 IV கால்கரி (1)  கனடா (1)
1987 V பெய்ஜிங் (1)  சீனா (1)
1989 VI ஜகார்த்தா (2)  இந்தோனேசியா (2)
1991 VII கோபனாவன் (2)  டென்மார்க் (2)
1993 VIII பர்மிங்காம் (1)  இங்கிலாந்து (1)
1995 IX லோசான் (1)  சுவிட்சர்லாந்து (1)
1997 X கிளாஸ்கோ (1)  இசுக்காட்லாந்து (1)
1999 XI கோபனாவன் (3)  டென்மார்க் (3)
ஆண்டு எண் நகரம் நாடு
2001 XII செவீயா (1)  எசுப்பானியா (1)
2003 XIII பர்மிங்காம் (2)  இங்கிலாந்து (2)
2005 XIV Anaheim (1)  ஐக்கிய அமெரிக்கா (1)
2006 XV மத்ரித் (1)  எசுப்பானியா (2)
2007 XVI கோலாலம்பூர் (1)  மலேசியா (1)
2009 XVII ஐதராபாத்து (1)  இந்தியா (1)
2010 XVIII பாரிஸ் (1)  பிரான்சு (1)
2011 XIX இலண்டன் (1)  இங்கிலாந்து (3)
2013 XX குவாங்சோ (1)  சீனா (2)
2014 XXI கோபனாவன் (4)  டென்மார்க் (4)

வெளி இணைப்புகள்[தொகு]