பயனர் பேச்சு:Chandravathanaa

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1

வாருங்கள்!

வாருங்கள், Chandravathanaa, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


வாருங்கள் சந்திரவதனா! நல்வரவு. நீங்கள் வலைப்பதியும் சந்திரவதனாவா?...--Natkeeran 22:52, 5 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நற்கீரன். நான் வலைபதியும் சந்திரவதனாதான்.

நன்று. உங்களை பற்றிய சில தகவல்களையும், வலைப்பதிவுகளுக்கான சுட்டியையும் பயனர் பக்க தொகு தத்தலை செருகி தந்தால் பிற பயனர்களும் உங்களை பற்றி மேலும் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --Natkeeran 05:00, 8 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நற்கீரன். சேர்க்கிறேன்.

உங்களை விக்கிப்பீடியாவில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் --மு.மயூரன் 07:37, 10 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி மயூரன். உங்களை இங்கு சந்திக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.--Chandravathanaa 09:35, 10 ஏப்ரல் 2006 (UTC)

கொக்கான்[தொகு]

hi ka, could u please look at பேச்சு:கொக்கான் and try what u can do. thanks--ரவி 17:41, 10 ஏப்ரல் 2006 (UTC)

வருக[தொகு]

வருக சந்திரவதனா. உங்களின் வலைப்பதிவுகளைப் படித்துள்ளேன். மகளிர் மற்றும் தாய்மை தொடர்புடைய பல கட்டுரைகளை நீங்கள் உருவாக்கி மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக, வலைப்பதிவுகளை உசாத்துணைகளாகவோ, வெளி இணைப்புகளாகவோ விக்கிப்பீடியாவில் தருவது ஊக்குவிக்கப்படுவதில்லை. இருந்தும், தகவல் செரிவு காரணமாக சீம்பால் கட்டுரையிலிருந்து உங்கள் வலைப்பதிவிற்கு இணைப்பு தந்துள்ளேன். :-) -- Sundar \பேச்சு 08:59, 11 ஏப்ரல் 2006 (UTC)


நன்றி சுந்தர், எதிர்வரும் காலங்களில் எனக்குக் கிடைக்கும் நேரங்களைப் பொறுத்து என்னாலான பங்களிப்புக்களைக் கண்டிப்பாகச் செய்கிறேன்.--Chandravathanaa 08:40, 13 ஏப்ரல் 2006 (UTC)

article expansion request[தொகு]

akka, it will be nice if u could expand the article ஜெர்மனி as u r in that country for quite sometime. thanks in advance :)--ரவி 18:38, 22 ஏப்ரல் 2006 (UTC)

கந்தையா குமாரசாமி[தொகு]

--Natkeeran 07:46, 21 பெப்ரவரி 2007 (UTC)

FARC[தொகு]

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

நூற் பெயர்[தொகு]

குறித்த நூலின் பெயரே நிழல்கள் (சிறுகதைகளும் குறுநாவலும்) என்பதுதானா அல்லது நிழல்கள் என்பதா? --கோபி 21:31, 30 ஏப்ரல் 2007 (UTC)


வணக்கம் கோபி நூலின் பெயர் நிழல்கள்.

அப்படி எழுதிய போது அது நிழல்கள் என்ற படத்துக்குப் போகிறது. அதனாலேயே சிறுகதைகளும் குறுநாவலும் என்பதைச் சேர்த்து இணைப்பைக் கொடுத்தேன்.--Chandravathanaa 22:09, 30 ஏப்ரல் 2007 (UTC)

பொதுவாக நூலின் பெயர் (நூல்) என்று தலைப்பு வைக்கலாம். எ-கா நிழல்கள் (நூல்).--Kanags 21:39, 30 ஏப்ரல் 2007 (UTC)

நிழல்கள் (நூல்) என்பதற்குக் குறித்த கட்டுரையை நகர்த்தியுள்ளேன். கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்கள் சரியா என்று பாருங்கள்.குறித்த நூல் உங்களிடமிருந்தால் பக்க எண்ணிக்கை போன்ற தகவல்களையும் இணைக்கலாம். நன்றி. --கோபி 21:41, 30 ஏப்ரல் 2007 (UTC)

மேலும் சந்திரா இரவீந்திரன் (சந்திரா தியாகராஜா) என்ற கட்டுரையை சந்திரா இரவீந்திரன் என்பதாக நகர்த்திவிட்டு சந்திரா தியாகராஜா என்பதை வழிமாற்றிப்பக்கமாக்கியுள்ளேன். மாற்றங்களைச் சரிபார்த்துப் பிழைகள் இருந்தால் திருத்தியுதவுங்கள். நன்றி. --கோபி 21:43, 30 ஏப்ரல் 2007 (UTC)

புத்தகம் என்னிடம் இருக்கிறது. மேலதிக தகவல்களையும் இணைக்கிறேன். --Chandravathanaa 22:09, 30 ஏப்ரல் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு[தொகு]

மீண்டும் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் இப்பொழுது ஐரோப்பாவிலா இருக்கின்றீர்கள்? அங்கு நிறைய தமிழ் ஆர்வலர்கள் இணைய வசதிகளுடன் இருந்தாலும் த.வி வில் பங்களிப்பு மிகவும் குறைவு. நீங்கள் பல களங்களில் இயங்குவதால், த.வி பற்றி சற்று எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 02:01, 1 மே 2007 (UTC)

ஐரோப்பியாவில்(ஜேர்மனியில்)தான் இருக்கிறேன். முடிந்தவரை எடுத்துரைக்க முயல்கிறேன் --Chandravathanaa 06:02, 1
மே 2007 (UTC)

அக்கா, மீண்டும் நல்வரவு. தங்களின் http://www.selvakumaran.de/index2/kathai/ammavukku.html படித்தேன் நன்றாகவுள்ளது. பின்னூட்டமிடும் வசதி தற்போது இல்லை. விண்டோஸ் கணினிகளில் வைரஸ் பிரச்சினை ஏற்பட்டால நொப்பிக்ஸ் லினக்ஸ் ஊடாக கணினியை ஆரம்பித்துப் பின்னர் கோப்புக்களை USB Flash Disk இல் நகலெடுக்கலாம். இதைப் பலமுறை வெற்றிகரமாகச் செய்துள்ளேன். நீங்களும் முயன்றுபார்க்கலேமே. --Umapathy 10:08, 1 மே 2007 (UTC)நன்றி உமாபதி. பின்னூட்டம் இடும் வசதி இருக்கிறது. https://www2.blogger.com/comment.g?blogID=5615464&postID=8906134679875312444 இந்த இணைப்பில் ஏதும் தவறிருக்கிறதோ என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.நொப்பிக்ஸ் லினக்ஸ் பற்றிய தகவல்களுக்கும் நன்றி. முயன்று பார்க்கிறேன்.--Chandravathanaa 13:27, 1 மே 2007 (UTC)

அக்கா, தவறு எனது பக்கத்தில் உள்ளது. எனது அலுவல வலையமைப்பில் பிளாகர் தளத்தில் சென்று பின்னூட்டம் செய்யமுடியாதபடி தடைசெய்துள்ளனர். --Umapathy 15:13, 1 மே 2007 (UTC)

மீண்டும் நல்வரவு, நீங்கள் ஈழத்து எழுத்தாளர்கள் கட்டுரையில் தெ. நித்தியகீர்த்தி பற்றி எழுதிய கட்டுரையைத் தனிக் கட்டுரையாக்கியிருக்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --Kanags \பேச்சு 08:55, 15 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி Kanags --Chandravathanaa 21:04, 15 பெப்ரவரி 2008 (UTC)

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]


தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:08, 24 சூன் 2013 (UTC)

சிறப்புக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம் சந்திரவதனா:

விக்கி கட்டுரைகள் பற்றி இதழ்களைத் தொடர்பு கொண்டதற்கு நன்றிகள். அவர்கள் கால எல்லை எதையாவது தந்துள்ளார்களா?

--Natkeeran (பேச்சு) 03:07, 17 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் நற்கீரன்,

காற்றுவெளி ஆசிரியர் இம்மாதம் 29ந்திகதியும், வெற்றிமணி ஆசிரியர் 23ந்திகதியும் காலஎல்லை தந்துள்ளார்கள்.
--Chandravathanaa (பேச்சு) 05:55, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 27 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி செல்வகுருநாதன்!--Chandravathanaa (பேச்சு) 08:49, 27 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)

பாடல்கள்[தொகு]

வணக்கம், ஈழத்து விடுதலை எழுச்சிப் பாடல்களின் வரிகள் உங்களிடம் இருந்தால் அவற்றைத் தனித்தனியாக விக்கிமூலத்தில் சேர்த்து விடுகிறீர்களா? விக்கிப்பீடியாவில் விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் என்ற பொதுவான கட்டுரையில் குறித்த விக்கிமூலப் பகுப்புக்கான தொடுப்பைத் தரலாம். இங்கு பாடல்கள் பற்றி எழுதப்படும் கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். குறித்த பாடல் ஏதாவது ஒரு வகையில் சிறப்புப் பெற்றிருந்தால், ஊடகங்களில் அதனைப் பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தால் குறித்த பாடல் பற்றிய கட்டுரையை மேற்கோள்களுடன் இங்கு எழுதலாம். இல்லாவிடில் விக்கிமூலத்தில் இருப்பதே சிறந்தது.--Kanags \உரையாடுக 22:38, 12 சூலை 2014 (UTC)நல்லது சிறீதரன். நீங்கள் சொன்னதைக் கவனத்தில் கொள்கிறேன்.--Chandravathanaa (பேச்சு) 09:03, 13 சூலை 2014 (UTC)

பெண்ணியம் வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:24, 27 அக்டோபர் 2014 (UTC)

நன்றி Commons sibi
முயற்சிக்கிறேன்.

படிமம்:Sujeethg2014a.jpgஇன் படிம அனுமதியின் சான்றில் சிக்கல்[தொகு]

படிமம்:Sujeethg2014a.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. நீங்கள் இதில் சரியான பதிப்புரிமை வார்ப்புரு இணைத்திருந்தாலும் இக்கோப்பின் ஆக்குனர் இதை இவ்வுரிமத்தின் கீழ் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நீங்கள் இக்கோப்பின் ஆக்குனராக இருந்து, இதை முன்னரே பிற இடங்களில் (குறிப்பாக இது போன்ற இணைய தளங்களில்) வெளியிட்டுருந்தால், தயவு செய்து:

 • இக்கோப்பு வெளியிடப்பட்ட அந்த இடத்தில் இது CC-BY-SA அல்லது அதனை ஒத்த உரிமத்தின்கீழோ பயன்படுத்தலாம் என்பதைக்குறிக்கவும்; அல்லது
 • இதன் பதிப்பிடத்தின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு: இதன் பதிப்புரிமை உங்களது என்றும் இதனை கட்டற்ற உரிமத்தில் வெளியிட அனுமதிப்பதையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்யவும். மாதிரி மின்னஞ்சலை இங்கு காணலாம். இதை நீங்கள் செய்தால் {{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.

நீங்கள் இதனை உருவாக்கவில்லை என்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படிகளில் ஒன்றை கோப்பின் உறிமையாளர் செய்யவோ அல்லது அவர் முன்னரே உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுமதி கொடுத்திருந்தால், அந்த அனுமதி அடங்கிய மின்னஞ்சலை தயவு செய்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.

உயிரோடு இருப்பவர்களின் படங்கள் நியாயப்பயன்பாட்டு விதிகளுக்கு உட்படாது என்பதை நினைவில் கொள்க.

பயன்பாட்டு விதிகளின் கீழ் படிம அனுமதியின் சான்று சரியாக இல்லாதப்படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:48, 10 நவம்பர் 2014 (UTC)

இந்தப் படத்தை சுஜீத்தே எனக்கு அனுப்பினார். --Chandravathanaa (பேச்சு) 21:52, 10 நவம்பர் 2014 (UTC)

மிக்க நல்லது. அவர் பொது உரிமைப்பரப்பில் வெளியிட அனுமதியளித்த அந்த மின்னஞ்சலை permissions-en@wikimedia.org -கு forward (இங்கு காணவும்) செய்யுங்கள். ஒருவேளை அவர் வெளிப்படையாக அப்படி குறிக்கவில்லை எனில் அவரை தொடர்பு கொண்டு flickr போன்ற இணைய தளத்திலோ அல்லது அவரின் சொந்த தளத்திலோ ஏதேனும் ஒரு கட்டற்ற உரிமத்தில் இப்படத்தை வெளியிடுவதை குறிக்க சொல்லுங்கள். மேலதிக உதவி தேவைப்படி கேட்க தயங்க வேண்டாம். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:01, 11 நவம்பர் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
நீண்ட நாள் பங்களிப்பாளரான உங்களை மீண்டும் மீண்டும் விக்கியில் காணும் மகிழ்ச்சியைப் பகிரும் விதமாக இப்பதக்கத்தை அளிக்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 05:58, 22 நவம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Chandravathanaa!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:44, 30 திசம்பர் 2014 (UTC)

உங்களின் இந்த மாத முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 22:33, 14 சனவரி 2015 (UTC)
நன்றி இரவி!

--Chandravathanaa (பேச்சு) 21:19, 15 சனவரி 2015 (UTC)

100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Chandravathanaa!

100 sculpture.jpg

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 12:59, 31 சனவரி 2015 (UTC)


நன்றி இரவி!
100 பயனர்கள 100 தொகுப்புகள் என்பதை நான் பிழையாகவே விளங்கிக் கொண்டிருந்தேன். அதனால்தான் அங்கு நான் எனது பெயரைப் பதியவில்லை. 100 தொகுப்புகள் என்பதை ஏதோ ஒரு சிந்தனையில் 100 கட்டுரைகள் என்றே கருத்தில் எடுத்தேன். ஒரு மாதத்தில் 100 கட்டுரைகள் என்பது என்னால் முடியாத ஒன்று. அதனால் எனக்கிது சரிவராது என்றே நினைத்தேன். ஆனாலும் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்யலாம் என்ற நினைப்பிலேயே பங்களிப்புகளைச் செய்தேன். இதே நேரத்தில் எப்படி ஒவ்வொருவரும் இத்தனை வேகமாக 100 கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்ற ஆச்சரியமான கேள்வியும் எனக்குள் இருந்தது. உங்களது இந்த நன்றியைப் பார்த்த பின்னர்தான்100 பயனர்கள 100 தொகுப்புகள் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டேன். எதுவானாலும் நன்றி!
--Chandravathanaa (பேச்சு) 10:19, 2 பெப்ரவரி 2015 (UTC)

ஆம், வேறு சிலருக்கும் இக்குழப்பம் இருந்தது. அடுத்த முறை தெளிவாக எடுத்துரைப்போம். எல்லாம் நன்மைக்கே :) --இரவி (பேச்சு) 10:41, 2 பெப்ரவரி 2015 (UTC)

ஒளிப்படம்[தொகு]

பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:04, 11 மார்ச் 2015 (UTC)

தற்போது இருக்கும் உங்கள் படத்தைப் பயன்படுத்தி தள அறிமுகத்தில் தங்கள் அறிமுகம் தருவதில் மகிழ்கிறோம். கூடவே, முதற்பக்கத்திலும் தங்களைப் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது.--இரவி (பேச்சு) 06:09, 20 மார்ச் 2015 (UTC)


மிக்க நன்றி இரவி --Chandravathanaa (பேச்சு) 06:21, 20 மார்ச் 2015 (UTC)

உங்கள் பார்வைக்கு[தொகு]

பேச்சு:பெண்கள் சந்திப்பு பார்க்கவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:31, 22 மார்ச் 2015 (UTC)

விடுதலைப் புலியில் இருந்த அனைவரும் குறிப்பிடத் தக்கவர்களா?[தொகு]

பூபாலினி, தியாகராசா பாலசபாபதி, சிட்டு ஆகியோரின் கட்டுரைப் பேச்சுப் பக்கங்களில் தாங்கள் முறையிட்டுள்ளதைப் பார்த்தேன். தற்போது விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை குறித்தான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எண்ணற்ற கட்டுரைகள் பயனற்று இருப்பதால் இவ்வார்ப்புரு இடும் பணி தொடங்கப்பட்டது. இதனை நேர்மறையாக வகையில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கட்டுரையை அழிக்கும் நோக்கத்தில் இவ்வார்ப்புரு இடப்படவில்லை. அக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை நிறுபனம் செய்தால், வார்ப்புருவை எடுத்துவிடலாம். விடுதலைப் புலியில் இருந்த அனைவரையும் குறிப்பிடத்தக்கோர்களாக கருதல் இயலாது. விடுதலைப் புலியில் எவ்வகையில் இவர்களின் பங்களிப்பு இருந்தது என்பது பற்றியும், பரவலாக அறியப்பட்டோரா என்பதைப் பற்றியும் தாங்கள் தான் விக்கி சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் மாற்றுக்கருத்தோ, எண்ணங்களோ இருந்தால் தயங்காமல் உரையாடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:24, 27 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கட்டுரைகளில் நம்பகத் தன்மை குறித்து இணைக்கப்பட்டுள்ள வார்ப்புருக்கள் குறித்து நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் உணர்வுபூர்வமானதாக இருப்பினும், விக்கிக் கொள்கைக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டியவர்களாகின்றோம். பலரும் பயன்பெறும் விக்கியில் எமது விருப்பு வெறுப்புக்களை விடுத்து முறையான கலைக்களஞ்சியம் அமைப்பதே முறையாகும். விரும்பினால் விக்கி மடலூடாக உரையாடுங்கள். --AntonTalk 10:27, 27 மார்ச் 2015 (UTC)

சகோதரன் ஜெகதீஸ்வரன் & Anton உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் நன்றி. இங்கு உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க தன்மை பற்றி விரைவில் தர முயற்சிக்கிறேன். மற்றும் விக்கிமடல் மூலம் தொடர்பு கொள்ளும் படி குறிப்பிட்டுள்ளீர்கள். அது எப்படி என்பது தெரியவில்லை. அதற்கான இணைப்பைத் தருவீர்களா?

நண்பர் ஆன்டன் விக்கிமடல் என மின்னஞ்சலைக் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்தின் இடப்புறம் இப் பயனருக்கு மின்னஞ்சல் செய் என்ற இணைப்பு இருக்கும் அதனைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்து கலந்துரையாடி தக்க தீர்மானம் எடுத்தப் பிறகு விக்கியில் இதுபற்றி குறிப்பிடலாம். சற்று உணர்வுப்பூர்வமான செயல்பாடாக இருப்பதால் ஆன்டன் இதனை முன்மொழிந்திருக்க கூடும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:12, 30 மார்ச் 2015 (UTC)


விளக்கத்துக்கு நன்றி சகோதரன் ஜெகதீஸ்வரன். --Chandravathanaa (பேச்சு) 08:37, 30 ஏப்ரல் 2015 (UTC)

விடுதலை புலிகள்[தொகு]

நன்றி தினேஷ்குமார் பொன்னுசாமி --Chandravathanaa (பேச்சு) 08:27, 2 ஏப்ரல் 2015 (UTC)
ஏற்கெனவே இந்தப் பக்கத்தை அங்கு இணைத்திருக்கிறேன் --Chandravathanaa (பேச்சு) 08:33, 2 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி![தொகு]

இந்தக் கட்டுரைக்கு, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 30 ஏப்ரல் 2015 (UTC)

👍 விருப்பம் --Chandravathanaa (பேச்சு) 08:32, 30 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)

குங்குமம் தோழி இதழில் தங்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது...[தொகு]

விக்கிபீடியா வித்தகிகள்!; வாழ்த்துகள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:57, 19 மே 2015 (UTC)

மிக்க நன்றி செல்வசிவகுருநாதன்! --Chandravathanaa (பேச்சு) 07:42, 20 மே 2015 (UTC)

வாழ்த்துக்கள் சந்திரவதனா.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 20 மே 2015 (UTC)

மிக்க நன்றி சஞ்சீவி! --Chandravathanaa (பேச்சு) 12:09, 20 மே 2015 (UTC)

வாழ்த்துக்கள் -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:38, 17 நவம்பர் 2015 (UTC)

நன்றி சகோதரன் ஜெகதீஸ்வரன்!--Chandravathanaa (பேச்சு) 14:54, 17 நவம்பர் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:05, 8 சூலை 2015 (UTC)


அழைப்புக்கு நன்றி -Kanags.

வரும் ஓகஸ்ட் 7ந் திகதி மகனுக்குத் திருமணம். அதற்கான ஆயத்தங்களில் நான் இருப்பதால் தற்போது ஒரு மாத காலமாகவே என்னால் எந்தப் பங்களிப்பையும் செய்ய முடியாதிருந்தது. தொடர்ந்தும் ஓகஸ்ட் 21வரை பங்களிப்புக்கான சாத்தியங்கள் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் அந்த ஜூலை, 19 இல் 24 மணித்தியாலங்களும் முடியா விட்டாலும், முடிந்தளவைச் செய்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 17:43, 9 சூலை 2015 (UTC)

தங்களின் மகனுக்கு எங்களின் உளங்கனிந்த வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:38, 10 சூலை 2015 (UTC)

நன்றி மா. செல்வசிவகுருநாதன் --Chandravathanaa (பேச்சு) 20:21, 11 சூலை 2015 (UTC)

உளங்கனிந்த நன்றி![தொகு]

Diwali Diya.jpg

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:18, 25 சூலை 2015 (UTC)
மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் --Chandravathanaa (பேச்சு) 06:31, 30 சூலை 2015 (UTC)

ஆசிய மாதம், 2015[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
 • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

கருத்துக்கள்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா தனிப்பட்ட ஆய்யவாக இருக்கக்கூடாது என்பதையும் மெய்யறிதன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையும் அறிவீர்கள். ஆகவே கட்டுரைகளை இதற்கேற்ப எழுதுங்கள். மனிதர்களின் வாழ்க்கை பற்றி எழுதும்போது குறிப்பிடத்தக்கவர் என்பதற்கேற்ப எழுதப்பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள். இக் கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பதற்கு உட்படாத கட்டுரைகள் நீக்கப்படலாம். http://www.vallamai.com/ போன்ற தளங்கள் இரண்டாந்தர மூலமல்ல. இவற்றை சிக்கலான கட்டுரைகளுக்கு ஆதாரமாகக் கொள்ளலாகாது. நன்றி. --AntanO 04:32, 9 நவம்பர் 2015 (UTC)
நன்றி Antan. கவனிக்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 08:50, 9 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - முதல் வாரம்[தொகு]

Asia (orthographic projection).svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

 • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
 • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
 • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
 2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)

வாக்கிடுக[தொகு]

விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் என்பதில், உங்கள் வாக்கினை பதிவு செய்யக்கோருகிறேன். --உழவன் (உரை) 10:49, 30 நவம்பர் 2015 (UTC)

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்[தொகு]

Asia medal.svg விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:01, 25 திசம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - நிறைவு[தொகு]

WikipediaAsianMonth-en.svg

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:22, 13 சனவரி 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:53, 26 சூலை 2016 (UTC)

அழைப்புக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன்
மருத்துவரின் அறிவுறுத்தலின் படி கண்களுக்கு கட்டாய ஓய்வு தேவைப்படுவதால், தொடரும் சில மாதங்களுக்கு என்னால் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 08:51, 1 ஆகத்து 2016 (UTC)

உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்; விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:04, 1 ஆகத்து 2016 (UTC)


நன்றி செல்வசிவகுருநாதன் --Chandravathanaa (பேச்சு) 07:12, 25 ஆகத்து 2016 (UTC)

ழகரம் (கனடா இதழ்)[தொகு]

வணக்கம்! தாங்கள் புதிதாக ஆரம்பித்த இந்தக் கட்டுரையில் குறைந்தது ஒரு ஆதாரமாவது குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:07, 18 செப்டம்பர் 2016 (UTC)

என்னால் கண்டறியப்பட்ட ஆதாரம் ஒன்றினை இணைத்துள்ளேன். எனினும் கட்டுரையில் விரிவாக்கம் தேவைப்படுகிறது. உரியன செய்த பிறகு "வேலை நடக்கிறது" வார்ப்புருவை நீக்கி விடுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:30, 18 செப்டம்பர் 2016 (UTC)

வணக்கம்! மா. செல்வசிவகுருநாதன். விரைவில் செயற்படுகிறேன். நன்றி. --Chandravathanaa (பேச்சு) 10:07, 19 செப்டம்பர் 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:29, 7 சூன் 2017 (UTC)

ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:27, 14 நவம்பர் 2017 (UTC)

அழைப்புக்கு மிக்க நன்றி தினேஷ்குமார். நேரம் கைகூடி வருமா என்பது தெரியவில்லை. முயற்சிக்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 08:39, 19 நவம்பர் 2017 (UTC)

BLP for Prof. dr. Igor Janev[தொகு]

Dear admin. Chandravathanaa, maybe a good idea is to create BLP for dr. Igor Janev (https://www.wikidata.org/wiki/Q1449737) creator of the strategy of Macedonian recognition in the United Nations under its Constututional name Republic od Macedonia. Under that strategy more than 130 member-states of UN had recognized Republic of Macedonia under its Constitutional name Republic of Macedonia! It is of the importance for understanding of the current policies of global recognition of Macedonian Name conducted by the Government of the Republic of Macedonia and its President. Shortly, Igor Janev was born 29. September, 1964, Belgrade, Serbia. He holds Ph.D at the Faculty of Law, Skopje University (Doctoral studies: University of Skopje, Macedonia 1991-1994 Faculty of Law). He finished Postdoctoral studies at: 1)University of Virginia, Charlottesville, USA Department of Government and Foreign Affairs (Sept. 1994 – June 1995),2)Georgetown University, Washington D.C., USA, School of Foreign Service (June 1995 – Sept. 1995),3)Taft University, Medford, Mass., USA, Fletcher School of Law and Diplomacy (Oct. 1995 – June 1996). Dr. Igor Janev Research Positions includes: 1. Scientific Collaborator, Institute of Political Studies, Belgrade (2000 - 2004),2. Senior Scientific Researcher, Institute of Political Studies, Belgrade (2005 -2009), 3. Scientific Advisor-Full Professor, Institute of Political Studies, Belgrade (2009 -present). Igor Janev was a Special advisor to the Minister of Foreign Affairs of the Republic of Macedonia 2002. Prof. Igor Janev became famous for his Article: “Legal Aspects of Provisional Name for Macedonia in the UN”, American Journal of International Law, Vol. 93, No. 1, pp.155-160 (1999) and later as the strategist of Macedonian recognition under its constitutional name.77.46.190.192 15:15, 5 திசம்பர் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள சந்திரவதனா, உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:41, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:48, 13 மார்ச் 2018 (UTC)

உங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி இரவி!

இதன் அவசியத்தையும் உணர்வேன். ஆனாலும் நேரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. இருந்தாலும் என்னாலானதை எழுத முயற்சிக்கிறேன்
--Chandravathanaa (பேச்சு) 08:43, 14 மார்ச் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

அழைப்புக்கு நன்றி நந்தினி
என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.
--Chandravathanaa (பேச்சு) 07:37, 6 அக்டோபர் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:43, 2 நவம்பர் 2018 (UTC)

வரவேற்புக் குழுமம்[தொகு]

ஒரு புதுப் பயனர் இணையும் போது வரவேற்புக் குழுமம் தானியங்கியாக வரவேற்பு வார்ப்புருவை அவரது பயனர் பேச்சுப் பக்கத்தில் இடுகிறது. இக்குழுமத்தில் உங்கள் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. தானியங்கி random ஆக ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கிறது.--Kanags \உரையாடுக 08:36, 23 ஆகத்து 2019 (UTC)


விளக்கத்துக்கு மிக்க நன்றி Kanags
--Chandravathanaa (பேச்சு) 07:21, 25 ஆகத்து 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:49, 17 சனவரி 2020 (UTC)

அழைப்புக்கு நன்றி பார்வதி
--Chandravathanaa (பேச்சு) 07:49, 22 சனவரி 2020 (UTC)

{{{YGM}}} Shobha (WMF) (பேச்சு) 07:26, 27 மார்ச் 2020 (UTC) Shobha (WMF)

Mail-message-new.svg
வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்!
நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!Shobha (WMF) (பேச்சு) 07:30, 27 மார்ச் 2020 (UTC) Shobha (WMF)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chandravathanaa&oldid=2939824" இருந்து மீள்விக்கப்பட்டது