சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேஜர் சிட்டு
Siddu2222.jpg
மேஜர் சிட்டு
பிறப்புமருதங்கேணி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஆவணி 1, 1997
தேசியம்ஈழத்தமிழர்
பணிபுலிகளின் போராளி. கலைஞர்
மேஜர் சிட்டு

மேஜர் சிட்டு ([இறப்பு:ஆவணி 1, 1997) விடுதலைப் புலிகளின் இசைக் கலைஞர். போராளி.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் மருதங்கேணி,வடமராட்சிக்கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மெல்லிசைப்பாடகர் கே. எஸ். பாலச்சந்திரனின் இளைய சகோதரன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' என்ற பாடல் இவர் முதலில் பெயர் பெறக் காரணமாக அமைந்தது. இப்பாடலை மேஜர் செங்கதிர் எழுதியிருந்தார்.[1] தொடர்ந்த காலங்களில் கேணல் கிட்டுவின் நினைவாக அவசரமாக உருவாக்கப்பட்டு, இரு நாட்களுள் வெளிவந்த பாடலான 'கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா' என்ற பாடல் மூலம் இவர் பிரபலமானார். குரல் வளத்தினால் புகழ்பெற்றார். தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட உயிர்ப்பூ திரைப்படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்' என்ற பாடலும் இவருக்கு புகழ் பெற்றுத் தந்தது. இவர் 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' பாடலில் தொடங்கி 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' பாடல்கள் வரை 75 பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆவணி 1, 1997 இல் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2]

இவர் பாடிய பாடல்களில் சில[தொகு]

  • கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
  • சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்..
  • சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://thesakkatru.com/doc3166.html
  2. http://www.tamilwin.com/show-RUmqyITViFSUn.html