விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கருநாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் எனப்படுபவை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். இவற்றை இயக்கப் பாடல்கள் அல்லது மாவீரர்கள் பாடல்கள் அல்லது எழுச்சிப் பாடல்கள் என்றும் குறிப்பிடலாம். ஈழநாட்டை, ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளை, பிரச்சினைகளை, போராட்டத்தை, போராளிகளை, தலைமையை பொருளாகக் கொண்டு தனித்தன்மையோடு இப்பாடல்கள் அமைந்திருக்கும். இந்தப் பாட்டுக்கள் இளைஞர்களை, மக்களை புலிகளின் குறிக்கோள்களுடன் இணைந்து செயற்பட உந்தும் கருவியாக, உணர்ச்சியூட்டும் கருவியாக இருந்து வருகின்றன.

வரலாறு[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்பாடல்களை புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் போன்ற ஈழத்துக் கவிஞர்களும், கவிஞர் இன்குலாப் போன்ற தமிழகத்துக் கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா போன்ற முதன்மை இசைக்கலைஞர்கள் பாடல்களைப் பாடியிருந்தார்கள். எல். வைத்தியநாதன் பல பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். இந்தியஇராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்திலும் தமிழகத்திலிருந்து பாடல்கள் வந்து கொண்டிருந்தன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான் ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்யப்பட வேண்டிய நிலையில் இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுக்கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில் மட்டக்களப்பில் போராளிகளைக் கொண்டு ஒரு இசைக்குழு தொடங்கப் பெற்றது. அக்குழு மிகப்பெரிய அளவில் வளர்ந்து ஏராளமான பாடல்களை போராட்டக்காலங்களில் உருவாக்கியது.

வெளியீடுகள்[தொகு]

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது இசைநாடா 'புலிகள் பாடல்கள்'.

ஈழப்போர் பாட்டுக்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]