போர் உலா (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர் உலா விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கப்டன் மலரவன் (லியோ, காசிலிங்கம் விஜித்தன்) என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள் அடங்கிய ஒரு நாவல் ஆகும். இந் நாவல் 1990 இல் இடம் பெற்ற மாங்குளம் இராணுமுகாம் மீதான தாக்குதலின் அனுபவத்தையும், அந்த நேரத்தில் நடந்த களச்சூழலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால் War Journey என்ற பெயரில் வெளியானது.[1] தமிழில் ஐந்து தடவைகள் மீள்பதிப்பு செய்யப்பட்டது. போர் உலா இலங்கை இலக்கியப் பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான இலக்கியத் தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந் நூலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பின்னால் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடுகள், தாக்குதல் தொடர்பான தெளிவான விபரங்கள், போரில் ஏற்பட்ட தாங்க முடியாத இழப்புக்கள், போரில் சந்தித்த கடினங்கள், தமிழ் மக்களுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.amazon.de/War-Journey-Malaravan/dp/0143417363
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_உலா_(நாவல்)&oldid=1852313" இலிருந்து மீள்விக்கப்பட்டது